நெப்போலியன் பெஸ்ட் அப்பா.. அவங்கவங்களுக்கு வலி வந்தா தெரியும்.. அந்த பொண்ணை வாழ்த்துங்க: பிரபலம் செம
சென்னை: "நமக்கு பிறகு, நம்ம குழந்தைக்கு ஒரு உறவு வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதில் என்ன தவறு இருக்கு? நெப்போலியன் சிறந்த தந்தை என்றால், அவரது மனைவி சுதாவும் சிறந்த தாய். இவர்கள் 2 பேரும் செய்த தியாகங்களும், கண்ணீரும் கொஞ்சநஞ்சமல்ல.. அவர்களது மகனை நாம் மனதார வாழ்த்துவோம்" என்று குட்டிபத்மினி கேட்டுக் கொண்டுள்ளார்.
தன்னுடைய KPTV சேனலில், மூத்த நடிகை குட்டி பத்மினி, வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியிருக்கிறார்.. அதில், நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் குறித்து கூறியிருப்பதுடன், புது மண தம்பதிக்கு தன்னுடைய வாழ்த்தையும் மனதார கூறியிருக்கிறார்.

நெப்போலியன்: நெப்போலியன் சார் உண்மையிலேயே ஒரு சிறந்த தந்தை.. தன் குழந்தை நல்லா இருக்கணும் என்று ஒரு அப்பா நினைக்கிறதுல தவறும் கிடையாது.. அதுக்காக ஒரு பெண்ணை பலி கொடுத்துட்டாங்க என்று பலரும் சொல்வது, எனக்கு சரியா படல..
ஏன்னா, எத்தனையோ பெண்கள் கடவுளை மனதார ஏற்று, கன்னியாஸ்த்ரியாக போகிறார்கள்.. ஜெயின் மதத்தில எத்தனையோ பேர் வாழ்க்கையே வேண்டாம் என்று சொல்லி துறவறத்தை மேற்கொள்கிறார்கள்.. அந்த மாதிரி இந்த பொண்ணும், ஒரு குடும்பத்திற்குள் மருமகளாக சென்று, அவர்களுக்கு தன்னால் சந்தோஷத்தை தர முடியுமானால், அதுவே தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்று காலடி எடுத்து வைத்துள்ளார்.. அதனால் அவர்கள் நல்லா இருக்கட்டும்..
துறவறம்: வெளிநாடுகளில் இதெல்லாம் சாதாரண விஷயம்.. அவரவர் வாழ்க்கையை சந்தோஷமாக அங்கே வாழ்கிறார்கள்.. அவரவர்க்கு தங்கள் வாழ்க்கையில் உரிமை உள்ளது.. நாம யாரு இதையெல்லாம் கமெண்ட் செய்றதுக்கு? அவங்கவங்களுக்கு வலி வந்தால்தான் தெரியும்... இப்படியொரு வலி யாருக்கும் வந்துவிடக்கூடாது என்றுதானே அனைவருமே நினைக்கிறோம்.
தன் குழந்தைக்காகவே வெளிநாட்டில் தங்கி வாழ்ந்து வரும் நல்ல மனுஷனை மனம்நோகும்படி பேசுவது சரிகிடையாது.. சினிமா உலகில் எத்தனையோ பேருக்கு, யாருக்குமே தெரியாமல் உதவி செய்திருக்கிறார் நெப்போலியன் சார்.
நடிகர்கள்: இங்கிருந்து 5 நடிகர், நடிகைகளை ஜப்பானுக்கு அழைத்து சென்றதை பற்றியே பலரும் பெரிதாக பார்க்கிறார்கள். நடிகர் என்ற முறையில் அவர்களை அழைத்து சென்றிருக்க கூடாதா? ஆனால், அவர் தன்னுடைய ஆபீசில் வேலை பார்ப்பவர்களையும் அழைத்து சென்றிருக்கிறார்.. கல்யாணத்தில் டான்ஸ் ஆடுவது தப்பா? இவங்கெல்லாம் ஏன் கல்யாணத்துக்கு போகணும்? ஏன் ஆடணும்? இப்படி கேட்கிறதெல்லாம் தவறு என்றே நினைக்கிறேன்.
