கடவுளிடம் வேண்டியது வீண் போகல! நாங்க பெற்றோராக போறோம்! கண்கலங்க நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நாஞ்சில் விஜயன் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு குழந்தை செல்வத்தை எல்லோருமே எதிர்பார்ப்பார்கள். அதிலும் சில மாதங்கள் முடிவடைவதற்குள் பக்கத்து வீட்டுகாரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று திருமணமானவர்களை எச்சரிக்க தொடங்கி விடுவார்கள். வீட்டில் எதுவும் விசேஷம் உண்டா என்று கேட்கும் கேள்விகள் சம்பந்தப்பட்டவர்களை வருத்தமடைய செய்யும் என்பது புரிந்து கொள்ளாமலே ஏராளமானோர் கேட்கிறார்கள்.

Television Nanjil Vijayan

அதிலும் ஒரு சில வருடங்கள் கடந்து விட்டால் பார்ப்பவர்கள் முதலில் குழந்தையை தான் கேட்பார்கள். அதோடு அந்த கோவிலுக்கு போகலாம்.. இந்த கோவிலுக்கு போகலாம், அந்த ஹாஸ்பிடலுக்கு போகலாம், அந்த ட்ரீட்மென்ட் எடுக்கலாம் என்று இலவச அட்வைஸ் கொடுத்து விடுவார்கள்.

இது குழந்தை இல்லாத பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் தான். குழந்தைக்காக ஒவ்வொரு மாதமும் ஏங்கிப் போய் இருக்கும் பெற்றோர் பலர் இருக்கிறார்கள். அதுபோல கடந்த 2023 செப்டம்பர் மாதம் திருமணம் முடிந்த நாஞ்சில் விஜயன் மற்றும் அவருடைய மனைவி மரியா தம்பதியும் குழந்தைக்காக எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது.

அது பற்றி கண்ணீர் மல்க நாஞ்சில் விஜயன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நாஞ்சில் விஜயனின் சொந்த ஊர் நாகர்கோவில் தான். ஆரம்பத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் இவர் காட்டிய திறமைகள் இவருக்கு சினிமா வாய்ப்புகளையும் கொடுத்தது. ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் வீட்டில் பொறுப்பான மகனாக தன்னுடைய கடமைகளை எல்லாம் செய்துவிட்டு தம்பி, தங்கைகளுக்கு திருமணம் முடித்த பிறகு திருமணத்தை யோசித்து இருக்கிறார்.

அதற்கு பிறகு நண்பர்கள் மூலமாக மரியா என்பவர் அறிமுகமான நிலையில் அவர்கள் இருவருக்கும் சென்னையில் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். திருமணத்திற்கு பிறகு மரியா மற்றும் நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் இவர்களை பார்ப்பவர்கள் எல்லோரும் குழந்தை பற்றியே கேட்கிறார்கள் கண்டிப்பாக அந்த மகிழ்ச்சியான செய்தி வந்ததும் பகிர்ந்து கொள்வேன் என்று நாஞ்சில் விஜயன் ஒரு வீடியோவில் உருக்கமாக பேசியிருந்தார். அதுபோல இப்போது அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம்.

அது பற்றி அவர் ரசிகர்களிடம் பேசுகையில் நான் வேண்டிய கடவுள் என்னை கைவிடவில்லை. எங்கள் வீட்டுக்கும் ஒரு குழந்தை வர போகிறது. ஒவ்வொரு மாதமும் அதை எதிர்பார்த்து எங்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது. அதுபோல இந்த மாதமும் காத்திருந்தோம் கடைசியில் எங்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல தனக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தன்னுடைய மனைவிக்காக ஒரு குழந்தையின் கால் பாதங்கள் பதித்த டாலர் போட்ட தங்க செயினை நாஞ்சில் விஜயன் பரிசளித்திருக்கிறார்.

சந்தோஷமாகவும்,ஆரோக்கியமாகவும் குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் நாஞ்சில் விஜயன்- மரியா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+