நெப்போலியன் மகனை பற்றி அப்படி சொன்னாங்களே! இப்போ கலக்கிட்டாரு! பொங்கல் நாளில் மகிழ்ச்சியில் குடும்பம்
சென்னை: சமீப காலமாக நடிகர் நெப்போலியன் குடும்பத்தை சுற்றி பல்வேறு பேச்சுகளும், தேவையற்ற சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக அவரது மூத்த மகன் தனுஷ் உடல்நிலை, திருமணம், குடும்ப வாழ்க்கை பச்சை பல விதமாக பேசப்பட்டது. ஆனால் அந்த எல்லா பேச்சுகளுக்கும் எந்த விளக்கமும் சொல்லாமல், தங்களது வாழ்க்கையை தங்களது பாதையில் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள் நெப்போலியன் குடும்பத்தினர்.
அந்த அமைதிக்கான பதிலடியாகத்தான் இப்போது வெளியான இந்த பொங்கல் கொண்டாட்ட வீடியோ என ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் பொங்கல் பண்டிகை
நடிகர் நெப்போலியன் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆனால் அவர் எங்கிருந்தாலும், தீபாவளி, பொங்கல் போன்ற பாரம்பரிய பண்டிகைகளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுவதை அவர் ஒருபோதும் தவறவிட்டதில்லை. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மகன், மருமகள், மனைவி, இளைய மகன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என அனைவரும் ஒன்றாக கூடி, எளிமையாகவும், ஆனந்தமாகவும் பொங்கலை கொண்டாடும் அந்த காட்சிகள் தான் இப்போது வைரலாகி வருகிறது.
நெப்போலியன் குடும்பத்தை பற்றி பார்க்கும்போது, அவரது மூத்த மகன் தனுஷ் திருமணத்தை தவிர்க்க முடியாது. நீண்ட காலமாக மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த நெப்போலியன், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், மகனின் விருப்பத்திற்கேற்ப ஜப்பானில் சென்று கோலாகலமாக திருமணத்தை நடத்தி வைத்தார்.
அந்த திருமணம் பலரின் கவனத்தை ஈர்த்தது. "மகனின் ஆசைக்கு முன்னுரிமை கொடுத்த அப்பா" என நெப்போலியனை ரசிகர்கள் பாராட்டினார்கள். ஆனால் சிலர் நெப்போலியன் மகனுக்கு தசைசிதைவு நோயால் படுத்த படுக்கையாக இருக்கிறாரே, இவருக்கு திருமணம் தேவையா? ஒரு பொண்ணோட வாழ்க்கையை நெப்போலியன் அளித்துவிட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வந்தது.

ஆனாலும் கடந்த ஆண்டு தல பொங்கலை தனுஷ் தனது மனைவி அக்ஷயாவுடன் கொண்டாடிய நிலையில், இந்த ஆண்டு இரண்டாவது பொங்கலையும் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

சர்ச்சைகளுக்கு முற்றுப்புளளி
நெப்போலியன் மகன் அண்ணனுக்கு திருமணத்திற்கு பிறகு தசை திசைதைவு நோய் பாதிப்பு அதிகமாகிவிட்டது என்றும் அதனால் அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றும் சில கூறி வந்தனர். அதற்கு காரணம் தமிழ்நாட்டில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜன், நடிகர் விதார்த் போன்ற பல பிரபலங்கள் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் குடும்பத்தை நேரில் சந்தித்திருந்தனர். அப்போது படுத்தபடியே தனுஷ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். இதனால் இவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டதா என்ற விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் அதற்கு தனுஷ் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இப்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வீல் சேரில் இருந்தாலும் மீண்டும் உற்சாகமாக குடும்பத்துடன் கலந்து கொண்டாடும் தனுஷை பார்த்த ரசிகர்கள், "இதுதான் உண்மையான பதில்" என கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், "அடுத்ததாக இளைய மகனுக்கும் இந்த ஆண்டே திருமணமா?" என்ற கேள்விகளையும் ரசிகர்கள் சுவாரசியமாக எழுப்பி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications