தழைய தழைய சேலை கட்டி.. மொட்டை மாடியில்.. சிலிர்க்க வைத்த நீலிமா!
சென்னை: எந்த நேரத்திலும் இது தான் எனக்கு பிடிக்கும் என புடவையைக் கட்டிக்கொண்டு கலக்கலாக மொட்டை மாடியில் குத்துக்காலிட்டு போட்டோஸ் வெளியிட்ட நீலிமாவை பார்த்ததும் இன்ப ஷாக் ஆகி விட்டார்கள் ரசிகர்கள்.
ஜிங்குச்சா ஜிங்குச்சா சிகப்பு கலரு ஜிங்கிச்சா ....கண்ணைப் பறிக்கும் சிவப்பு கலரில் புடவையை அணிந்து சிலுசிலுக்கும் அழகை காட்டி ரசிகர்களை அதிர வைத்திருக்கும் நீலிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது .
இதற்கு முன்பு இவர் பல மாடல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும் தற்போது அதை எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் அளவில் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இருப்பதால் ரசிகர்கள் பலர் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

வாலிபம் போகலையே
என்னதான் இருந்தாலும் ஒரு சிலருக்கு தான் வயசானாலும் வாலிபம் போவதில்லை அந்த மாதிரி தான் தற்போது இவரும் இருந்து வருகிறார் .இவர் சீரியலில் காலடி எடுத்து வைத்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும் சீரியலில் இப்ப வரைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சைட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சீரியல் தயாரிப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .

சூப்பர் கேரக்டர்
இவருடைய திறமையை நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் இவர் தன்னுடைய மனதிற்கு சந்தோஷம் தரும் மாடலிங்கை விட்டுவிடுவதாக இல்லை. அதனால் தான் இதற்கு முன்பு ஊர் ஊராக சுற்றி போட்டோஸ் எடுத்தவர்கள் தற்போது வீட்டு மொட்டை மாடியில் போட்டோஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றியிருந்தாலும் இப்ப வரைக்கும் இவர் நடித்த தேவர்மகன் , விரும்புகிறேன் ,பாண்டவர்பூமி என பல திரைப்படங்களிலும் இவருடைய குழந்தைப்பருவ நடிப்பு அழகாக இருக்கிறது.

கோலங்கள்
2002இல் மெட்டி ஒலி சீரியல் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்தவர் .கோலங்கள் அத்திப்பூக்கள் ,செல்லமே ,தென்றல் வாணி ராணி என பல சீரியல்களில் இப்ப வரைக்கும் நடித்துக்கண்டிருக்கிறார். இதுவரைக்கும் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துக் கொண்டிருந்த இவர் அரண்மனைக்கிளி ,தலையணை பூக்கள் சீரியல் மூலமாக வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார் .

வில்லியாகவும் அசத்தல்
என்னால் பாசிட்டிவ் கேரக்டரில் மட்டுமல்லாமல் நெகட்டிவ் கேரக்டரில் கலக்க முடியும் என சீரியலில் இவருடைய திறமையை நிரூபித்திருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள் மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை சீரியலின் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். ஒரு பெண்ணால் மாடலாகவும், நடிகையாகவும், தயாரிப்பாளராகவும், குடும்பத் தலைவியாகவும் பல முகங்களை காட்ட முடியும் என நிரூபித்தவர்.

வயசு இப்படி குறையுதே
தற்போது நடத்திய போட்டோ சூட்டில் இவரைப் பார்த்து எல்லோருக்கும் வருடங்கள் போகப்போக வயது அதிகமாகிக் கொண்டே போகும் ஆனால் இவருக்கு மட்டும் வயது ஆக ஆக இளமை கூடிக்கொண்டே போகிறது. அது எப்படி என சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர் .ஆனாலும் மொட்டை மாடியில் சிரித்தபடியே தலைகுனிந்தபடி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீ போல பற்றிக்கொண்டு எரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications