தனுஷ் பற்றி நயன்தாரா போட்ட போஸ்ட்.. பரவி வரும் சர்ச்சை..! ஆர்.ஜே பாலாஜி கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா தனுஷ் பற்றி சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் போஸ்ட் ஒன்று போட்டு இருந்தார்‌ அதற்குப் பிறகு தனுஷ் மற்றும் நயன்தாரா பற்றி பல்வேறு செய்திகள் பரவி வருகிறது இந்த நிலையில் இது பற்றி நடிகர் ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இது அதிகமான கமெண்ட் பெற்று வருகிறது.

நடிகை நயன்தாரா அவருடைய கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனின் காதல், திருமணம் குறித்த ஒரு தொடர் நெட் பிலிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அது சம்பந்தப்பட்ட பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள அந்த தொடரில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட நானும் ரௌடி தான் என்ற படத்தில் இருந்து சில காட்சிகள் பயன்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

nayanthara dhanush

அதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷின் அனுமதி கேட்டபோது இரண்டு வருடங்களாக தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகவும், தான் ட்ரைலரில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பாடலை மூன்று வினாடிக்கு வீடியோ பயன்படுத்திக் கொண்டதற்காக பத்து கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார் என்று தனுஷை கண்டித்து மூன்று பக்க அறிக்கை ஒன்றை நயன்தாரா வெளியிட்டு இருந்தார்.

நயன்தாராவிற்கு ஆதரவாக அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதோடு நயன்தாரா வெளியிட்ட அந்த பதிவை பல நடிகைகளும் லைக் செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக நடிகர் தனுஷோடு நடித்த பல நடிகைகள் நயன்தாராவின் போஸ்ட்க்கு லைக் செய்ததால் தனுஷ் மீது தான் தப்பு என்கிற ரீதியில் பல செய்திகள் வலம் வந்தது.

கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்சனை இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. இணையத்தில் அதிகமான ரசிகர்கள் தனுசுக்கு ஆதரவாக நயன்தாரா பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள். சில ரசிகர்கள் நயன்தாராவிற்கு ஆதரவாக தனுஷ் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். இந்த நிலையில் பாடகி சுசித்ரா தனுஷ் தனக்கு பிடிக்காதவர்கள் இமேஜை தொடக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர் அவர் ஒரு சைக்கோ என்றெல்லாம் பேசி இருந்தார்.

இதுவும் தனுஷ் ரசிகர்களை மேலும் கோபத்திற்கு ஆளாக்கியது. இந்த நிலையில் நயன்தாராவோடு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து அந்த படத்தை இயக்கிய ஆர் ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் நயன்தாரா மற்றும் தனுஷ் விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில், ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். அதுபோல கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கே கொண்டாட்டம். தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சிறந்த நடிகர்கள். பல விஷயங்கள் தெரிந்தவர்கள். கட்டாயம் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வார்கள். இதில் மக்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று அவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ஆர்.ஜே பாலாஜி கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? தனுஷ் பற்றி சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் நயன்தாரா சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டது சரியா? நயன்தாராவிற்கு பதில் சொல்லாமல் தனுஷ் அமைதி காப்பது சரியா? உங்க கருத்தை தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+