பாட்டி பாசம் அளவில்லாதது.. சினேகன் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சிய நடிகை நளினி! நெகிழ்ந்த கன்னிகா! குவியும் பாராட்டு
சென்னை: கவிஞரும் நடிகருமான சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதியருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பிரபல நடிகை நளினி நேரில் சென்று குழந்தைகளைப் பார்த்து, அவர்களைக் கொஞ்சி மகிழ்ந்திருக்கிறார். இந்த உணர்வுபூர்வமான சந்திப்பு குறித்த வீடியோவை கன்னிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நளினியின் பாசம்
குழந்தைகளைப் பார்க்க வந்த நடிகை நளினி, "ஒரு பாட்டியாக மனம் மகிழ்ந்து," குழந்தைகளை அள்ளி எடுத்து கொஞ்சியிருக்கிறார். "அன்பான பாட்டியின் பாசத்துக்கு நன்றி" என்று கன்னிகா இந்த வீடியோவைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை நளினிக்கு பல வருடங்களாக நட்பு இருக்கிறது கன்னிகா சினேகன் திருமணமான சமயத்தில் நடிகை நளினி அவர்களோடு சில கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது எடுத்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது.
சினேகன் - கன்னிகாவின் காதல்
கவிஞர் சினேகன், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு, மக்களிடையே மேலும் பிரபலமானார். அதே நிகழ்ச்சியின் மூலம், நடிகை கன்னிகா சினேகனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இந்த இரட்டை குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் தான் காதல் மற்றும் கவிதை என்று பெயர் சூட்டி இருந்தார் இரண்டு குழந்தைகளுக்கும் தங்க வளையலை அணிவித்து தன்னுடைய ஆசீர்வாதத்தை அளித்திருந்தார்.
கவிஞர் சினேகன் - திரைப்பயணம்
சினேகன் ஒரு கவிஞராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். அவர் எழுதிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. கவிஞராகப் பிரபலமான சினேகன், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை கன்னிகா பயணம்
கன்னிகா, நடிகையாக மட்டுமல்லாமல் நீண்ட தலை முடிக்காக அழகி பட்டமும் பெற்றிருக்கிறார். அதோடு சிலம்பாட்டம், ஓவியம், புத்தகம் எழுதுதல், சமையல் கலை போன்ற பல கலைகளும் தெரிந்தவர். சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று முயற்சி செய்த கன்னிகாவிற்கு துணை நடிகையாக தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் சினேகனை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
நடிகை நளினி - திரைப்பயணம்
நளினி, தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகை. இவர் குழந்தை நட்சத்திரமாகத் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் கதாநாயகியாகவும், குணசித்திர நடிகையாகவும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, தொலைக்காட்சித் தொடர்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சினேகன் - கன்னிகா தம்பதியரின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நளினியின் வாழ்த்து அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications