திருநங்கை சாபம் பழிச்சிடுச்சு... மாமியார் சொன்ன வார்த்தை! மனைவியை பிரிந்து விட்டேன்! நாஞ்சில் விஜயன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயன் தன்னுடைய மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டதாக நாஞ்சில் விஜயன் வெளியிட்ட பதிவு என்று ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே திருநங்கை வைஷு அவர் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதை வைத்து தான் தன்னுடைய குடும்பத்தில் இப்போது பிரச்சனை என்று அந்த பதிவில் நாஞ்சில் விஜயன் பெயரில் சொல்லப்பட்டு இருக்கிறது.

நாஞ்சில் விஜயனின் இன்ஸ்ட்டா ஸ்டோரியில், திருநங்கை சகோதரி வைஸ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன். சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக எங்களுக்குள் இருந்த நல்ல நட்பை கொச்சைப்படுத்தி என்னைப் பற்றி பல அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்தீங்க. என்னையும் உங்களையும் தொடர்புபடுத்தி தினம் தோறும் சோசியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும் என்னுடைய மனைவி என்னுடன் உறுதியாக இருந்ததால் நான் அதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை.

அந்த விமர்சனங்களை எல்லாம் பெரிது படுத்தாமல் என்னுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்து வந்தேன். ஆனால் வீட்டில் ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையின் போது என்னுடைய மனைவியின் அம்மா நீ ஒரு திருநங்கையை ஏமாற்றிவிட்டு என் பொண்ணை திருமணம் செய்து கொண்டாய் என்று சொல்லிவிட்டார். சமூகத்தில் இருந்து பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டபோதும் எனது குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலே வாழ்ந்து வந்தேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை வீணாகிவிட்டது.

Nanjil Vijayan vijay tv

மனைவியுடன் பிரிவு

என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்து விட்டேன். இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்புகிறேன். அது மட்டும் இன்றி திருநங்கை சாபம் உன்னை சும்மா விடாது... அந்த சாபம் இன்று பழிதீர்த்து விட்டது என சிலர் கமெண்ட் செய்தார்கள். அனைவரும் இருந்தும் யாரும் இல்லாமல் மீண்டும் தனிமையில் இருக்கிறேன். நிச்சயம் இன்று நீங்க நல்லா தூங்குவீங்கன்னு நம்புறேன். நீங்கள் ஜெயித்து விட்டீர்கள், நான் தோற்றுவிட்டேன் என்று அந்த பதிவில் இருக்கிறது.

நாஞ்சில் விஜயன் பதிவு

ஆனால் இந்த பதிவு தற்போது நாஞ்சில் விஜயன் சோசியல் மீடியா பக்கத்தில் இல்லை. அது டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இது உண்மையிலே நாஞ்சில் விஜயன் வெளியிட்டதுதானா? அல்லது வேறு யாரேனும் அவருடைய பெயரை வைத்து வெளியிட்ட பதிவுகளா? என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் சில நாட்களுக்கும் முன்பு கூட நாஞ்சில் விஜயன் அவருடைய மனைவியுடன் எக்ஸ்போ நடத்தினாரே அது குறித்த வீடியோக்களும் வைரல் ஆனது அப்படி இருக்கும்போது என்ன ஆச்சு இவங்களுடைய வாழ்க்கையில்? எத்தனையோ பிரச்சனைகள் வந்தபோது என்னுடைய கணவரை நான் நம்புகிறேன் என்று அவருடைய மனைவி சொல்லி வந்தாரே! அதனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் சொல்லி வருகின்றனர்.

Nanjil Vijayan vijay tv

குடும்ப பிரச்சனை

இன்னும் ஒரு சிலர் குடும்பம் என்றால் எல்லா பிரச்சனைகளும் வர தான் செய்யும். அதிலும் கணவன் மனைவி பிரச்சனையை பற்றி சொல்லவா வேண்டும்? இன்று அடித்துக் கொள்பவர்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள். அதற்காக சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு அதை பெரிது படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர். ஏற்கனவே விஜே வைஷ்ணவி, நாஞ்சில் விஜயன் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

வைரலாகும் பதிவு

நாஞ்சில் விஜயனுடன் ஏற்கனவே எடுத்த புகைப்படங்களையும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு காதல் கேப்ஷன் கொடுத்து வருகிறார். இதனால் விவாதங்களும் எழுந்து வந்தது. இதற்கு எதிராக நாஞ்சில் விஜயனும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். ஆனாலும் இந்த பிரச்சனை மட்டும் முடிவுக்கு வந்தது போல இல்லை. இப்போது இதில் புதிய பிரச்சனையாக நாஞ்சில் விஜயனின் பதிவு என்று வைரலாகி வருகிறது. இதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பில் இருந்து என்ன பதில் கொடுக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+