Naam iruvar namakku iruvar serial: நாம் இருவர் நமக்கு இருவர் இடத்தில் தேன் மொழி பிஏ வா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன், அரவிந்த் ஆகிய இருவரின் வாழ்க்கையும் இப்போது கிளைமேக்சில் இருக்கிறது.
மாயன், அரவிந்த் இருவரும் இரட்டைப் பிறவிகள்.. இவர்களில் மாயன் பெற்றவர்களான குஸ்தி வாத்தியார், செல்வியிடம் வளர்கிறான். ஆனால், படிக்கவில்லை.
மாயனுடன் ஓட்டிப் பிறந்த அரவிந்த், குஸ்தி வாத்தியாரின் நண்பர் வீட்டிலல் அவர்கள் பிள்ளையாக வளர்கிறான்.வளர்ந்து படித்து டாக்டருக்கும் படித்து, பிரபல ஸ்பெஷலிஸ்ட் ஆகிடறான்.

தாமரை அரவிந்த்
அரவிந்த் ,தாமரை ,கல்யாணமும் கத்தி முனையில் அரவிந்தை மிரட்டித்தான் நடந்தது. இதனால், அரவிந்தும் தாமரையை பிடிக்கவில்லை. அர்த்தவிந்த் காதலித்தது தேவியை. ஆனால், தேவியை அரவிந்த் வேஷத்தில் காதலிச்சு கல்யாணமும் செய்துகொண்டான் மாயன். இதனால், கல்யாணமாகி ஒரு வருடமாகியும் இரு தம்பதிக்குள்ளும் எந்த ஒரு நெருக்கமும் இல்லை.

முதல் திருமண நாளை
இதைத் தெரிந்து கொண்ட மாயனின் தந்தையும், அரவிந்தின் தந்தையும், இருவரின் கல்யாண நாளையும் சிறப்பாக கொண்டாடி, அவர்களை நெருக்கத்துக்கு வர வைக்க வேண்டும் என்று எண்ணி ஏற்பாடு செய்கிறார்கள். தேவிக்கு இஷ்டமில்லை, அரவிந்த் அம்மாவுக்கு தாமரையை சுத்தமாக பிடிக்கவில்லை.இதனால், இருவரும் விலகியே இருக்கிறார்கள்.

தேவி மாயன்
மாயனும் தேவியும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.அதே போல, அரவிந்தும், தாமரையும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். அரவிந்தும் தாமரையும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்யும்போது, அரவிந்தின் அம்மாவுக்கு தாமரையை பிடிக்கவில்லை என்று விஷம் சாப்பிட்டு விடுகிறார்கள். இதனால் நொந்து போன டாக்டர் அரவிந்த், அம்மாவை காப்பாத்திட்டு, தாமரையை பிரிந்து விடலாம் என்று முடிவெடுக்கிறான்.

ஆசையை நிறைவேற்றுதல்
பிரிவு உபச்சார விழா என்று மாயன் விழா ஏற்பாடு செய்து, ஒவ்வொருவரையும் பேச அழைக்கிறான். தேவி வீட்டில் இத்தோடு இவன் ஒழிந்தால் சரி என்று வருகிறார்கள். இங்கு தாமரைக்கு என்ன ஆசை இருக்கிறது என்று கேட்டு ,அவள் சொல்லும் ஒவ்வொரு ஆசையாக நிறைவேத்தி வைக்கிறான் அரவிந்த். முதலில் மாடர்ன் டிரஸ் போட்டு பார்க்கணும், அடுத்து போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடுத்து வீட்டில் மாட்டணும், பீச்சுக்கு போகணும் இப்படி.
இதனால், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விரைவில் முடிந்து அந்த இடத்தை தேன்மொழி பிஏ பிடித்துவிடும் என்று எண்ண தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications