தம்மாத்துண்டு கதைய காணோம்.. பாடாய்ப் படுத்திட்டாங்க.. "ஹக் லைஃப்" கமல், மணிரத்னம் காணவில்லை: பிரபலம்
சென்னை: 'நாயகன்' என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. டைட்டில் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது. இன்று வெளியாகியிருக்கும் தக் லைஃப் படம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், பிரபல தயாரிப்பாளரும் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஹக் லைஃப்ன்னு படத்துக்கு பேர் வெச்சிருக்கலாம்.. கமல் ஒருபக்கம் திரிஷாவை ஹக் பண்ணுகிறார்.. சிம்பு ஒருபக்கம் திரிஷாவை ஹக் பண்ணுகிறார்.. ஒரே ஹக்கிங்தான்..

ஒரே டெம்ப்ளேட்டில்தான் படம் எடுக்கிறார்கள்.. டெக்னாலஜி வளர்ந்துள்ள நிலையில், அதை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும்.. ஒரே அடி, வெட்டு, குத்து.. கதையே சொல்ல தேவையில்லை.. வெறும் பழிவாங்குற கதைதான்..
மார்பில் துப்பாக்கிசூடு
நேபாளம் 12500 அடி உச்சியில் வைத்து, கமல்ஹாசனை மார்பு, இடுப்பு, வயிறு, என பல இடங்களில் சுடுகிறார்கள்.. அங்கிருந்து கீழே தள்ளிவிடுகிறார்கள்.. 12500 அடியிலிருந்து கீழே விழுகிறார் கமல்ஹாசன்.. அங்கேதான் இடைவேளை வருகிறது.. இடைவேளைக்கு பிறகு என்னாகப் போகுது என்று எல்லாருக்குமே தெரியும்..
இத்தனை வருட காலம் சினிமாவில் நடிக்கும் கமலுக்கு, ஜோஜு ஜார்ஜ் வில்லனா? அவருடனெல்லாம் தனி ஃபைட் கமலுக்கு தேவையா? நாயகன் படம், செக்கச்சிவந்த வானம் மீதி என்று படம் பார்த்தவர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.. இதற்கு நாம என்ன சொல்றது?
நாயகன் மணிரத்னம், கமல்
நாயகன் படத்திலிருந்த கமல்ஹாசனும், மணிரத்னமும் இப்போது இல்லை.. 2 பேரும் எங்கே போனாங்கன்னு தெரியல.. 2 பேரையும் காணவில்லை என்று போஸ்டர் போட வேண்டியதுதான்.. ஏனென்றால், இவர்கள் 2 பேரின் திறமை எதுவுமே இந்த படத்தில் இல்லை.. செக்கச்சிவந்த வானம் போலவே மீண்டும் மீண்டும் படம் தந்தால் எப்படி?
படம் ஆரம்பத்திலிருந்து, முடியும்வரை கமல்ஹாசனை 10 முறையாவது துப்பாக்கியில் சுட்டிப்பார்கள்.. ஆனால் கடைசியில் "விண்வெளி நாயகா" என்று நிற்கிறார்..
சிம்புவையும் நாலஞ்சு முறை சுட்டிருப்பார்கள்.. துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்தவர்கள்தான் இந்த படத்தில் அதிகம்.. சிம்புவையும் கொண்டுவந்து கொன்னுட்டாங்க..
மணிரத்னமும், கமல்ஹாசனும் இப்படி படங்களை தர ஆரம்பித்துவிட்டால், தமிழ் சினிமாவில் இனிமேல் நல்ல படமே வராதா? என்றுதான் கேட்க தோன்றுகிறது.
1000 கோடி லாபமா?
இந்த படத்தில் கேமரா நன்றாக உள்ளது.. 1000 கோடி எடுக்கணும்னு ஆசைப்படறாங்க, அதுக்கேத்த கதை இல்லையே.. வெறும் 4 கோடியில் எடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி 75 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.. அது 1000 கோடி வசூலித்ததற்கு சமமாகும்.. 500 கோடியில் தக் லைஃப் படத்தை எடுத்து, என்ன பிரயோஜனம்?
நாயகன் படத்தில் விபச்சார விடுதியிலிருந்து சரண்யாவை கூட்டிட்டு வருவார்.. இந்த படத்தில் திரிஷாவை கூட்டிட்டு வர்றார்.. லவ் காம்பினேஷன் உள்ள திரிஷா-சிம்புவை இங்கே கொண்டுவந்து சிதைச்சிட்டாங்க..
கமல்ஹாசன் ஒரு பெரிய நடிகர், அவருக்கு கோடிகளில் சம்பளம்.. மணிரத்னத்துக்கு கோடிகளில் பணம் திரும்பி வரணும்.. சிம்பு, திரிஷாவுக்கு கோடிகளில் சம்பளம்.. இந்த படத்தில் துப்பாக்கிகளுக்கே நிறைய செலவாகியிருக்கணும்..
கதை எங்கே?
அசோக்செல்வன் பாவம்.. நல்லா நடிச்சிட்டிருந்தவரை இந்த படத்தில் போலீஸாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.. ஒரு இடத்தில்கூட போலீஸ் டிரஸ் போட்டுட்டு வரவில்லை.. வையாபுரி, சேத்தன், வடிவக்கரசி இவங்களெல்லாம் படத்தில் எதுக்கு?
ஏஆர் ரஹ்மான் நல்லா செய்திருக்கிறார்.. பாடல்கள் எல்லாம் இந்த படத்தில் சூப்பர்.. டான்ஸ், எடுத்த விதம் , கேமரா, எடிட்டிங், ஆர்ட் ஒர்க், இப்படி எல்லாமே நல்லா இருக்கு.. இப்படி ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுத்துள்ளனர், ஆனால், தம்மாதுண்டு கதையை காணோம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications