இங்க நந்தினியும் சின்னத்தம்பியும்... இன்னொரு பக்கம் அர்ஜுனும் ஜானுவும்... நடு ஹாலில்.. பண்ணலாமா?
சென்னை: அரண்மனைக்கிளி, சின்னத்தம்பி ரெண்டு சீரியலும் ரெண்டு நாளா ஒண்ணா டெலிகாஸ்ட் ஆகுது. இதுலதாங்க ஒரு பக்கம் அர்ஜுனும், ஜானுவும், இன்னொரு பக்கம் சின்னத்தம்பியும், நந்தினியும் என்று நடு ஹாலில் படு ரொமான்ஸ் நடக்குதுங்க.
அர்ஜுனும், ஜானுவும் சின்னத்தம்பியின் அப்பா அம்மா 60ம் கல்யாணத்துக்கு வந்திருக்கிறார்கள். மைனா நந்தினி இருக்காங்களே அவங்க ரெண்டு சீரியலிலும் நடிக்கறாங்க. இன்னிக்கு மைனாவா ஒன் வுமன் ஷோவா ரெண்டு தம்பதியையும் ரொமான்ஸில் புகுந்து விளையாட வைக்கறாங்க பாருங்க...
நந்தினி ஒரு நல்ல நடிகை.. இயல்பா பேசி மனதை அள்ளிடுவார். ஏனோ பெரிய திரையில் இவரை காண முடிவதில்லை.மைனாவா நந்தினி அறைக்குள் நுழைகிறார்.

இது சரியில்லக்கா
யக்கா இது சரியில்லேக்கா...சானு புள்ளையும், அர்ச்சுனும் புருஷன் பொண்டாட்டி மாதிரி நடிக்கறாவுளாமே.. பெரியவுள இப்டியா ஏமாத்துவாங்க... இப்ப நீங்க இருக்கீங்க... அப்படியா ...சொல்லுங்க.. புருஷன் பொண்டாட்டின்னா உங்களை மாதிரி இருக்கணுக்கான்னு நந்தினி சொல்ல

அதே கதைதான்
நந்தினி சின்னத் தம்பியை ஓரக்கண்ணால் பார்த்து முணுமுணுக்கிறாள்.. யக்கா என்ன நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்... நீ மசமசன்னு நிக்கறேன்னு கேட்டுட்டு, நம்ம ஊரை விட்டு சானு புள்ளையும், அர்ச்சுனும் போறதுக்குள்ள புருஷன் பொண்டாட்டியா போகணுக்கான்னு சொல்கிறாள்.

கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்
நம்ம என்ன செய்ய முடியும் மைனா... யக்கா என்னாக்கா இப்பிடி சொல்லிப்புட்ட... அவங்க பார்க்கற மாதிரி நீங்க நெருக்கமா, அன்யோன்யமா இருந்தா, அவங்களுக்கும் மூட் வரும். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகுக்கா..

நீயே சொல்லு மைனா
யக்கா இப்போ ஒரு போட்டி வச்சுக்குவோம். புருஷன் மனைவிக்கு அலங்காரம் பண்ற போட்டி இன்னிக்கு வச்சுக்குவோம்.. அதாவது நகத்துக்கு பாலீஷ் போடறது... இந்த தலைக்கு சாம்பிராணி தலைக்கு மசாஜ் பண்ணிவிடறது... வாரி பின்னல் போட்டு விடறது.. இப்படி வச்சுக்கலாக்கான்னு மைனா சொல்கிறாள்.

தூபக்கால்
நெயில் பாலீஷ், சாம்பிராணி போட தூபக்கால், சீப்புன்னு ஹாலில் குவிய, ரெண்டு தம்பதியருக்கும் மைனா முதலில் நெயில் பாலீஷ் தருகிறாள். நந்தினியும், சின்னத்தம்பியும் ஒருவர் கண்கள் ஒருவரை நோக்க பாலீஷ் போடும் வேலையைத் தொடங்கிட்டாங்க. ஜானுதான் அர்ஜுனிடம் கையைத் தர மறுக்கிறாள்

சாம்பிராணி
கண்களால் பேசி ஜானுவின் கையைத் தர சொல்லி, விரல் பிடித்து பாலீஷ் போட்டு விடுகிறான் அர்ஜுன். அடுத்து மசாஜ், சாம்பிராணி, புகை, தலை அலங்காரம் என்று இரு கணவன்மார்களும் கலக்க.. மைனா இருவரையும் பார்த்து ரசிக்கிறாள்.

பிடிச்சிருக்கு
யக்கா ஒனக்கு இந்த அலங்காரம் புடிச்சிருக்கான்னு மைனா கேட்க, புடிச்சுருக்கு வெட்கத்தோடு சொல்கிறாள் நந்தினி. சானு ஒனக்கு புடிச்சிருக்கான்னு கேட்க, புடிச்சிருக்குன்னு சொல்றா ஜானு.

ரொமான்ஸ் எப்படி
இப்படி மைனாவின் கலக்கலான நடிப்போடு, படு ரொமான்ஸாக சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலின் நாளைய ரொமான்ஸ் எப்படி இருக்கப் போகுதுன்னு வெயிட் பண்ணித்தான் பார்க்கணும்...!
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications