Naam Iruvar Namakku Iruvar Serial: தேவி ரவுடி ரங்கம்மாவா? ஹைய்யோ...!
சென்னை:விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், ஆர்.ஜெ.செந்திலின் காமெடி நடிப்புக்காகவே மக்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறது.
செந்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மாயனாக ஒன்று, டாக்டர் அரவிந்த ஒன்று. என்று இரட்டை வேடங்களில் நன்றாகவே வித்தியாசம் காண்பிக்கும் படி நடித்து இருக்கார்.
கதைப்படி இவர்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள்.மாயன் பெற்றவர்களிடமும், டாக்டர் அரவிந்த் பெற்றவரின் நண்பரிடமும் வளர்கிறார்கள்.

அரவிந்த் மாயன்
டாக்டர் அரவிந்த் படித்த தேவியை கல்யாணம் செய்துக்க இருக்க, படிக்காத மாயன்,படிக்காத தாமரையை கல்யாணம் செய்துக்கறதுன்னு முடிவாகிறது. இவர்கள் எப்படி அண்ணன் தம்பிகளே, அதே போல இவர்களுக்கு பார்த்த பொண்ணுங்களும் ஒரு அப்பா,இரண்டு அம்மக்களுக்கு பிறந்த அக்கா தங்கைகள்.

பொண்ணு மாறிப் போச்சு
கல்யாணத்தில் மாயன் தேவியைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்பட, அவன் மாதிரி வேஷம் போட்டு, தேவியின் கழுத்தில் தாலி கட்டிடறான். ஆனால், டாக்டர் அரவிந்தை மிரட்டி பணிய வச்சு தாமரையை கல்யாணம் செய்து வைக்கறாங்க. அதனால் இரு தம்பதியும் இன்னும் ஒண்ணு சேரலை.

நெருக்கம் அதிகமானதால்
நெருக்கம் அதிகமானதால், விவாகரத்து வேண்டாம் என்று முடிவெடுத்து பின்னர் தாமரையை விவாகரத்து செய்து விடுகிறான் டாக்டர் அரவிந்த் .. அதற்கு முன்னர் தாமரையின் சின்ன சின்ன ஆசைகள் என்று மாடர்ன் டிரஸ் போடுவது, போட்டோ எடுத்துக் கொள்வது என்கிற சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறான்.

மாயனும் அரவிந்த்
அரவிந்த் போல மாயனும் தனது மனைவி தேவியின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேத்தி வைக்கணும்னு ஆசைப்பட்டு, அவளையே விடாமல் துரத்தி கேட்கிறான். அவள் உன்னை மாதிரி ஒரு வாரத்துக்கு ரவுடியாக வாழணும்னு ஆசைடான்னு சொல்ல, அதே போல அவளுக்கு செட்டப்பை மாத்தி கெட்டப்பை மாத்தி ரவுடி ரங்கம்மான்னு பேரையும் வச்சுட்டு மார்க்கெட்டுக்கு அழைச்சுட்டு போறாங்க.

போலீசை மிரட்டுவது
கடைத்தெருவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் போயி, அங்கு எல்லாரையும் அடிப்பது, மிரட்டுவது, எதையாவது தூக்கிப் போட்டு உடைக்கிறது, செக் போஸ்டை உடைச்சுக்கிட்டு போயி, போலீசை பயமுறுத்துவது என்று ஒரே நளில் போட்டு ஆட்டத்தை கண்டு மயங்கி நிற்கிறார்கள் மாயனும், அவன் ரைட்டும்.
அதனால் ,நல்ல காமெடி கதை என்று நம்பி சீரியலை பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications