Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைந்த ரோபோ சங்கருக்காக 'நாயகன்' ரீ ரிலீஸில் தியேட்டர் ஓனர் செய்த செயல்.. இப்படி ஒரு காரணமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் 'யுனிவர்சல் ஸ்டார்' கமல்ஹாசன் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தவர் மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். கமலா சினிமாஸில் கமல்ஹாசன் படங்களின் வெளியீட்டு கொண்டாட்டங்களில் ரோபோ சங்கரின் பங்கு மிகப் பெரியது. இந்த நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ள 'நாயகன்' திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை ரோபோ சங்கருக்காக ஒதுக்கியுள்ளதாக கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு வெளியிட்டுள்ள பதிவு, ரசிகர்களின் மனதை உருக்கியுள்ளது.

Kamal Haasan Robo Shankar Nayagan

யார் இந்த ரோபோ சங்கர்

ரோபோ சங்கர், தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர், பிறகுத் தனது உடல்மொழியாலும், தனித்துவமான காமெடியாலும் பிரபலமானார். நடிகர் தனுஷுடன் 'மாரி', விஷ்ணு விஷாலுடன் 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்', அஜித்துடன் 'விஸ்வாசம்' என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

ஸ்கோர் செய்தவர்

'மாரி' மற்றும் 'மாரி 2 படங்களில், நாயகன் தனுஷை விடவும் அதிகமாக ஸ்கோர் செய்தவர் ரோபோ சங்கர். இந்த காட்சிகளுக்குத் தனுஷும் அவருக்கு அதிகச் சுதந்திரம் கொடுத்திருந்தார். 'வாய் மூடிப் பேசவும்'திரைப்படத்தில் குடிகாரராக நடித்து அசத்தியிருப்பார்.

கமல் மீதான அளவற்ற அன்பு

ரோபோ சங்கர், தன்னை வெளிப்படையாகக் கமல்ஹாசனின் தீவிர ரசிகராகக் காட்டிக் கொண்டவர். கமல்ஹாசன் மீது அவர் வைத்திருந்த அன்பு மிகவும் ஆழமானது. ஸ்கூல் காலேஜ் காலக்கட்டத்திலேயே கமல்ஹாசனின் பாடல்களுக்கு நடனமாடி பலரின் மனதைக் கவர்ந்தவர் ரோபோ சங்கர். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மீது அன்புள்ள ரசிகர் என்று சொல்லிப் புகழ்பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட ரோபோ சங்கருக்கு ஒரு போட்டியாளராகவே தெரிந்தார். "கமல்ஹாசன் குறித்து யாருக்கு அதிகத் தகவல்கள் தெரிகிறது என்பது குறித்து ஒரு போட்டி வைத்துக் கொள்வோம்" என்று லோகேஷ் கனகராஜுக்கு வெளிப்படையாகவே சவால் விட்டிருந்தார் ரோபோ சங்கர். இது கமல்ஹாசன் மீதான அவருடைய ஆழமான அறிவையும், அபிமானத்தையும் காட்டியது.

உருக வைத்த கமலா சினிமாஸ் அறிவிப்பு

ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு வெளியிட்டுள்ளப் பதிவு, ரோபோ சங்கரின் நினைவைப் புதுப்பித்துள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கிளாசிக் திரைப்படமான 'நாயகன்' ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படம் வெளியாகும் கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு, தனது X தளத்தில், "கமலா சினிமாஸில் ரோபோ சங்கர் இல்லாமல், கமல்ஹாசன் படங்களுக்கான கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், "இதனால் முன்பதிவு தொடங்கும் முன், முதல் டிக்கெட்டை ரோபோ சங்கருக்காகவும், அடுத்த சில டிக்கெட்டுகள் அவரின் குடும்பத்தினர்களுக்காகவும் எடுத்து வைக்கப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் மீது ஒரு ரசிகராக ரோபோ சங்கர் வைத்திருந்த அன்பிற்கு கிடைத்த ஒரு கௌரவமாக இந்தப் பதிவு பார்க்கப்படுகிறது. இந்த உணர்வுப்பூர்வமான முடிவு, ரசிகர்களின் மனதை மிகவும் உருக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+