அந்த பெண் தியாகம் செய்ததாகவே இருக்கட்டும்.. நம்மில் கல்யாணம் செய்து எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கோம்? 80 சதவீதம் பேர் கூட சந்தோஷமாக இல்லை.. அந்த பெண்ணுக்கு ஒரு அம்மா - அப்பா திருநெல்வேலியில் இருக்காங்க.. இன்னொரு அம்மா, அப்பா அமெரிக்காவில் கிடைத்திருக்காங்க..
சந்தோஷம்: இன்னைக்கு பணக்காரர்கள் எல்லாரும் சந்தோஷமாவா இருக்காங்க? சந்தோஷம் என்பது நம்முடைய மனதை பொறுத்தது. "சந்தோஷமாக நாங்கள் இருக்கோம்" என்று அவர்களே சொல்லும்போது, நாம யாரு அதையெல்லாம் விமர்சிப்பதற்கு?
தனுஷ் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்.. இந்த மாதிரி நபர்களின் ஐ-க்யூ எப்போதுமே நன்றாகவே இருக்கும்.. அறிவாளியாகவே இருப்பார்கள்.. தன்னுடைய 2வது மகனுக்கு கல்யாணம் செய்யும்போது, வீட்டிற்கு மருமகள் வரும்போது, மூத்த மகன் இதையெல்லாம் பார்த்து ஏங்கிவிடக்கூடாது என்று பெற்றோர் நினைத்திருக்கலாம் இல்லையா?
தனுஷ் அறிவாளி: 10 வயசிலேயே இறந்துவிடுவார் என்று சொன்ன தனுஷை, 25 வயசு வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க என்றால், எந்த அளவுக்கு பெற்றோரின் தியாகம் இதுல இருக்கு பாருங்க.. பார்த்து பார்த்து அந்த குழந்தையை வளர்த்து, ஆளாக்கியிருக்காங்க.. அந்த குழந்தையை வாழ்த்துங்க.. அந்த தம்பதி நல்லா இருக்கட்டும். அந்த குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்
அந்த பெண்ணின் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும்.. எல்லாவற்றையும் யோசித்துதான் இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டும்.. எல்லாத்தையுமே பணத்தால் மட்டுமே நாம் கணக்கு போட்டுவிட முடியாது.. நம்ம நடிகர் பப்லுவை எடுத்து கொண்டால், அவரது பையனுக்கும் ஆட்டிசன் பிரச்சனை என்று நினைக்கிறேன்.. ஆனால் இந்த குழந்தைகளுக்கு வேறு யார் இருக்காங்க.. நெப்போலியன் தம்பதியும் இப்படி நினைச்சிருக்கலாம் இல்லையா?
குழந்தைகள்: நம்ம குழந்தைக்கும் ஒரு உறவு வேண்டும் என்று நினைத்ததில் என்ன தவறு இருக்கு? நெப்போலியன் சிறந்த தந்தை என்றால், அவரது மனைவி சுதாவும் சிறந்த தாய். இவர்கள் 2 பேரும் செய்த தியாகங்களும், கண்ணீரும் கொஞ்சநஞ்சமல்ல.. அந்த குழந்தைகளை நாம் மனதார வாழ்த்துவோம்" என்று குட்டிபத்மினி தெரிவித்துள்ளார்.
இந்த கல்யாணத்தை விமர்சித்து இங்கே நிறைய பேர் வீடியோ போட்டிருக்காங்க.. இதே வீடியோவை இவர்கள் இங்கிலீஷில் போட்டிருந்தால், இவர்கள் அனைவருமே கைதாகியிருப்பார்கள்.. ஏனென்றால், மேலை நாடுகளில் ஸ்பெஷல் குழந்கைகள் அனைவருக்குமே சமமாகவே நடத்தப்படுவார்கள்.
அவங்களை பற்றி யாருமே தவறாக பேசக்கூடாது.. அவர்களின் மனம் புண்படும்படியாக பேசவும் முடியாது.. அந்த அளவுக்கு இந்த ஸ்பெஷல் குழந்தைகளை பராமரிக்கிறார்கள்.. அவர்களை ஊக்கப்படுத்துவார்கள். அதனால், அந்த குழந்தைகளை நாமும் மனம்புண்படுத்தாமல் வாழ்த்துவோம் என்று கூறியுள்ளார் குட்டி பத்மினி.












Click it and Unblock the Notifications