திரிஷாவுக்கு எங்கேஜ்மென்ட் வாழ்த்து சொன்ன நயன்தாரா! விஜயை வைத்து ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியதிலிருந்து, அந்த விஷயம் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக வந்தது மட்டுமல்லாமல், ஒரே நிறத்திலான உடையில் மேட்சிங் போல தோன்றியதும் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியது.
இந்த சம்பவம் ஏற்கனவே நடிகர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி பேசப்பட்டு வரும் விவாகரத்து சர்ச்சையுடன் இணைந்து பார்க்கப்பட்டதால், சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் கருத்து மோதல்களும் அதிகரித்துள்ளன.

பழைய பதிவை தோண்டி எடுத்த ரசிகர்கள்
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் இன்னொரு பழைய விஷயம் தற்போது மீண்டும் பேசப்பட ஆரம்பித்திருக்கிறது. அது நடிகை நயன்தாரா 2015ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு சமூக வலைதள பதிவு. அந்த பதிவில், "திரிஷா மற்றும் வருண் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்... அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்" என்ற பொருளில் நயன்தாரா வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவுடன் திரிஷா மற்றும் வருண் மணியன் இணைந்து எடுத்த புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
2015ஆம் ஆண்டு வெளியான அந்த பதிவு அப்போது பெரிதாக பேசப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் மறந்து போனது. காரணம் திரிஷாவிற்கும் வருணுக்கும் கல்யாணம் ஆகவில்லை இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் தற்போது விஜய்-திரிஷா விவகாரம் பேசப்படும் நேரத்தில் அந்த பழைய பதிவை ரசிகர்கள் மீண்டும் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்துள்ளனர்.
திரிஷாவின் பழைய நிச்சயதார்த்தம்
அந்த காலத்தில் நடிகை திரிஷா மற்றும் வருண் மணியன் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது உண்மை. இருவரின் குடும்பத்தாரும் கலந்து கொண்ட சிறிய நிகழ்ச்சியாக அந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளியானது.
ஆனால் சில மாதங்களிலேயே அந்த உறவு முறிந்து போனதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் அந்த திருமணம் நடைபெறவில்லை. இதனால் அந்த நிச்சயதார்த்தம் குறித்து மீண்டும் பேசப்படாமல் அமைதியாகவே அந்த விஷயம் முடிந்து போனது.

தற்போது வைரலாகும் நயன்தாரா பதிவு
இப்போது விஜய் மற்றும் திரிஷா தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ள நிலையில், நயன்தாரா வெளியிட்ட அந்த பழைய பதிவு மீண்டும் வைரலாகி வருகிறது. பலர் அந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து "2015ல் நிச்சயதார்த்தம் நடந்தது... இப்போது என்ன நிலை?" என்று கேள்வி எழுப்பி பகிர்ந்து வருகின்றனர். சிலர் திரிஷாவுக்கு எங்கேஜ்மென்ட் நின்றதற்கு காரணம் விஜய் தானா என்றும் கமெண்ட் போட்டு இருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் விஜய் திரிஷா நண்பர்கள் தான் அவர்களை தவறாக பேச வேண்டாம் என்றும் பதில் கொடுத்து வருகின்றனர்.
விஜய்-திரிஷா புகைப்படம் கிளப்பிய விவாதம்
இதற்கிடையில் திருமண விழாவில் விஜய் மற்றும் திரிஷா ஒன்றாக நின்ற புகைப்படங்களும் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் இருவரையும் ஆதரித்து கருத்து தெரிவிக்க, மற்றொரு தரப்பு விமர்சனங்களையும் பதிவு செய்து வருகிறது.
சில ரசிகர்கள் "பல வருடங்களாக நண்பர்களாக இருக்கும் இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு சேர்ந்து போவது பெரிய விஷயம் அல்ல" என்று கூறுகின்றனர். ஆனால் இன்னொரு தரப்பு ரசிகர்கள் "இப்போது விவாகரத்து சர்ச்சை நடக்கும் நேரத்தில் இப்படியான விஷயங்கள் தேவையில்லாமல் பேசப்படுவதற்கு காரணமாகிறது" என்று விமர்சித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தொடரும் விவாதம்
இந்த விவகாரத்தில் இதுவரை நடிகர் விஜயோ அல்லது நடிகை திரிஷாவோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துகளும் யூகங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
அதே நேரத்தில், பழைய சம்பவங்கள் முதல் தற்போதைய புகைப்படங்கள் வரை பல விஷயங்களை ரசிகர்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து விவாதித்து வருவது இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்பாக மாற்றி இருக்கிறது.
-
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..












Click it and Unblock the Notifications