வீட்டுக்குள்ளே பணத்தால் பாகுபாடு.. பிரபுதேவா பொண்ணு வந்த பிறகு எல்லாமே மாறிப்போச்சு! நாகேந்திர பிரசாத் உருக்கம்
சென்னை: இந்திய சினிமாவில் நடன உலகை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் பிரபுதேவாவும் ஒருவர். அவருடன் சேர்ந்து பல வருடங்களாக நடன துறையில் தனி அடையாளம் உருவாக்கியவர் அண்ணன் ராஜு சுந்தரம். இந்த இரண்டு பெரிய பெயர்களுக்கிடையில் தம்பியாக இருப்பது எவ்வளவு பெருமை கொடுக்கும் என்பதற்கும், அதே நேரத்தில் ஒரு அமைதியான அழுத்தத்தையும் தரும் என்பதற்கும் உதாரணம் தான் நாகேந்திர பிரசாத். இவர் பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நாகேந்திர பிரசாத் அளித்த பேட்டியில் சொன்ன சில வார்த்தைகள், சினிமா வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. வெளியில் பார்க்கும் போது ஒரே குடும்பத்தில் மூன்று நடன கலைஞர்கள் - வெற்றி, பெயர், மரியாதை என்று தெரிந்தாலும், அந்த வீட்டுக்குள்ளேயே இருந்த மனநிலையை அவர் ஓபனாக பகிர்ந்தார்.

பணத்தின் மதிப்பு
நாகேந்தர பிரசாத் பேசும்போது, "பணம் ரொம்ப தேவை. வீட்டில் யார் அதிகம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுடைய பேச்சுதான் கேட்கப்படும். எங்க அம்மா கூட அண்ணன்களின் பேச்சையே கேட்பார். அது தவறா சரியா எனக்கு தெரியாது... ஆனா வீட்டுக்குள்ளேயே ஒரு வித்தியாசம் இருக்கும்" என்ற அவர் சொன்ன வரிகள், குடும்பங்களுக்குள் பேசப்படாத உண்மையை எளிதாகச் சொல்லிவிட்டது.
பிரபுதேவா மிகவும் சிறிய வயதிலேயே வேலைக்குச் சென்று குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டது பற்றியும் அவர் குறிப்பிட்டார். "பிரபு அண்ணே 14 வயசுலேயே வெளியே போயிட்டாரு. அவர் வீட்டுக்கு வந்தாலே ஒரு மரியாதை இருக்கும்" என்றார்.
மேலும், சினிமாவில் நல்ல ஆரம்பம் இருந்தும், நடுவில் எனக்கு ஏற்பட்ட இடைவெளி தான் இன்னும் வருத்தமாக இருக்கிறது, "அந்த கேப்ல தான் எல்லாரும் முன்னாடி போயிட்டாங்க. ஆர்யா, ஜீவா மாதிரி பல பேரு வந்துட்டாங்க. நான் விட்டுட்டேன்னு ஃபீல் இப்பவும் இருக்கு" என்று சொன்னது, ஒரு கலைஞனின் உள்ளுக்குள் இருக்கும் ஏக்கத்தை வெளிப்படுத்தியது.
அந்த இடைவெளியில் வெளிநாட்டில் இருந்து, கொரியோகிராபியில் மேஸ்டர்ஸ் படித்தது, கொலம்பியா பிக்சர்ஸில் லொக்கேஷன் மேனேஜராக வேலை பார்த்தது... இவை எல்லாம் அவருடைய பயணத்தின் வேறு பக்கங்கள். ஆனால் அந்த காலத்தில்தான் தமிழ்சினிமாவில் தன்னை "பில்லிங்" இழந்துவிட்டேன் என்ற உணர்வு அவரிடம் இருக்கிறது.
பின்னர் தந்தை எம். சுந்தரம் மாஸ்டர் பெயரில் டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்தது தான் மீண்டும் தன்னை ஆக்டிவாக மாற்றியது என்றும் அவர் கூறினார். தற்போது அந்த பள்ளியையும் நடத்தி வருகிறார்; அவ்வப்போது சினிமா வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம்.
பெண் குழந்தை
இந்த பேட்டியில் உன்னுடைய அண்ணன் அண்ணா பிரபுதேவாவின் பெண் குழந்தை பற்றி இவன் பேசி இருந்தார். அதில் "எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ஆண் குழந்தைதான். முதல் முறையாக பிரபு அண்ணாவுக்கு பொண்ணு பிறந்த பிறகு தான் ஒரு பாண்டிங் வந்தது. அதற்கு முன்னாடி எல்லாரும் தனித்தனியா இருந்தோம்.
இப்போ அந்த பொண்ணுக்காக இதை செய்யணும், அதை செய்யணும் என்று எல்லாரும் சேர்ந்து யோசிக்கிறோம். கண்டிப்பா போய் அவளை பார்க்கணும் என்று நினைக்கிறோம். எங்களுக்குள் பந்தம் உருவாக்கியது அந்த குழந்தை தான்" என்று அவர் சொன்னது, அந்த குடும்பத்தின் மாறிய மனநிலையை காட்டியது.
ஒரு குழந்தை வந்த பிறகு பொறுப்பு எப்படி மனிதர்களை மீண்டும் சேர்க்கிறது என்பதற்கான ஒரு சாதாரணமான, ஆனால் மிகவும் உண்மையான அனுபவம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா வாழ்க்கை
'தொட்டாச்சிணுங்கி' படத்தில் அறிமுகமான நாகேந்திர பிரசாத், குஷி, கில்லி, 'சாக்லேட்', 'மனசெல்லாம் நீனே', 'முத்தம்', '123' போன்ற படங்களில் நடித்தவர். நல்ல நடிப்பு திறமையுடன் இருந்தும், நீண்ட இடைவெளி காரணமாக அந்த வேகம் தொடரவில்லை.
13 ஆண்டுகள் கழித்து போகன் மூலம் திரும்பி வந்தார். கடைசியாக 'பேட்டரி' படத்தில் நடித்தார். பிரபுதேவா இந்திய அளவில் டான்ஸ் ஐகானாக உயர்ந்தவர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் வெற்றி பெற்றார். ராஜு சுந்தரம் முன்னணி நடன இயக்குநராக தனி பாதையை உருவாக்கினார். அந்த இரண்டு பேரின் தம்பியாக இருப்பது ஒரு பெருமைதான் - ஆனால் அதே நேரத்தில் ஒப்பீடும் தவிர்க்க முடியாதது.
அதை நாகேந்திர பிரசாத் மிகவும் அமைதியாக ஏற்றுக்கொண்டு பேசினார். "அவர்களைப் போல வர முடியல" என்ற வருத்தம் இருந்தாலும், அதில் போட்டி இல்லை என்பது ஒரு உண்மையான ஒப்புதல் மட்டும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications