விஜய்க்காக நாஞ்சில் விஜயன் போட்ட வீடியோ.. அவருக்கே பிரச்சனை! போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் சீரியல் நடிகை வைஷு
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவரை சுற்றி உருவான பிரச்சினை தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்படத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் விஜய் டிவி சீரியல் நடிகையும் திருநங்கையுமான விஜே வைஷு தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வருவதால் இந்த விவாதம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெடித்த சர்ச்சை
சில மாதங்களுக்கு முன்பு விஜே வைஷு தனது சமூக வலைதள பக்கங்களில் பல பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும், தற்போது தன்னுடன் பேச மறுக்கிறார் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் திருமணம் செய்த பிறகு முற்றிலும் தன்னை புறக்கணித்து விட்டதாகவும் அந்த பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் தான் கடுமையான மனவேதனையில் இருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த தகவல்கள் அந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு பரவின.
நாஞ்சில் விஜயன் அளித்த விளக்கம்
இந்த குற்றச்சாட்டுகள் பரவிய பிறகு நாஞ்சில் விஜயன் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, "நான் வைஷுவிடம் நல்ல நண்பராக மட்டுமே பழகினேன். எனக்கு திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பலர் நண்பர்களாக இருக்கிறார்கள். அதேபோல தான் வைஷுவுடனும் பழகினேன். ஆனால் அவர் என்னை பற்றி இப்படி நினைத்திருக்கிறார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், "எனக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். அந்த குடும்ப வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். அதுவே எனக்கு போதும்" என்று கூறி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். அதன்பிறகு சில நாட்கள் இந்த பிரச்சினை அமைதியாக இருந்தது.

விஜய் - திரிஷா குறித்து பேசிய வீடியோ
இந்நிலையில் சமீபத்தில் நாஞ்சில் விஜயன் நடிகர் விஜய் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒன்றாக கலந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களை பற்றி பேசினார்.
அதில் அவர், "விஜய்யும் திரிஷாவும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். அவர்கள் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சேர்ந்து சென்றிருக்கலாம். அதை நாம் பெரிதுபடுத்தி பேச வேண்டாம்" என்று கூறினார். மேலும், "திரிஷாவை திருமணம் செய்து கொண்டாலும் நாம் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டாம்" என்றும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் தொடங்கிய பதிவுகள்
இந்த வீடியோ வெளியான பிறகு விஜே வைசு மீண்டும் நாஞ்சில் விஜயன் குறித்து பதிவுகள் வெளியிடத் தொடங்கினார். ஒரு பதிவில், "நீங்கள் விஜய்க்கு சப்போர்ட் பண்றீங்க. ஆனால் என்னுடைய மனதை மட்டும் புரிந்து கொள்ளாமல் என்னை புறக்கணிக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, அவர் ஒரு ரீல்ஸ் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் நாஞ்சில் விஜயன் மற்றும் வைஷு இருவரும் சேர்ந்து சேதுபதி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரிலீஸ் எடுத்திருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பேசப்பட்டது.
நாஞ்சில் விஜயன் அளித்த பதில்
இந்த வீடியோ வைரலான பிறகு நாஞ்சில் விஜயன் அந்த வீடியோவில் ஒரு கமெண்ட் போட்டு இருந்தார். அதில், "சகோதரி, இந்த வீடியோவை நாம் 'வத்திக்குச்சி' வெப் சீரிஸ் படப்பிடிப்பு இடத்தில் இருந்தபோது நீங்கள் கேட்டதால் எடுத்தோம். நான் உங்களை புறக்கணிக்க வேண்டாம் என்பதற்காக சம்மதித்து எடுத்தேன். ஆனால் இப்போது அதை காதல் வரிகளுடன் நீங்கள் பகிர்ந்திருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நீங்கள் இப்படி பதிவுகள் வெளியிடுகிறீர்கள். அதற்கும் வாழ்த்துக்கள்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்தில் பார்க்கிறேன்
இந்த விவகாரம் இத்துடன் முடிவடையும் என்று பலர் நினைத்திருந்த நிலையில், இன்று விஜே வைஷு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வழக்கை ரீ ஓபன் செய்ய போகிறேன். நாஞ்சில் விஜயன், உங்களை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்" என்று அவரை டேக் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சினை அடுத்த கட்டமாக சட்ட ரீதியான வழக்காக மாறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications