எளிமையாக நடந்த நாகார்ஜுனாவின் 2வது மகன் அகில் திருமணம்.. அதுவும் இப்படி ஒரு ஏற்பாடா? வெளியான போட்டோஸ்
சென்னை: நடிகர் நாகார்ஜுனா- நடிகை அமலா தம்பதியின் ஒரே மகனான அகில் அக்கினேனி திருமணம் இன்று ஹைதராபாத்தில் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அகில் அக்கினேனி பிரபல தொழிலதிபர் ரவ்ட்ஜியின் மகள் ஜைனம் ரவ்ட்ஜியை திருமணம் செய்து இருக்கிறார்.
நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதியின் மகனான அகிலுக்கு கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை ஜூன் 6ஆம் தேதி அகில் மற்றும் அவருடைய காதலி ஜைனம் இருவருக்கும் எளிமையாக திருமணம் நடந்திருக்கிறது. அதுவும் நாகார்ஜுனாவின் ஜுப்ளி ஹில்ஸில் உள்ள புதிய வீட்டில் தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

நாகார்ஜுனா இரண்டாவது மகன் திருமணம்
அகிலுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய திருமணத்தில் எந்த ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதுபோல நாகார்ஜுனா தன்னுடைய மகன் அகில் திருமணத்தை தனிப்பட்ட முறையில் தான் நடத்தி இருக்கிறார். அதில் நடிகர் சிரஞ்சீவி, சுரேஷ், ராம்சரண், உபாசனா வெங்கடேசா, சுரேஷ் பாபு போன்ற ஒரு சிலர் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அகில் திருமண புகைப்படங்கள்
அகில் மற்றும் ஜைனப் இருவரும் மணக்கோலத்தில் திருமண மேடையில் இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. ஆனால் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை நாகார்ஜுனா குடும்பத்தினர் இன்னும் வெளியிடவில்லை. அகில் ரிசப்ஷன் வரும் ஜூன் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
நடிகர் அகில்- ஜைனப் ரிசப்ஷன்
நடிகர் அகில் ரிசப்ஷனில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர்கள் உட்பட திரைப்பட பிரமுகர்களும், நடிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகில் திருமணத்திற்கு முந்தைய பங்க்ஷன்களும் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அப்போது நாக சைதன்யா, சோபிதா துலிபாலா உட்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி இருந்தனர். அந்த வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications