கே.ஆர். விஜயா போல வருமா? ஆபாசமா நடிச்ச நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் எல்லாம் அம்மனாக நடிக்கலாமா? பிரபலம்
சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது... முதல் முதலில் எடுக்கப்பட்ட காட்சியை நயன்தாரா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி, வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. இப்படிப்பட்ட சூழலில், நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள், அம்மன் வேடத்தில் நடிக்கலாமா? என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆன படம் மூக்குத்தி அம்மன்... இதில், அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அதன் 2வது பாகத்தை மீண்டும் எடுக்கிறார் ஐசரி கணேஷ்.. மூக்குத்தி அம்மன் 2-ஐ இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார்.

ஆபாச நடிகைகள்
இந்நிலையில், BBT என்ற யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை வணங்குகிறார்கள்.. நம்பிக்கை இல்லாதவர்கள், யாரிடமும் தர்க்கம் செய்யக்கூடாது.. அதெல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.. அதேபோல, மாரியம்மன், மூக்குத்தி அம்மன், அங்காள பரமேஸ்வரி என ஒவ்வொரு அம்மனையும், அவரவர் குல தெய்வ வழக்கப்படி வணங்குகிறார்கள்..
எனவே, அந்தந்த சமுதாய மக்களுக்கு, தங்களது குலதெய்வ அம்மனின் முகமானது, சின்ன வயதிலிருந்தே மனதில் பதிந்துவிட்டிருக்கும்.. அதனால் நடிகைகளை கொண்டுவந்து திடீரென அவர்களை அம்மனாக காட்டும்போது, எப்படி ஏற்பது?
நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் போன்ற எந்த நடிகையாக இருந்தாலும், அம்மனின் முகம் மக்கள் மனதில் பதிய வாய்ப்பில்லை. அதிலும் ஆபாசமாக நடிக்கக்கூடிய நடிகைகளை கொண்டு வந்து அம்மனாக நடிக்க வைத்தால், மக்களுக்கு பக்தி என்பதே போய்விடும்.
உண்மையான பக்தர்களுக்கு புரியும்
பக்தி கேரக்டரில் நடிப்பதற்காக, விரதம் இருப்பதாக சொல்வது, அதிலும் குடும்பமே விரதமாக இருப்பதாக சொல்வது எல்லாமே சீன்.. மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படுபவை.. என்னதான் அம்மனாக நடித்தாலும், எப்படி இருந்தாலும், நீங்கள் ஏற்கனவே நடிச்ச ஆபாச காட்சிகள், அரைகுறை ஆடையுடன் நடனமாடியது யாருக்குமே நினைவுக்கு வராதா? உண்மையாக பக்தி உள்ளவர்களுக்கு நான் சொல்வது புரியும்.
ஃபயர் படத்தில் நடித்த ரக்ஷிதா
இதுபோன்ற பக்தி வேடங்களில், புதுமுக நடிகைகளை நடிக்க வைக்கலாம்.. பக்தி படங்களில் நடித்த பிறகு, இந்த புது நடிகைகள் வேறு வகையான படங்களை நடித்தாலும் அதில், ஒன்றும் தெரியாது. அம்மன் கேரக்டர் என்றாலே அது கேஆர் விஜயாதான்.. அவருக்கு மட்டுமே அது பொருந்தும்.
ரம்யா கிருஷ்ணன்கூட பல படங்களில் குத்தாட்டம் போட்டவர்தான், அரைகுறை ஆடைகளுடன் வலம் வந்தவர்.., லிவிங் டூ ரிலேஷன்ஷிப் பற்றி பெருமையாக பேசியவர்.. இவரெல்லாம் அம்மனாக நடிப்பதை ஏற்க முடியவில்லை... ஃபயர் படத்தில் நடித்த ரக்ஷிதாவை வைத்து, மூக்குத்தி அம்மன் 2 எடுத்தால், மக்கள் வரவேற்பார்களா? இது நயன்தாராவுக்கும் பொருந்தும்.,. சௌந்தர்யா அம்மனாக நடித்தால் ஏற்கலாம். காரணம், அவர் ஆடைக்குறைப்புடன் நடித்ததில்லை" என தெரிவித்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications