சர்ருன்னு சீனை உருவிய நயன்தாரா? சந்திரமுகி படத்தால் தலைவலி? நடிகையின் பின்னணியில் இருப்பது இவர் தானா
சென்னை: நடிகை நயன்தாராவின் கல்யாண வீடியோ விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.. தன்னுடைய ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' பட காட்சிகளையும் நயன்தாரா இணைத்துள்ளாராம்.. இதனை நீக்கக் கோரி, சம்பந்தப்பட்டவர்கள், ஹைகோர்ட்டுக்கு சென்றுள்ளனர். அந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கும் வந்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர், சேனல் ஒன்றுக்கு தந்திருந்த பேட்டியில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024ம் ஆண்டு நவம்பரில் நெட்ஃளிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் 'நானும் ரவுடி தான்' பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
சந்திரமுகி காட்சிகள்
இந்நிலையில், 'சந்திரமுகி' பட காட்சிகளையும் ஆவணப்படத்திற்கு நயன்தாரா பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில், ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது..
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, டார்க் ஸ்டூடியோவுக்கும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.
நயன்தாரா, பாவனா
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சுபைர், "நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பு, கேரளாவில் டிவி ஷோக்களை செய்து வந்தவர்.. தமிழில் நடிக்க ஹீரோயின் தேர்வின்போது, நயன்தாரா, பாவனா போன்றோரின் போட்டோக்கள் வந்திருந்தன.. பாவனா ஏற்கனவே மலையாள சினிமாவில் நடித்திருந்தாலும், நயன்தாராவே தேர்வானார். அப்படித்தான் தமிழில் அறிமுகமானார்..
பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, அந்த திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடிக்கு விற்றார் நயன்தாரா.. ஆனால், வெறும் திருமண வீடியோவாக இருந்ததை, டாக்குமென்ட்ரியாக மாற்றினார்..
அந்த டாக்குமென்ட்ரியில், தனுஷின் நானும் ரவுடிதான் படத்தின் கிளிப்பிங்ஸையும் பயன்படுத்தியிருந்தார்.. ஆனால் இதற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் தனுஷிடம் நயன்தாரா அனுமதி வாங்கவில்லை. இதனால் தனுஷ் நஷ்ட ஈடு கோரி, விவகாரம் கோர்ட் வரை சென்றது. அதில் இதுவரை தீர்ப்பு வரவில்லை..
சந்திரமுகி சீன்கள்
சந்திரமுகி படத்திலிருந்தும் சில காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியிருக்கிறார்.. அந்த படத்தின் உரிமை ஏபி இண்டர்னேஷனல் வசம் உள்ளது.. சந்திரமுகி காட்சிகளை நீக்கம்படி சொல்லியும்கூட, நயன்தாரா, நெட்பிளிக்ஸ் நீக்கவில்லை என்பதால், ஏபி இண்டர்னேஷனல் , 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.. இந்த விவகாரமும் கோர்ட்டுக்கு சென்றுள்ளது..
இதற்கு பதிலளிக்கும்படி, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள தனுஷ் கேஸூடன், இந்த வழக்கும் இனி கோர்ட்டில் நடக்கும்.
விக்னேஷ் சிவன் காரணமா
பெரிதாக எந்த சிக்கலிலும் சிக்காமல் இருந்தவர் நயன்தாரா.. தனிப்பட்ட முறையில் பல தோல்விகள், கஷ்டங்களை சந்தித்தாலும், அதிலிருந்து மீண்டு வந்துவிட்டார்.. ஆனால், விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகுதான், நயன்தாராவுக்கு இப்படி பல சட்ட சிக்கல்கள், விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. நயன்தாரா என்ன செய்தாலும் சர்ச்சையாகிறது..
ஆனால், நயன்தாரா இரக்க சுபாவம் கொண்டவர், இப்போதுதான் அவரை பற்றி இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன.. ஒருவேளை நயன்தாராவை இயக்குவதே விக்னேஷ் சிவன்தானா? அல்லது நயன்தாரா விக்னேஷ்சிவன் போல மாறிவிட்டாரா? என்று தெரியவில்லை என்று நயன்தாராவுடன் பணியாற்றியவர்கள் கூறுகிறார்கள்..
மூக்குத்தி அம்மன் 2
தனுஷூடன் பிரச்சனை போலவே, மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையிலும் பிரச்சனை வெடித்தது.. சுந்தர் சியுடன் கருத்து வேறுபாடு, பூஜைக்கு செருப்பு போட்டு வந்தது, ரெஜினாவுடன் செல்பி, மூத்த நடிகை மீனாவை கண்டு கொள்ளாதது, பொள்ளாச்சிக்கு ஷூட்டிங் வரமாட்டேன் என்று சொன்னது போன்ற சலசலப்புகள் வந்தவண்ணம் இருந்தன.. சமீபத்தில்தான், இந்த படத்தின் ஷூட்டிங் எந்த பிரச்சனையுமின்றி நடந்து முடிந்துள்ளது. படமும் விரைவில் முடிய போகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications