கமலின் விஸ்வரூபம் நினைவிருக்கா? பிரபலங்களின் பப்ளிசிட்டி.. மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய்க்கு இது தேவையா
சென்னை: இன்று சினிமா மொத்தமாக விழுந்துவிட்டது.. இதனால் விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் மீடியாவில் செய்திகளை பிரபலங்கள் கிளப்பி விட துவங்கிவிட்டார்கள்.. பல நடிகர்களுக்கு இப்படியான காதல் கதைகள் உண்டு.. ஒரு வித்தியாசத்துக்காக சமையல் கலைஞரை பற்றி இப்போது பேசுகிறார்கள், அவ்வளவுதான் என்று மாதம்பட்டி ரங்கராஜ், நாஞ்சில் விஜயன் மீதான வரும் புகார்கள் குறித்து, மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை ஒருவர் புகார் தந்திருப்பது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

"7 வருடங்களாக நாஞ்சில் விஜயன் என்னுடன் தொடர்பில் இருந்தார். அவருக்கு கல்யாணம் ஆன பிறகு என்னை விட்டு விலகிவிட்டார். மனைவி குழந்தைகளுடன் அவர் நன்றாக இருக்கட்டும், அதேசமயம் என்னையும் பார்த்துக்கொள்ளட்டும்" என்று அந்த திருநங்கை கூறியிருக்கிறார்..
நாஞ்சில் விஜயன் மீது புகார்
அத்துடன் நாஞ்சில் விஜயன் மீது புகாரும் தந்துள்ளார்.. மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீஸில் ஜாய் புகார் தந்ததை பார்த்துதான் தனக்கு தைரியம் வந்ததாகவும் அந்த திருநங்கை தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், ஜாய், திருநங்கை இருவரும் மாதம்பட்டி ரங்கராஜ், நாஞ்சில் விஜயன் மீது புகார்களை தந்துள்ளனர்.. பாதிக்கப்பட்டவர்கள் போராட முன்வந்துவிட்டார்கள் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. இதிலிருந்து தெரிய வரும் பாடம் இதுதான்.. ஆண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்..
செக்ஸ் சுதந்திரம்
எங்களுடைய காலத்தில் பெண்களை பார்க்கவே அனுமதி கிடையாது.. கல்லானாலும் கணவன் என்பது அன்றுடன் போய்விட்டது.. இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள்..
அதேசமயம், பொருளாதார சுதந்திரம் கிடைத்ததுமே பெண்கள், ஆணை நம்பி வாழ வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.. எல்லா சுதந்திரம் போலவே செக்ஸ் சுதந்திரத்தையும் கையில் எடுத்துவிட்டனர்.. ஆண்கள் மட்டும் 2, 3 பெண்களை திருமணம் செய்யலாமா? பெண்கள் திருமணம் செய்ய கூடாதா? என்ற அளவுக்கு தங்களது உரிமையை பேச துவங்கிவிட்டார்கள்..
ஏஐ தொழில்நுட்பம் அபாயம்
இன்றைய காலகட்டத்தில் ஏஐ என்று சொல்லக்கூடிய தொழில்நுட்பத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது.. இதனால் இன்றைய தலைமுறை என்னவாக போகிறதோ? படிக்க வேண்டிய அவசியமே இருக்காது போல..
ஏற்கனவே பள்ளியில் 10 வருடம் படித்தாகிவிட்டது.. இதுக்கப்புறமும் 4 வருடம் கல்லூரியில் படிக்கணுமா? எப்பதான் எங்க பிள்ளைகள் சம்பாதிப்பது? 6 மாதத்தில் படித்துவிட்டு வேலைக்கு போகும்படி ஏதாவது படிப்பு இருக்கிறதா? என்று பெற்றோர்களே கல்லூரிகளில் கேட்கிறார்கள். 5 வருடம் படிப்பு என்பதால் இன்று மருத்துவ கல்லூரிக்கே பலரும் வருவதில்லை..
அமெரிக்காவில் இருட்டு நேரமாக இருந்தபோது, பூமி சுழன்று ஆசிய பகுதிகள் வெளிச்சமாக இருந்தன. இன்று அமெரிக்கா வெளிச்சத்துக்கு போய், ஆசிய பகுதிகள் இருண்ட பகுதிக்கு சென்றுவிட்டன.. கலாச்சாரமும் மாறுகிறது.. புடவை கட்டிய, வேட்டிய கட்டிய ஆண், பெண்களை பார்க்கவே முடிவதில்லை.. வேட்டி கட்டுவதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடும் நிலைமைக்கு வந்துவிட்டோம்..
மாதம்பட்டி ரங்கராஜ் - நாஞ்சில் விஜயன்
இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் விஷயத்தை பொறுத்தவரை, அவருக்கு திருமணமாகிவிட்டது என்பது ஜாய்க்கு தெரியும்.. ஆனால் இந்த விஷயம் தனக்கு தெரியாது என்று ஜாய் சொல்கிறாரே தவிர மாதம்பட்டி சொல்லவில்லையே?
இதுவரை ஒருபக்கம் மட்டுமே இந்த விஷயத்தில் பேசப்பட்டு வருகிறது.. மாதம்பட்டிக்கு கல்யாணமானது தனக்கு தெரியாது என்று ஜாய் சொன்னால் உடனே எல்லாரும் நம்பிவிடுவார்களா? பிளான் செய்து உள்ளே விழுந்துவிட்டு, இன்று தன்னை கைவிட்டுவிட்டார் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இதெல்லாம் விளம்பர யுக்தியாக கூட இருக்கலாம்..
ஒருவேளை மார்க்கெட் டவுன் ஆகிவிட்டால், இப்படியெல்லாம் இருவரும் பேசி பரபரப்பை உண்டுபண்ணி, அதன்மூலம் விளரம்பரம் தேடி கொள்வதாககூட இருக்கலாம்.. டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போவதாக சொல்வதுகூட விளம்பரம்தான்..
விஸ்வரூபம் - பிரபலங்களின் பப்ளிசிட்டி
விஸ்வரூபம் படத்தை கமல் எடுத்திருந்தார். அதில் நிறைய விஷயம் புரியவேயில்லை.. படமும் ஊத்திக்கிற மாதிரி இருந்தது.. உடனே முஸ்லிம்களுக்கு எதிரான படம் என்று சொல்லி, முஸ்லிம்களை வைத்து போராட்டம் நடத்த வைத்தார்கள்.. உடனே பெரிய பப்ளிசிட்டி கிடைத்தது.. ஜெயலலிதா தடை எதிர்ப்பு, என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.. அதற்கு பிறகு அந்த படம் வெற்றிகரமாக ஓடியது..
இங்கு எல்லாமே பப்ளிசிட்டிதான்.. பல நடிகர்களுக்கு இப்படியான காதல் கதைகள் உண்டு.. ஒரு வித்தியாசத்துக்காக சமையல் கலைஞரை பற்றி இப்போது பேசுகிறார்கள், அவ்வளவுதான்.. 2 வாரத்துக்கு முன்பு ஒரு பிரபல நடிகரும் இப்படியான பெண் விஷயத்தில் சிக்கினார்..
இதற்கெல்லாம் காரணம் இன்று சினிமா மொத்தமாக விழுந்துவிட்டது.. இதனால் விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் மீடியாவில் செய்திகளை பிரபலங்கள் கிளப்பி விட துவங்கிவிட்டார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications