Nanjil Vijayan: நான் செய்தது தப்புதான்! நடந்த விஷயம் இதுதான்! பகிரங்க மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்!
சென்னை: விஜய் டிவியில் காமெடி நடிகராகப் பிரபலமான நாஞ்சில் விஜயன், திருநங்கை வி.ஜே. வைஷு அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், நாஞ்சில் விஜயன் தன் மனைவி மரியமுடன் இணைந்து ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு, இந்த விவகாரத்திற்கு விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில், அவர் வைஷுவிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

வி.ஜே. வைஷு குற்றச்சாட்டு
வி.ஜே. வைஷு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தனம் போன்ற சில சீரியல்களில் நடித்து வரும் நடிகை. நாஞ்சில் விஜயன் மீது இவர் அளித்த குற்றச்சாட்டு, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "நாங்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கும் மேலாகக் காதலித்தோம். கணவன் மனைவி போல ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், அவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை பிறந்த பிறகு, என்னை யார் என்றே தெரியாது என ஏமாற்றிவிட்டார்" என்று வைஷு பல நேர்காணல்களில் கண்ணீருடன் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லும் விதமாகத்தான், நாஞ்சில் விஜயன் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மௌனம் கலைத்த நாஞ்சில் விஜயன்
புதிய வீடியோவில், நாஞ்சில் விஜயன் வெளிப்படையாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பேசியிருக்கிறார். அவர் கூறிய முக்கிய அம்சங்கள், "நான் பல திருநங்கைகளுடன் பழகி இருக்கிறேன். எனக்குப் பல வருடங்களாகவே திருநங்கைகளுடன் ஒரு பயணம் இருக்கிறது. என்னைப் பற்றி என்னுடன் பழகிய திருநங்கைகளுக்குத் தெரியும். இப்போதும் வைஷு கொடுத்த புகாரைப் பார்த்ததும், 'நாங்க பார்த்துக்கிறோம்' என்றுதான் அவர்கள் எல்லோரும் ஆறுதல் சொல்கிறார்கள்."
மன்னிப்பும், வருத்தமும்
"வைஷு ஏன் இப்படிப் பண்றாங்கன்னு தான் தெரியல. ஒருவேளை அவங்க என் மீது ஆசைப்பட்டு இருக்கலாம், நான் நட்பாகப் பழகிட்டு திடீர்னு பேசல என்றதும் அவங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். அப்படி வருத்தம் இருந்தால், நான் உங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."
அதுபோல நீங்களே உங்களுடைய பேட்டியில் நீங்கள் பாலியல் தொழில் செய்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்கீங்க. "ஒருவேளை நான் உங்களை திருமணம் செய்து கொண்டால் கூட, உங்களைக் கடந்து போன ஆண்கள் எல்லோரும் என்னிடம் வந்து 'என் பொண்டாட்டியை எப்படி கல்யாணம் பண்ணலாம்?'னு கேட்பார்களே? எனக்கு இப்போது உங்களைப் பார்க்கும்போது, உங்களை கைடு பண்ண ஆள் இல்லையோ, நீங்க டிப்ரஷன்ல இருக்கீங்களோன்னு தான் தோணுது. நீங்க எங்களுக்குச் செய்ததையெல்லாம் நாங்க மறந்துட்டோம். தயவுசெய்து ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்துங்கள்."
வேண்டுகோள்
"ஒருவேளை நான் உங்களுடன் பழகியது உங்களுடைய மனதைக் காயப்படுத்தி இருந்தால், நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, ஒரு குழந்தை இருக்கு. என்னுடைய குழந்தையின் முகத்தைப் பார்த்து நான் சந்தோஷமா இருக்கேன்."
குடும்பத்தின் நிலைப்பாடு
இந்த விவகாரத்தில் தனது மனைவி மரியம் நிலைப்பாடு குறித்துப் பேசிய நாஞ்சில் விஜயன், "இந்த விஷயத்தில் என்னுடைய மனைவியின் ரியாக்ஷன் என்ன என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி" என்று சொல்லி, தன் மனைவியிடம் கேட்கிறார்.
அதற்கு மரியம், "நான் உங்களை நம்புறேன். உங்க மேல எப்பவும் எனக்கு நம்பிக்கையும், அன்பும் இருக்கு. யார் என்ன சொன்னாலும் நான் அதை நம்ப மாட்டேன்" என்று உறுதியாகப் பதில் கூறுகிறார்.
இந்த வீடியோ, நாஞ்சில் விஜயன் தனது குடும்ப வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதையும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications