இயக்குனர் கேட்ட கேள்வி.. தப்பான முடிவுக்காக ஆட்டோவில் அழுதேன்.. ரகசியத்தை உடைத்த விஜய் டிவி நடிகை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை விஜே தனுஷிக் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் தான் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நிலையில் பட்ட அவமானங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி, அதில் நடிக்கும் நடிகர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வாய்ப்புகள் கிடைத்திருக்காது. ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் அவமானங்களை தாண்டி தான் பலர் சாதித்து இன்று பலர் பிரபலமாக இருக்கிறார்கள். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புக்காக அதிகமானோர் சாப்பாடு தூக்கமில்லாமல் அலைந்தவர்கள் ஏராளம்.

அதுபோல ஒரு சில நடிகைகள் தங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் அச்சஸ்மெண்ட் பிரச்சனை மற்றும் உருவகேலி பிரச்சனைகளையும் சந்தித்து இருப்பார்கள். அது குறித்து பல வருடங்களுக்கு பிறகு சிலர் வெளியே சொல்லும் போது தான் பலருக்கும் தெரியவரும். அந்த மாதிரி தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை தனுஷிக் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், என்னோட சொந்த ஊர் ஸ்ரீலங்கா தான். அங்கு மீடியாவில் வேலை பார்த்து வந்தேன். அப்போது என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய லட்சியங்களை அடைய வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். அங்கு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தேன். முதலில் சென்னைக்கு வந்தபோது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் ஸ்ரீலங்காவில் இருக்கும் போது பிரபல தொலைக்காட்சியில் சீரியலில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கொரோனா காலகட்டம் என்பதால் என்னால் வர முடியவில்லை. இதனால் அந்த வாய்ப்பை நான் தவற விட்டு விட்டேன். பிறகு வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த போது வாய்ப்பு கிடைக்காமல் சாப்பாடு தூக்கமில்லாமல் இருந்தேன்.
அந்த நேரத்தில் அன்பே வா சீரியலில் ஜோதி கேரக்டரில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, இப்போ நீ நான் காதல் சீரியலில் நடித்து வருகிறேன். அதுபோல கார்த்திகை தீபம் சீரியலிலும் நடித்திருக்கிறேன். என்னுடைய பிரண்டு ஒருவருடைய வீட்டில் தங்கி இரண்டு தான் ஆரம்பத்தில் நான் வாய்ப்பு தேடி அலைந்தேன்.

அப்போ ஒரு முறை பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளர் வேலைக்கான ஆடிஷன் நடந்தது. அதில் நான் கலந்து கொண்டேன். அப்போ நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். அந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளியி வேலை பார்க்க நான் குண்டாக இருந்ததால் சர்ஜரி பண்ணிட்டு வரீங்களா? அப்படின்னு என்னிடம் கேட்டார்கள்.
எனக்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டால் பரவாயில்லை ஆனால் சர்ஜரி பண்ணிட்டு வருமாறு கூறியதுதான் வேதனையாக இருந்தது. என்னை உருவகேலி செய்வதாக நினைத்து நான் வருந்தினேன். நான் வந்த ஆட்டோவில் உட்கார்ந்து பல மணிநேரம் அதை நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தேன். அப்போது நாம இந்த ஃபீல்டை தேர்வு எடுத்தது தவறான முடிவோ என்று நினைத்தேன்.
அதற்கு பிறகு தான் எனக்கு அன்பே வா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலமாக இப்போது நீ நான் காதல் சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் மூலமாக எனக்குன்னு ஒரு பிரபலம் கிடைக்க தொடங்குகிறது என்று அந்த பேட்டியில் நடிகை தனுஷிக் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் தனுஷிக் அந்த சீரியலில் கதாநாயகனின் அக்காவாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு இயல்பாக இருப்பதாக இவருடைய பேட்டிக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications