ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா! அய்யா ஆடிஷனுக்கு ஆம்னி பஸ்ஸில் வந்த நயன்தாரா! பிரபலம் சொன்ன ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்பு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது இந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. அவரது கணவர் விக்னேஷ் சிவன், புதுச்சேரியில் அரசு ஓட்டலையே விலைக்கு கேட்டு அதிர வைத்திருக்கும் நிலையில், ஐயா படத்துக்கு நயன்தாரா ஆடிஷனுக்காக ஆம்னி பஸ்ஸில் வந்திறங்கினார் என கூறியுள்ளார் பிரபலம் ஒருவர்.

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. தமிழில் விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சிம்பு, அஜித், ஜெயம் ரவி என சீனியர் ஜூனியர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார்.

television nayanthara

பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகரான தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணம் தொடர்பான ஆவணப்படம் "Nayanthara: Beyond the Fairy Tale" என்ற பெயரில் நாளை மறுநாள் நெட் ப்ளிக்சில் வெளியாகியுள்ளது.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவண படம் வெளியாகாமல் இருந்து நிலையில் தனுஷ் தான் இந்த விவகாரங்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றிய போது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனால் தங்கள் திருமணம் தொடர்பான ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இருந்து சில வரிகளையும் காட்சிகளையும் பயன்படுத்த தனுஷிடம் நயன்தாரா அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வந்ததாகவும் இறுதியாக அதனை பயன்படுத்தக் கூடாது என கூறியதாகவும் கூறப்படுகிறது. தன் மீதான தனிப்பட்ட வெறுப்பால் நானும் ரவுடிதான் படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்த தனுஷ் தடை போட்டதாக குற்றம் சாட்டிய நயன்தாரா, ஸ்ப்ரெட் லவ் என்பதை வெறும் வார்த்தையாக மட்டுமின்றி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து இந்த விவகாரம் ஓய்ந்து போய் இருக்கும் நிலையில் எதிர்பார்த்த அளவு நெட்பிளிக்ஸில் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் கல்லா கட்டவில்லை என கூறப்படுகிறது. இருந்த போதும் அதிகாரப்பூர்வமாகவே 50 கோடி ரூபாயை நெட்பிளிக்ஸிடம் பில் போட்டு இருக்கிறார் நயன்தாரா எனக் கூறுகின்றனர்.

television nayanthara

இந்த நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் செயலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. நேற்று முன் தினம் புதுச்சேரி சென்ற அவர் அங்குள்ள அரசு ஓட்டலை விலைக்கு கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அமைச்சர் அரசு ஓட்டலை விற்க முடியாது எனக்கூறி இருக்கிறார். மேலும் கடற்கரை பகுதிகளையாவது தாருங்கள் என கேட்க அது அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் 'இப்ப நான் எதையாவது வாங்கணுமே' என கவுண்டமணி போல விக்னேஷ் சிவன் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சரத்குமார் நடித்த ஐயா படத்துக்கு ஆடிஷனுக்காக சென்னைக்கு ஆம்னி பஸ்ஸில் வந்தவர் நயன்தாரா. என பழைய வரலாற்றை கிளறி இருக்கிறார் பிரபல சினிமா விமர்சகர் ஆன வலைப்பேச்சு பிஸ்மி. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர்,"அய்யா படத்தின் ஆடிஷனுக்காக கேரளாவிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு ஆம்னி பஸ்ஸில் வந்திறங்கிய நயன்தாராவுக்கு இன்றைக்கு தனிவிமானத்தில் பயணிக்கும் அளவுக்கு சுகபோக வாழ்க்கை." என பதிவிட்டுள்ளார்.

மேலும், தனி சார்டர்ட் விமானத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார். தற்போது அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+