டாப் குக்கு டூப் குக்கு நரேந்திர பிரசாத்துக்கு நடந்த திடீர் கல்யாணம்! பொண்ணு இந்த பிரபலம் தான்! குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்த என்.பி (NP) என ரசிகர்களால் அழைக்கப்படும் நரேந்திர பிரசாத், தனது காதலி மீனாவுடன் நேற்று மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் மட்டுமல்லாமல், நண்பர்கள், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலங்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டதால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதல் கல்யாணம்
நரேந்திர பிரசாத் நீண்ட நாட்களாக மீனா என்பவரை காதலித்து வந்தது அவரின் நெருங்கிய வட்டாரத்தினருக்கு தெரிந்த விஷயம். அதிர்ச்சி அருண் கூட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியிலேயே, "என்.பி ஒரு பொண்ணை காதலிக்கிறார்... அடுத்த வருஷம் கல்யாணம்" என்று கிண்டலாக சொல்லியிருந்தார். அப்போது ரசிகர்கள் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டாலும், அவர் சொன்னது இப்போது உண்மையாகி விட்டது. இதுபோல நரேந்திர பிரசாத் மனைவி மீனா ஒரு டாக்டராக இருக்கிறாரம்.
பிரமாண்ட திருமணம்
திருமண நிகழ்ச்சியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் நேரில் வந்து வாழ்த்தினர். அதேபோல் யூடியூப் மற்றும் சோஷியல் மீடியா உலகை சேர்ந்த பல கான்டென்ட் கிரியேட்டர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, "NP கிட்டே crush இருந்தது... இப்போ கல்யாணம் ஆயிடுச்சே.. " என்ற கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.
சோஷியல் மீடியாவில் ஆரம்பம்
நரேந்திர பிரசாத் இன்று இந்த அளவுக்கு பிரபலமானது ஒரே நாளில் கிடைத்த வெற்றி அல்ல. ஆரம்பத்தில் சின்னச் சின்ன ஷார்ட் ஃபிலிம்களில் நடித்தார். பிறகு Black Sheep குழுவுடன் இணைந்து ஆல்பம் பாடல்கள், மற்றும் எண்டர்டெயின்மென்ட் வீடியோக்களில் நடித்தார்
அதிலிருந்து கிடைத்த ரீச் தான் அவரை சோஷியல் மீடியா ஸ்டாராக மாற்றியது. அவரின் இயல்பான நடிப்பு, டைமிங் காமெடி, மற்றும் எளிமையான பேச்சு ஸ்டைல் காரணமாகவே பெண்கள் ரசிகைகள் அதிகமாக உருவாகினர்.
வாழ்க்கையை மாற்றிய மேடை
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது நரேந்திர பிரசாத்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய turning point ஆக அமைந்தது. அதில் அவர் காட்டிய குக்கிங் டாஸ்க்களில் காட்டிய முயற்சி, எல்லாருடனும் கலந்துசெல்லும் குணம் இவை அனைத்தும் அவரை டைட்டில் வெற்றியாளராக மாற்றியது.

நரேந்திர பிரசாத் இல்லை NP
ரசிகர்கள் அவரை முழு பெயரால் அழைப்பது அரிது. "NP" என்றே அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவருக்கு தனி fan base உருவாகி இருக்கிறது. குறிப்பாக பெண்கள் ரசிகைகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமண புகைப்படங்கள் வெளியானதும் "Made for each other" "NPக்கு super pair" "Reality showல பார்த்த love story இப்போ real life" என்று கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன. திருமணத்துக்குப் பிறகு நரேந்திர பிரசாத் மீண்டும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும், டிஜிட்டல் கான்டென்ட்டிலும் பிஸியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோஸ்டிங், வெப் கான்டென்ட், ரியாலிட்டி ஷோ - எல்லா துறைகளிலும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
காதலித்து கல்யாணம் செய்த என்.பி - மீனா ஜோடிக்கு ரசிகர்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications