சில்லு சில்லாக மனமுடைந்து பேசும் நஸ்ரியா.. பகத் பாசிலுடன் இணைந்து குணமாகி மீண்டு வந்துடுங்க: பிரபலம்
சென்னை: கடந்த சில மாதங்களாகவே நான் என்னுடைய உடல் நலம் மற்றும் மனநலம் குறித்த சவால்களை எதிர்கொண்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு போராடி வருகிறேன். தற்போது ஓரளவுக்கு அதிலிருந்து மீண்டும் வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுவேன் என்று நஸ்ரியா தெரிவித்திருக்கிறார்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
King Voice யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நஸ்ரியாவை பொறுத்தவரை மிகச்சிறந்த நடிகை.. அவரது அம்மா, அப்பா அரேபிய தூதரகத்தில் இருந்தவர்கள்.. பிறகு திருவனந்தபுரத்துக்கு வந்துவிட்டார்கள்.. திருவனந்தபுரத்தில பிறந்து வளர்ந்தவர் நஸ்ரியா.. நடிப்பில் ஆர்வம் மிகுதியால், திருவனந்தபுரத்தில் டிவி நிலையத்தில் தொகுப்பாளராக வேலை கிடைத்துள்ளது..

மலையாளத்திலிருந்து பெரும்பாலான நடிகைகள், குறிப்பாக, நயன்தாரா, நஸ்ரியா, பிரியாமணி, பாவனா இவர்கள் எல்லாருமே தொலைக்காட்சி தொகுப்பாளர்களாகவோ அல்லது செய்தி வாசிப்பாளராகவோ இருந்துதான், நடிக்க வந்துள்ளார்கள்.. இப்படித்தான் மோகன்லால் நயன்தாராவை டிவியிலிருந்து நடிக்க அழைத்து வரசொல்லி உள்ளார்..
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்
அதுபோல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் நஸ்ரியா.. தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறார்.. முதல் படத்தில் பகத் பாசிலுடன் சேர்ந்து நடித்தார். அப்போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
பகத் பாசிலும், நஸ்ரியாவும் சினிமாவில் உள்ளதாலும், பகத் பாசிலும் இஸ்லாமியர், நஸ்ரியாவும் இஸ்லாமியர் என்பதாலும், இவர்களது காதலுக்கு இரு வீட்டிலுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நன்றாகவே வாழ்க்கையை துவங்கினார்கள்.. ஆனால், இவர்களுக்கு குழந்தை இல்லை.
மன உளைச்சல்கள்
இப்போது திடீரென நஸ்ரியா, "நான் கிட்டத்தட்ட ஒரு வருடமாக யாருடனும் தொடர்பில்லாமல் இருக்கிறேன்.. என்னுடைய தோல்வியை கூட பேசுவதில்லை.. ஒரு வருடம் முன்பு நான் நடித்த படத்தின் வெற்றி விழாவிலும் கலந்துகொள்ளவில்லை.. ஏனென்றால், நான் தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலையும், மன வேதனையையும் அனுபவித்து கொண்டிருக்கிறேன்..
விவரிக்க முடியாத சூழ்நிலைகள் உள்ளதால், காரணங்களை சொல்ல முடியவில்லை. இதிலிருந்து மீள போராடி கொண்டிருக்கிறேன்.. மீண்டு வருவதற்கான விஷயங்களை தேர்ந்தெடுத்துள்ளேன்" என கூறியிருக்கிறார்.
மீண்டு வருவதற்கான விஷயங்களை தேர்ந்தெடுத்ததாக சொல்கிறார் என்றால், இப்போதுள்ள வாழ்க்கையிலிருந்து விலகி கொள்கிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது.
மனநோயாளிகள் இல்லம்
ஒரு வருடத்தக்கு முன்பே கேரளாவில் மனநோயாளிகள் இல்லத்துக்கு சென்றிருந்தார் பகத் பாசில்.. அங்கே பேசும்போது, "நானும் ஒருவிதமான மனநோயாளிதான்.. எனக்கு சிலசமயம் ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கத்தறேன்.. என்ன செய்றேன்னு எனக்கே தெரியல.. ஒரு மணி நேரம் கழித்துதான், என்னுடைய இயல்பு நிலைமைக்கே திரும்புகிறேன், உங்களை எல்லாம் பார்க்கும்போது, அதிலிருந்து நானும் மீள்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது" என்று கூறியிருந்தார்.
ADHD என்று அதற்கு பெயர்.. மூளை நரம்பு லேசாக பாதிக்கப்பட்டிருக்கும்.. இதற்கு சிகிச்சையுடன், எப்போதுமே தனியாக இல்லாமல், நண்பர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும், தியானம் செய்ய வேண்டும் என்பார்கள்..
அந்தவகையில், 1 வருடமாக பகத்பாசிலை வீட்டிலிருந்தே பாதுகாத்துள்ளார் நஸ்ரியா.. ஒரு மனைவி எவ்வளவுதான் பொறுத்து கொள்ள முடியும்? நஸ்ரியா இப்போது நினைத்தாலும் வருடத்துக்கு 10 படங்களில் நடிக்க முடியும்.. அவ்வளவு டிமாண்டு இன்றும் உள்ளது. ஆனால், ஒரு வருடத்துக்கு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது ஒரு வருடம் கழித்து, தன்னுடைய மவுனத்தை கலைத்து இப்படியொரு பேட்டியை நஸ்ரியா தந்துள்ளார்..
என்ன மாதிரியான விடுதலை
மன உளைச்சலிலிருந்து விடுபட வேண்டுமானால், என்ன மாதிரியான விடுதலை? விவாகரத்தா? அல்லது வெளிநாட்டில் செட்டில் ஆகப்போகிறாரா? என தெரியவில்லை. ஆனால், கணவனுக்கு குணமாக வேண்டும், பழையபடி அவர் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கிறார் நஸ்ரியா.. இவர்கள் 2 பேரும் விவாகரத்து செய்வதையும் நாம் விரும்பவில்லை.. ஆனால் நஸ்ரியா பேச்சில், விவாகரத்து வாடை அடிக்கிறது.
எது எப்படியோ, பகத் பாசிலும், நோயிலிருந்து விடுபட வேண்டும். நஸ்ரியாவும் மனஉளைச்சலிலிருந்து விடுபட வேண்டும்.. இருவருமே குணமாகி, இருவருமே படங்களில் நிறைய நடிக்க வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications