விஜய் டிவி பிரைம் டைம் சீரியலில் இவருக்கு பதில் இவர்.. அறிமுகமாகும் தெய்வ மகள் சீரியல் நடிகர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகர் "ஷர்வன்" "மனோகர்" என்ற கேரக்டரில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று சீரியலில் இருந்து விலக அவருக்கு பதிலாக தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் "அரவிந்த்" அறிமுகமாகி இருக்கிறார்.
அந்த வகையில் சின்ன திரையில் இவருக்கு பதில் இவர் என்று நடிகர்கள் மாறிக்கொண்டு இருப்பது சர்வ சாதாரணம் தான். காரணம் சீரியல்கள பல வருடங்களாக தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் பலராலும் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விடுகிறது. ஒரு சிலருக்கு தொடர்ச்சியான அடுத்தடுத்த வாய்ப்புகள் இருப்பதாலும் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்களில் தொடர முடிவதில்லை.

அதுபோல இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நீ நான் காதல்" என்ற சீரியலில் நடித்து வந்த நடிகருக்கு பதிலாக நடிகர் அரவிந்த் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் ஏற்கனவே தெய்வமகள் சீரியல் மூலம் பலருக்கும் பரீட்சையமானவர் தான். தெய்வமகள் சீரியலில் ராஜு கேரக்டரில் பொறுப்பு இல்லாத குடிகாரராக இருந்த நிலையில் கடைசியில் அவர் மனம் திருந்தி தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவிக்காக வேலைக்கு போக தொடங்கியிருப்பார்.
தெய்வமகள் சீரியலில் இவருடைய கேரக்டர் பெரிய அளவில் பிரபலமானது. ஆனால் அதற்குப் பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்போது சமீபத்தில் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நினைத்தாலே இனிக்கும்" என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் "பாக்கியலட்சுமி சீரியலில்" கோபியின் நண்பராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில்தான் நடிகர் அரவிந்தக்கு நீ நான் காதல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் தான் விஜய் டிவியில் நீ நான் காதல் என்ற சீரியல் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் 70 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் மனோகர் என்று கேரக்டரில் நடித்து வந்த ஷர்வன் என்பவர் அதாவது ஆகாஷின் தந்தையாக நடித்து வந்தவருக்கு பதிலாக அரவிந்த் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதுபோல இந்த சீரியலுக்கு வெளியான ப்ரோமோவில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகன் முத்துவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் ஆகா கல்யாணம் சீரியல் கதாநாயகியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ப்ரோமோவும் இணையத்தில் அதிகமாக வரவேற்பு பெற்று வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications