Naam Iruvar Namakku Iruvar Serial: ஆமா நான் ரவுடிதானே.. எனக்கு யாரு நைட்டி மாட்டி விட்டா..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் மனைவி தேவி ரவுடி ரெங்கம்மாவாக நடிக்கணும்னு ஆசைப்பட்டு ரொம்ப காமெடியா எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது.

நீண்ட தலைமுடி பின்னல் என்ன... கூலிங் கிளாஸ் என்ன, முந்தானையை தோளில் போட்டுக் கொண்டு தலை நிறைய மல்லிப்பூவை வச்சுக்கிட்டு டங்கு டங்குன்னு நடக்கறதுன்னு தேவி நடிப்பில் அசத்தறாங்க.

சம்பவம் செய்யணும்னு ரைட்டு சொல்ல, அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் ஸ்டேஷனில் கேட்பார் இந்த சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அது என்னங்கன்னு.. அது மாதிரி தேவி கேள்வி கேட்கிறார்.

ஜூஸுக்கு பதிலா சரக்கு

ஜூஸுக்கு பதிலா சரக்கு

தனது மாமா நடத்தும் டாஸ்மாக் கடையில் போயி ஒரு அலப்பறை பண்ணலாம் வாடான்னு தேவி கூப்பிட, மாயனும், அவனது கூட்டாளி ரைட்டும் கூட போறாங்க. மாயன் கேட்கிறான்.. ஏங்க நிசமாவே குடிக்க போறீங்களான்னு. டேய்.. என்ன லந்தா. ஜூஸ் சொல்லு. அதையே குடிச்ச மாதிரி நடிக்க எனக்குத் தெரியும்னு.

தேவி ஜூஸ்

தேவி ஜூஸ்

மாயன் தனக்கு சரக்கு சொல்லிக்கிட்டு, தேவிக்கு ஜூஸ் சொல்ல, கிளாஸ் மாறிப்போச்சு. மாயனுக்கு போதை ஏறவே இல்லை,தேவிக்கு கன்னா பின்னான்னு போதையாகிப் போச்சு. அங்கே ரகளை பண்ணியவளை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வரத்துக்குள்ளே மாயனுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது.

அம்மா பாப்பா

அம்மா பாப்பா

எனக்கு கை பரப்பரங்குதுடா... இந்த சொட்டப்பாவை கூப்பிடு.. அவனை ஓங்கி அறை விடணும்னு கூப்பிட, அவரும் என்னத்தா இப்படி கத்தறேன்னு கேட்டுகிட்டே வர்றார். ஐயோ கத்தாதே சித்தப்பு .. இப்போ தேவி ரவுடி ரெங்கம்மாவா வந்திருக்குனு சொல்றான் மாயன். அதோ அங்கே நிக்கற பாப்பா யாருன்னு தேவி கேட்க, அது உங்க அம்மா அக்கான்னு சொல்றான். ஓ..அம்மா பாப்பாவா? அம்மா பாப்பா.. உன் அண்ணன் கன்னத்துல பளார்னு அடின்னு சொல்றா.

பொளேர் பொளேர்

பொளேர் பொளேர்

அவங்க சும்மா தடவி குடுப்பது போல அடிக்க, என்ன அம்மா பாப்பா நீ சரியில்லை சொட்டப்பா நீ கிட்டே வான்னு சொல்லி சும்மா பொளேர் பொளேர்னு நாலு அறை விட, சித்தப்பா கன்னத்தை மூடிக்கிறார். அம்மா பாப்பாவை நாலு திட்டு திட்டிவிட்டு, குத்தாட்டம் போட்டுவிட்டு மயங்கி விழுந்துடறா.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

தேவி ஹேங் ஓவரில் இருக்க, மாயன் பொண்டாட்டிக்கு பால் குடுக்க வருவாங்க. நான் ஜூஸ் பிழுஞ்சு குடுக்கறேன்னு சொல்லிகிட்டே அவளிடம் குடுக்கறான்.டேய் என்னடா ஆச்சுன்னு கேட்க,கிளாஸ் மாறிப்போச்சுங்க. இருந்தாலும் கப்பு கப்புன்னு அடிச்சுட்டீங்க.எனக்கு நாலு கிளாஸ் அடிச்சும் போதை ஏறலை.அப்போதான் ஜூஸு குடிக்கறேன்னு தெரிஞ்சுதுன்னு சொல்றான்.

போதையில் திட்டிட்டேனடா

போதையில் திட்டிட்டேனடா

போதையில் யாரையாவது திட்டிட்டேனடான்னு கேட்க , திட்டி இருந்தால் பரவால்லிங்க...செம அடி அடிச்சுப்புட்டீங்கன்னு சொல்றான்.அம்மாவை திட்டலையேன்னு கேட்க, அம்மாவைத் தவிர யாரையும் திட்டலைங்கன்னு சொல்றான் மாயன்.அவன் கிளம்ப..ஏய் இங்கே வா.. நான் ரவுடி கெட்டப்பில்தானே இருந்தேன். எப்படி நைட்டிக்கு மாறினேன்னு தேவி கேட்க,

அது..அது..தெரியலீங்க! பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னான்ன்னு கேட்கற மாதிரி, நைட்டி மாறியது எப்படின்னு சஸ்பென்சுங்கன்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே ஓடிடறான் மாயன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+