Nayagi serial: பிஸ்கட்டில் விஷமா..? அடப்பாவிங்களா.. என்னடா தொழில் போட்டி?
சென்னை: கதை என்றால் கூட கை கூசாமல் கண்டதை எழுதிவிடுகிறார்கள். அதையும் ஷூட் செய்து தொலைகாட்சி சீரியலாக ஒளிபரப்பும்போது மனம் பதைபதைக்கிறது.
சன் டிவியின் ரேட்டிங் நம்பர் ஒன்னில் இருக்கும் சீரியல் நாயகி. இந்த சீரியலில் மகனின் தொழிலுக்குப் போட்டியாக அப்பாவே களம் இறங்குகிறார்.
போட்டியில் ஜெயிக்க முடியாமல், ஆனந்தி பிஸ்கட்டில் விஷம் கலந்த பிஸ்கட்டை கலந்துவிட்டு சந்தோஷமாக பாரில் நண்பருடன் மது அருந்திக் கொண்டு இருக்கிறார் கலிவரதன்.

அண்ணாமலை சீரியல்
நடிகை ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ரடானின் தயாரிப்பில், ராதிகா நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் அண்ணாமலை. இந்த சீரியலில் தொட்டதற்கெல்லாம் கொலை என்று மக்களின் மனதை பதைபதைக்க வைத்தார்கள்.

பிரியமானவள் சீரியல்
சன் டிவியில் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வந்த பிரியமானவள் சீரியலில் அழகிய குடும்பத்தை காண்பித்து மக்களை ஏமாற்றி பார்க்க வைத்து... அடுத்து ஆரம்பித்தார்கள்.. கொலை, ஆள் கடத்தல், அதிரடி, வன்முறை என்று. இதையும் கூட பதைபதைப்புடன் மக்கள் பார்த்து வந்தார்கள்.

நாயகி சீரியல்
விகடன் டெலிவிஸ்டாஸின் நாயகி சீரியலை இன்றுவரை எந்த சீரியலின் ரேட்டிங்கும் மிஞ்சவில்லை. ஆனால், இதில் எப்போதும் குடும்பத்தை கெடுப்பது.. புருஷன் பொண்டாட்டிக்கு நடுவில் அனன்யா புகுந்து ஆட்டம் காட்டுவது என்றே கதை போனது.

பிசினெஸ் எதிரி
இப்போது பிசினெஸ் எதிரியாக மகனும் கலிவரதனுக்கு பிடிக்காத மருமகளுமே முளைத்துவிட அவர்களை தோற்க வைக்க ஆனந்தி டூப்ளிகேட் பிஸ்கெட்ஸ் தயாரித்து அதில் விஷம் கலந்து மார்க்கெட்டில் உலவ விடுகிறார்களாம். அதை மக்கள் வாங்கி சாப்பிட்டு, ஆனந்தி பிஸ்கெட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, அவர்கள் பிசினெஸ் சரிந்துவிடுமாம்.
என்ன கற்பனைங்க இது... கொடுமையா இல்லை?!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications