நாகார்ஜுனாவின் இளைய மகன் அகிலின் காதலி, அவரை விட இத்தனை வயது பெரியவரா?
சென்னை: நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகனான அகில் அக்கினேனி தன்னுடைய காதலியை நேற்று அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாச தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் சில நாட்களாகவே நடிகர் நாக அர்ஜுனாவின் குடும்ப விஷயங்கள் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்த சமந்தாவை பிரிந்து இருந்தார். அதற்கு பிறகு சோபிதாவை தான் திருமணம் செய்யப் போவதாக அறிவுத்திருந்தார். இன்னும் ஒரு சில நாட்களில் இவர்களுடைய திருமணமும் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் நாகர்ஜுனாவின் குடும்பத்தில் அடுத்த திருமணமும் நடைபெற இருக்கிறது. அதாவது நாகர்ஜுனாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி. அவரை விவாகரத்து செய்து பிரித்த பிறகு நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன் அதில் லட்சுமிக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா.
அதுபோல அமலாவுக்கு பிறந்தவர் தான் அகில். நாக அர்ஜுனாவை போல அவருடைய மகன்களும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். நாக அர்ஜூனா நேற்று மாலை தன்னுடைய இரண்டாவது மகன் அகில் அக்கினேனி திருமணம் பற்றி அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அகில் ஜைனப் ரவ்ஜீ என்பவரை காதலிப்பதாகவும் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் அகிலுக்கு தற்போது 30 வயது ஆகிறது. அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்று இருக்கிறது.

அதுபோல அகில் காதலி ஜைனப் ஒரு இஸ்லாமிய பெண். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் தான். ஓவியக் கலைஞரான ஜைனப் ரவ்ஜீயும் அகிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
அதுபோல அகிலை விட அவருடைய காதலி ஜைனப் வயதில் மூத்தவர். அகில் அக்கினேனிக்கு தற்போது 30 வயது தான் ஆகிறது. ஆனால் அவருடைய காதலி ஜைனப்க்கு 39 வயது ஆகிறதாம். அகிலை விட அவருடைய காதலி 9 வயது மூத்தவராம். இவர்களுடைய திருமணம் அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறதாம்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications