பிரபல நடிகையுடன் சேர்ந்து பிளாக்கில் டிக்கெட் விற்ற நாஞ்சில் விஜயன்..ஸ்டேட்டஸால் வந்த வினை
சென்னை: விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாக தகவல்கள் பரவி வருகிறது.
1500 ரூபாய் டிக்கெட்டை வாங்கி 6500 ரூபாய்க்கு நாஞ்சில் விஜயன் விற்றதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
நாஞ்சில் விஜயன் அவருடைய whatsapp ஸ்டேட்டஸில் டிக்கெட் பற்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் சமூக வலைத்தளத்திலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொண்டிருப்பவர் தான். சமீபத்தில் தான் இவர் ஜெயிலுக்கு சென்று வந்திருந்தார். தன்னுடைய ஜெயில் அனுபவங்கள் குறித்து கண்ணீர் மல்க பேட்டியிலும் பேசியிருந்தார்.
விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய காமெடி திறமையை வெளிகாட்டி தன்னுடைய ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நாஞ்சில் விஜயின் தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். இவர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் தான் ஆரம்பத்தில கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்டி பலரையும் சிரிக்க வைத்திருந்தார்.

இதுபோல கடந்த 2021 ஆம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் திருமணத்தை சற்று ஓவராகவே விமர்சனம் செய்து வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டார். அதுபோல டிக் டாக் பிரபலம் சூர்யா தேவியை இவர் கண்ட மணிக்கு பேசியதால் அவர் புகார் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து தற்போது பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்த சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார். அதாவது CSK Vs DC அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை துணை நடிகை கும்தாஜ் உடன் இணைந்து நாஞ்சில் விஜயன் டிக்கெட்டை whatsapp ஸ்டேட்டஸ் இல் வைத்து பிளாக்கில் விற்பனை செய்ததாக செய்திகள் பரவி வருகிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications