நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தேவை இல்லை.. நான் அப்பவே சொன்னேனே.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஓபன்
சென்னை: நடிகை நயன்தாரா சில தினங்களுக்கு முன்பு தன்னை இனி யாரும் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்க வேண்டாம் என்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நான் 2017இல் நயன்தாராவிற்கு இந்த பட்டம் தேவையில்லை என்று சொன்னேன். அதற்கு காரணம் இதுதான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சின்னத்திரையில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நயன்தாரா இப்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா இருக்கும் நிலையில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

லேடி சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து
ஆனால் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது தனக்கு விருப்பமில்லை என பல பேட்டிகளில் நயன்தாரா கூறியிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு இது பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது, நான் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவளாக என்னை வளர்த்துக் கொண்டேனா என்று எனக்கு தெரியாது. இன்னும் அந்த பட்டத்திற்காக நான் நிறைய வளர வேண்டியது இருக்கு. அதற்கு பிறகு தான் அந்த பட்டம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
நயன்தாரா வெளியிட்ட அறிக்கை
அதற்கு பிறகும் சமீப காலமாகவே நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் அவருடைய பெயருக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டு வருகிறது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இனி ரசிகர்களும், இயக்குனர்களும் யாராக இருந்தாலும் சரி என்னை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று அழைக்க வேண்டாம். நயன்தாரா என்ற அழைத்தாலே போதும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நயன்தாரா பற்றி விமர்சனங்கள்
இது அதிகமான விமர்சனங்களை சந்தித்தது. சிலர் நயன்தாரா எடுத்த முடிவை பாராட்டி வந்தனர். சிலர் நயன்தாராவை அப்படியெல்லாம் யாரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று யாரும் கொண்டாடவில்லை. அவருடைய கணவர் மட்டும் தான் அவரை அப்படி அழைக்கிறார் என்று விமர்சனங்களும் வைத்தனர். ஆனாலும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு நயன்தாரா செவி கொடுக்காமல் அடுத்தடுத்து பிஸியாகவே இருக்கிறார்.
நயன்தாராவின் வளர்ச்சி
சமீபத்தில் கூட இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பட பூஜையில் கலந்து கொண்டார். அந்த படபூஜையிலேயே முதல் நாள் சூட்டிங் தொடங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் பிரமாண்டமான ஸ்டுடியோ ஒன்றை திறந்து உள்ளதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் போட்டிருந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்
நடிகையாக மட்டுமல்லாமல் பட தயாரிப்பு மற்றும் தொழில்முறையில் பல புதிய முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் நயன்தாரா ஸ்கின் கேர் புரொடக்ஷனை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் பேசும் போது சமீபத்தில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தேவை இல்லை என்று சொன்னபோது சிலர் விமர்சித்திருந்தார்கள்.

சொன்னது நடந்து விட்டது
நான் 2017 இல் அறம் என்ற திரைப்படம் வரும்போது ஒரு டுவிட் போட்டு இருந்தேன். நயன்தாரா நல்ல டேலெண்டான நடிகை அவங்களுக்கு இந்த லேடி சூப்பர் ஸ்டார் என்ற சுமையை கொடுத்தீங்கன்னா அதுக்கு அப்புறம் அந்த பட்டத்துக்கு தகுந்த மாதிரி படத்தை தான் அவங்களால பண்ண முடியும். அதனால நாம நல்ல ஒரு நடிகையை இழந்துருவோம் என்று நான் போஸ்ட் போட்ட போது பல பேர் என்ன அட்டாக் பண்ணுனாங்க.
பட்டம் தேவையில்லை
ஆனா இப்போ என்ன நடந்திருக்கு? ஒரு தியேட்டர்ல போய் ஆடியன்ஸ அட்ராக்ட் பண்ற அளவுக்கு அவங்க நிக்கணும்னா அது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா? அது ஈஸியானது இல்லல. அதை அவங்க பண்ணி இருக்காங்க. நயன்தாரா மட்டும் அல்ல மஞ்சு வாரியர், வித்யா பாலன் என ஒரு சிலரால் மட்டும் தான் இப்படி வித்தியாசமாக பண்ண முடியும். அதில் நயன்தாராவும் ஒருவர்தான் ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுக்கும் போது அவருடைய மற்ற திறமைகள் வெளியே வராமல் போய்விடும் என்று அந்த பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications