அட.. நீலிமா ராணிக்கு கல்யாணமாகி 12 வருஷமாச்சா.. கணவரோடு கொண்டாட்டம்!
சென்னை: பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் சீரியலில் தனக்குன்னு ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நீலிமா ராணி என்றும் 20 வயது பெண் போல மிகவும் அழகாக இருக்கிறார்.
நீலிமாவின் அந்த பாந்தமான அழகு முகத்திற்கும், சிரிப்புக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. இந்த நிலையில், தனது 12-வது திருமண நாளை கொண்டாடி அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கிறார் நீலிமா.
சிறுவயதிலேயே திருமணம் செய்து குழந்தையும் பிறந்த பிறகு மீண்டும் சின்னத்திரையில் வில்லியாகவும் கதாநாயகியாகவும் நடித்து தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நீலிமாராணி.

நடிப்பு ராணி
நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறார். பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அழகாக இன்னமும் தன்னுடைய அழகை மெயின்டைன் பண்ணிக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணிக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நல்ல தம்பதி
நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டுக் கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக் கொம்பாகி விட அதிஷ்டமும் இருந்து திறமையும் இருப்பதால் இன்னமும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல்களில் கலக்கல்
தலையணைப் பூக்கள், அரண்மனைக்கிளி போன்ற பல சீரியல்களில் வில்லியாக கலக்கி கொண்டிருந்தாலும் இவருக்கு நடிப்பின் ஆசை இன்னமும் தீரவில்லையாம். அதுவும் நடிப்பதில் இருந்து இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். நடித்துக் கொண்டிருந்த சீரியல்களில் இருந்து விலகிவிட்டார். வில்லியாகவும் காதலியாகவும் மனைவியாகவும் தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றிருந்தாலும் சினிமாவில் வெற்றி பெறவேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறாறாராம்.

பிடித்த இயக்குநர்கள்
இவருக்கு டைரக்டர் மிஸ்கின் டைரக்ட் பண்றது ரொம்பவும் வித்தியாசமாகவும் பிடித்ததாகவும் இருக்குமாம். அதேபோல ராதா மோகன் அவர்கள் டைரக்ட் பண்ணுவதும் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அவர் வொர்க் பண்றதே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கும். யாரையும் அதட்டி கூட பேச மாட்டார். அதனால் அவருடைய கேரக்டர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் அவதாரம்
பல டைரக்டர்களின் அனுபவங்களையும் வைத்தும் தான் இவர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்குகிறார் என்றும் கூறியிருக்கிறார். இவர் நடிகராக இருப்பதற்கு விடவும் தயாரிப்பாளராக இருப்பது தான் ரொம்பவும் கஷ்டமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். ஆனாலும் அது எனக்கு பிடித்தது என்றும் சொல்லியிருக்கிறார். இவர் முதல் முதலில் தேவர் மகன் நடித்தது இன்னமும் அவருக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கிறதாம்

சிவாஜியுடன் நடித்த அனுபவம்
அந்த படத்தில் நடிக்கும்போது சிவாஜி கணேசன் வரும் போது அனைவரும் கடவுளைப் பார்ப்பது போன்று மிகவும் மரியாதையாக பார்ப்பார்கள். அப்போ என்னை அறியாமல் அவர் மீது ஒரு சின்னதா ஒரு பயம் இருக்கும். ஆனால் அவர் பேசும்போது அவ்வளவு பாசமாக அனைவரிடமும் பேசுவார். அதுமட்டுமில்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரேவதி அனைவரையும் வட்டமாக உட்கார வைத்து பந்து போட்டு எல்லாம் விளையாடுவார்களாம் . அதுவும் அந்த ஆறு வயதில் நடந்தது இன்னும் மனதில் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

குறையாத காதல்
இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். ஆனாலும் மனசு அப்படி பொருத்தமாம் இருவருக்கும். இவர்களது திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணமாம். அவரது கணவர் ஒரு தமிழர், இவர் தெலுங்கு, 21 வயதில் அவரை காதலித்து முதல் முதலில் இவர் தான் அவர் கணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம். ஆனால் இந்த நாள் வரைக்கும் இருவருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சந்தோசமாக இந்த திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

அழகுக் குழந்தை
இவர்களது திருமணம் மட்டுமல்ல அவர்களது குழந்தை கூட அவரது விருப்பத்தின்படி தான் பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் இவரது தந்தை இறந்துவிட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்துவிட்டு பிறகு தான் நமக்கு குழந்தை என்று கணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

உடன்பிறப்பு பாசம்
அதன்படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் ஒன்பது வருடம் கழித்து இவர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும் பெண் குழந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர். அந்த பெண் குழந்தை எங்கள் காதலின் அடையாளம் மற்றும் எங்கள் முழு சந்தோஷமும் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் நீலிமா ராணி. இவர் வாணி ராணியில் நடித்த நடிப்பைப் போலவே தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.. நிறைவேத்துங்க நீலிமா.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications