ஆதிபராசக்தியின் கெட்டப்பில் நமிதா மாரிமுத்து...அசந்து போன ரசிகர்கள்
சென்னை: போட்டோ ஷூட் மூலமாக ஆதிபராசக்தியின் கெட்டப்பில் அசத்தும் நமிதா மாரிமுத்துவை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.
பிக்பாஸ்க்கு பிறகு நமிதா வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
காலண்டர் போட்டோவில் இருக்கும் ஆதிபராசக்தியின் கெட்டப்பில் இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு வருகிறார்களாம்.

பிக்பாஸில் அறிமுகம்
பிக் பாஸ் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் மனதிலும் ஒரு வாரத்தில் இடத்தை பிடித்து தற்போது வரைக்கும் இவருடைய வெளியேற்றத்தால், ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்தவர் தான் நமிதா மாரிமுத்து. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு போட்டோசூட் மூலமாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோக்களும், வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.

வாழ்த்து மழையில் நமிதா
பிக்பாஸ் சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் ஐந்தாவது சீசனில் ஒரு புரட்சிகரமாக போட்டியாளராக அறிமுகமான நமிதா மாரிமுத்துவை எந்த ரசிகரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாமல்தான் இருந்து வருகின்றனர். ஒரு வாரம் தான் இவர் இந்த வீட்டிற்குள் இருந்தாலும் அவருடைய தாக்கம் ரசிகர்களின் மனதில் பெரிய லெவலில் இருந்து வருகிறது. கதை சொல்லும் டாஸ்க்கில் இவருடைய கதையை கேட்டு பலர் கண்ணீர் வடித்து உள்ளனர். பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் இவர் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு உயரத்தில் இருந்தாலும், ரசிகர்களின் வாழ்த்து மழையில் தற்போது நனைந்து வருகிறா

மாறாத உதவும் குணம்
தவிர்க்க முடியாத காரணத்தால் இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றுவிட்டார் என்று பிக்பாஸ் கூறிவிட்டாலும், ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில் அது என்ன காரணம் என்று கூட பலருக்கும் தெரியாமல் இருந்தது. அதற்கு பிறகு தான் தற்போது அவருடைய உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தான் அவரால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் வெளியே வந்த பிறகு தன்னுடைய சகஜமான வாழ்க்கையில் மீண்டும் திரும்பி விட்டார். குறைந்த காலத்தில் மக்களுக்கு உதவியது போல தற்போது மழை காலத்திலும் பல ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்
திருநங்கைகளின் சார்பாக இவர் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பலருக்கும் முன் மாதிரியாக இருந்தாலும், இவர் தற்போது எடுத்திருக்கும் புது அவதாரம் அனைவரையும் விழி அசைக்காமல் ரசிக்க வைத்திருக்கிறது. ஆதிபராசக்தியின் கெட்டப்பில் தத்ரூபமாக மாறி இருக்கும் இவரை பார்த்ததும் அப்படியே அந்த கடவுளை கண் முன்னே கண்டதுபோல பரவசமடைந்த ரசிகர்கள் தங்களை அறியாமல் இவருக்கு ஹார்ட்டின்களை அனுப்பி வருகின்றனர். ஏற்கனவே இவர் மீது நல்ல மரியாதை வைத்திருக்கும் ரசிகர்கள் தங்களுடைய இருக்கைகளையும் தூக்கி வணங்கும் வகையில் பல இமோஜிகளை இவருக்கு கமெண்ட்டாக அனுப்பி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications