Napoleon: சிம்பு விக்கெட்டை எடுத்த முதல்வர் மு க ஸ்டாலின்! அப்போ நடந்தது இதுதான்.. நெப்போலியன் பதிவு
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்த கிரிக்கெட் நினைவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த விவகாரத்தில் நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 'Vibe With MKS' நிகழ்ச்சியில், தமிழக இளம் விளையாட்டு வீரர்களுடன் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது பள்ளிப் பருவம் முதல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரை உள்ள நினைவுகளை சுவாரசியமாக பகிர்ந்திருந்தார்.

அதில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளராக பங்கேற்று, நடிகர் சிம்பு, நடிகர் நெப்போலியன் உட்பட மூவரின் விக்கெட்டுகளை எடுத்ததாக அவர் கூறியிருந்தது தான் இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து, அந்தப் போட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பந்து வீசி விக்கெட் எடுத்த பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இந்த நிலையில், அந்த நினைவுகளை உறுதி செய்யும் வகையில் நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
நெப்போலியனின் பதிவு
நெப்போலியன் தனது பதிவில், "உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே, நமது தமிழ் சொந்தங்களே வணக்கம். இந்தியாவில் சென்னையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், அன்றைய சென்னை மேயரும், இன்றைய தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு அண்ணன் தளபதி அவர்களும், பல நடிகர்களும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், டிராவிட் உள்ளிட்ட பல பிரபல விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்" என குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் போட்டி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய நிகழ்ச்சியில் இன்னும் மறக்காமல் பகிர்ந்ததை சுட்டிக்காட்டிய நெப்போலியன், அந்த வீடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த நிகழ்வில் தன்னை பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
வைரலாகும் வீடியோ
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளை நிற யூனிஃபார்மில் ஆஃப்-ஸ்பின்னராக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் காட்சிகள், விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது."தலைவர் சரியான ஆல்-ரவுண்டர்", "சிம்பு விக்கெட்டை எடுத்த ஸ்டாலின்" போன்ற கருத்துகளுடன் இந்த வீடியோக்கள் எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
நடிகர் நெப்போலியனின் பதிவு, இந்த வைரல் விவகாரத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளதோடு, அரசியல் தலைவராக மட்டுமல்லாது, விளையாட்டின் மீதும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு இவ்வளவு ஆர்வம் இருந்ததா என்றும் பலரும் வியப்புடன் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications