பூ அலங்காரம்... பால் பழம் ஸ்வீட்.. ஐயோ வெக்க வெக்கமா இருக்கே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நாயகி தொடர் இப்போ கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. ஆனந்திக்கு வெளியில் இருந்தா பாதுகாப்பு இல்லேன்னு தன் வீட்டுக்கே அழைச்சுக்கிட்டு வந்துட்டான் திரு.

ஆனா ஆனந்திக்கு தன் அப்பாவாலதான் ஆபத்துன்னு திருவுக்கு இப்போ தெரியலை காரணம், எல்லாம் மண்டையில பந்து பட்டதுதான். மூளை ஆபரேஷன் அமெரிக்காவுல முடிஞ்சு சென்னைக்கு வந்தவனுக்கு தான் ஆனந்தியை காதலிச்சது, கல்யாணம் செய்துகிட்டது, அப்பாவுக்கு எதிரா நின்னது எல்லாமே மறந்து போச்சு.

ஆனந்தி மறுபடியும் திரு வீட்டுக்கு வேலைக்கு வந்துவிட, இனமே கதையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. காதல், ரொமான்ஸ் மீண்டும் தலைவிரித்தாடும்னு எதிர்பார்க்கலாம்னாலும், ஆனா,ஆனந்தி கழுத்துல தாலி போட்டு இருப்பதை பத்தி திரு இன்னமும் கேட்கலை.

மாம்ஸ்

மாம்ஸ்

வசிய மருந்து மாத்தி சாப்பிட்டு, மாமனார் அந்த வலையில மாட்டிகிட்டு என்னாச்சுன்னு அன்னிக்கு நாம தெரிஞ்சுக்கிட்டோம். அதுல இருந்து மாம்ஸ் சும்மா மாப்பிள்ளை மாதிரி துள்ளி குதிக்கறார். அதிகாரமும் கொடி கட்டி பறக்குது.

மாம்ஸ் காணும்

மாம்ஸ் காணும்

அக்கா.. எங்க அக்கா மாம்ஸ காணோம். இந்த ராத்திரியில் எனக்கு ஒரு புது வாழ்க்கை கிடைச்சு இருக்குடா.. இனி நீ வேற மாமனை பார்க்க போறேன்னு சொன்னார்.. இன்னும் காணலியேன்னு கண்மணியோட அப்பா ஆட்டோ டிரைவர் கேட்கறார்.

சொல்ற

சொல்ற

என்னடா சொல்றே.. வெளியில கட்டில்லதானே படுத்து கெடப்பாரு.. அந்த மனுஷன் வீட்டை விட்டு எங்கேயும் போகமாட்டாரேடான்னு சற்குணம் சொல்ல, இல்லக்கா, வெளியில கட்டில், கொசுவலை ஒண்ணும் இல்லை. எங்கியோ போயிட்டாருக்கா மாம்ஸ்னு சொல்றார்.

திட்டினீங்களா

திட்டினீங்களா

டேய்..அப்பாவை யாராவது திட்டினீங்களா... நான் என்ன வேணா சொல்லுவேன், என் புருஷனை யாராவது திட்டினீங்க.. சும்மா விட மாட்டேன்.. போயி தேடுங்கடான்னு சற்குணம் சொல்றாங்க. எல்லாரும் போய்விட., எங்க போயிருப்பார் இந்த மனுஷன்னு ரூமுக்குள்ள போறாங்க

கட்டிலில் மைனர்

கட்டிலில் மைனர்

பார்த்த சற்குணம் அப்படியே நிற்க.. என்ன ஜக்குமா(செல்லமா) அப்படி பார்க்கறே? அன்னிக்குத்தான் நமக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாயிருச்சே.. எதுக்கு இன்னும் நாம தனியா படுக்கணும்.. பார்த்தியா எவ்ளோ பூ ... ஆசையா கட்டில் நிறைய போட்டு வச்சுஇருக்கேன்.. வாடான்னு கூப்பிடறார்.

கொழுப்பு

கொழுப்பு

உனக்கு கொழுப்பு மண்டைக்கு ஏறிபோச்சுய்யா.. என்ன திமிர் உனக்குன்னு அடிச்சு துரத்த, பாய், படுக்கையை எடுத்துக்கிட்டு வெளியே ஒடி வர்றார். மருமகள்கள் ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிக்க, இந்த மூஞ்சிக்கு பால், பலகாரம் வேறன்னு தட்டி விடறார் சற்குணத்தமமா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+