நெப்போலியனை "மூக்கறுத்து".. கேரவனில் யாரந்த பெரிய நடிகர்? சிவக்குமாரிடம் நொந்து ஓடிய சூர்யா: பிரபலம்
சென்னை: சினிமா துறையில் கேரவன் வந்தபிறகு, அன்பு, பாசம், நேசம், நட்பு எல்லாமே செத்துப்போய்விட்டதாக பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.. அத்துடன் நடிகர் நெப்போலியன் குறித்தும் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு, பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "நாங்கள் தயாரித்த விஷ்ணு படத்தில் விஜய் அனைவரிடமும் இயல்பாகவே நடந்து கொள்வார்.. அப்போது சரியாக யாரிடமும் பேச மாட்டார்.- ஆரம்ப காலத்தில், விஜய்யிடம் ஒரு பெண் ரசிகர், மேடையில் கேள்வி எழுப்பியிருந்தார்.. அதற்கு பதில் சொல்லக்கூட தெரியாமல் நெளிந்தார் விஜய். ஆனால், இப்போது நன்றாக பேச கத்துக்கிட்டார்.. மேடையேறி பேசுவதே மிகப்பெரிய விஷயம்தான்.

நடிகர் சூர்யா: நேருக்கு நேர் படத்தில் விஜய் வளர்ந்துவிட்ட நடிகராகிவிட்டார். அவருக்கு அப்போதே கேரவன் தரப்பட்டிருந்தது.. ஆனால், அதே படத்தில் அறிமுகமாகியிருந்த சூர்யாவுக்கு கேரவன் தரப்படவில்லை. அப்போது சூர்யா, பொதுவெளியில் நின்றுகொண்டுதான் உடை மாற்றிக்கொண்டார்.. இப்படி தன்னை ஷூட்டிங்கில் ட்ரீட் செய்வதாக, சிவக்குமாரிடம் சொல்லி சூர்யா வருத்தப்பட்டுள்ளார்.
அதற்கு சிவக்குமார், எங்களுக்கெல்லாம் அந்த காலத்தில் கேரவன் கிடையாது. இப்போதுதான் இந்த வசதி வந்துள்ளது.. உனக்கும் கேரவன் வேண்டுமானால், விஜய்யின் உச்சத்தை நீயும் அடைய பார்" என்று சமாதானம் செய்துள்ளார்.. அதேபோல, சூர்யாவும் அதை சாதித்து காட்டினார்..
5 ஸ்டார் ஓட்டல் வசதி: முன்பெல்லாம் ஏசி வசதியுடன் ஒரு பெட், டாய்லட் வசதி மட்டுமே கேரவனில் இருந்தது.. பிறகு, ஹீரோ, ஹீரோயினுக்கு சேர்த்து டபுள் டெக்கர் கேரவன் வந்தது.. இப்போதெல்லாம் 5 ஸ்டார் ஓட்டல் மாதிரி இருக்கு கேரவன்கள்.. கம்ப்யூட்டர், நெட்வசதி உட்பட எல்லாமே வந்தாச்சு. முதலில் கேரவன் தனக்கு வேண்டாம் என்றார் ரஜினி.. கேரவன் இருந்தால் நடிக்கவே மாட்டேன் என்றும் சொன்னவர்தான், பிறகு வேற வழியில்லாமல், கேரவன் வசதியை ஏற்றுக் கொண்டார்.
பெரிய நடிகர்கள் கேரவனுக்குள் இருந்தால், அவர்களை மீண்டும் ஷாட்டுக்கு அழைத்துவர அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் படாதபாடு பட வேண்டியிருக்கும்.. அந்த கேரவனை பார்த்து கொள்ளவே, அந்த பெரிய நடிகர்களுக்கு ஒரு அசிஸ்டென்ட் இருப்பார்கள்.. இவர்களை மீறி கேரவனுக்குள் யாருமே நுழையவே முடியாது. இதைத்தவிர, கேரவனை சுற்றிலும் கருப்பு டிரஸ்ஸுடன் கார்டுகள் இருப்பார்கள். கேரவனுக்குள் இருக்கும் நடிகரிடம், "ஷாட் ரெடி" என்று சொல்வதற்கே அவ்வளவு நேரமாகிவிடும்.
நெப்போலியன்: ஒருமுறை, போக்கிரி படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்தது... அரசியல், சினிமாவை விட்டுட்டு, அப்போதே அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தார் நெப்போலியன் சார்.
விஜய் சார் ஷூட்டிங் அமெரிக்காவில் நடப்பதை கேள்விப்பட்டு, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நெப்போலியனிடம் சென்றிருக்கிறார்கள்.. தாங்கள் அனைவரும் விஜய்யின் ரசிகர்கள் என்பதால், அவரிடம் தங்களை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளனர். இதைக்கேட்டு மகிழ்ந்த நெப்போலியனும், விஜய் நம்ம தம்பி மாதிரி, நிச்சயம் கூட்டிட்டு போறேன் என்று சொலலி, அந்த ரசிகர்களை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது விஜய் கேரவனுக்குள் இருந்திருக்கிறார்.. கேரவன் வாயிலில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி கார்டிடம் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் நெப்போலியன்., ஆனால் செக்யூரிட்டி கார்டு, விஜய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பதால், அவரை சந்திக்க முடியாது என்று அனுமதி மறுத்துள்ளார்..
அதிர்ச்சி: இதைக்கேட்டு அதிர்ந்த நெப்போலியன், விஜய் என் தம்பி மாதிரி, நெப்போலியன் வந்திருப்பதாக சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போதும் அந்த கார்டு மறுக்கவும், சின்ன வாக்குவாதம் வெடித்துள்ளது.
இந்த சத்தத்தை கேட்டு கேரவனுக்கு வெளியே வந்த விஜய், "என்ன சார்.. உங்களுக்கு கொஞ்சம்கூட சென்ஸ் இல்லையா? உள்ளே ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன், நீங்க நினைச்சா நான் உங்களை உடனே பார்க்கணுமா? எதுவா இருந்தாலும், அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு வந்து பாருங்க.. இப்படி தொந்தரவு செய்யாதீங்க" என்று நெப்போலியனிடம் கடுப்பாக சொல்லி உள்ளார்.
கசப்பு அனுபவம்: இதைக்கேட்டு நெப்போலியனுக்கு அதிர்ச்சியும், அவமானமுமாக போய்விட்டது.. அத்தனை பேரை அழைத்து சென்றிருந்தபோது, விஜய் தன்னிடம் இப்படி பேசிவிட்டதால் மனம் வருத்தப்பட்டதாக பலமுறை நெப்போலியனே பேட்டிகளில் சொல்லி உள்ளார். விஜய் பற்றின கசப்பான அனுபவம் என்று இதை அடிக்கடி சொல்வார். இந்த கேரவன் சினிமாவுக்குள் வந்ததுக்கு பிறகு, அன்பு, பாசம், நேசம், நட்பு எல்லாமே செத்துப்போய்விட்டது" என்றெல்லாம் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications