நீலிமா மூக்கிலேயே குறியா இருக்காங்களே எல்லாரும்.. !

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நீலிமாவுக்கு தனி ரசிகர் வட்டம் உண்டு .எத்தனை வயசானாலும் இன்னும் அழகா இருக்கீங்களே என்று உருகாத ரசிகர் கிடையாது.

டிவி சீரியலில் ஆரம்பித்த அவரது வாழ்க்கை சினிமாவிலும் கூட ஜொலிக்கவே செய்தது .டிவி சீரியல் நடிகையான நீலிமா இப்போது சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.

இந்த நேரத்தில்தான் அவரது போட்டோஷூட்கள் வைரலாக ஆரம்பித்தன. சின்னப் புள்ளைங்க மட்டும்தான் கலக்க முடியுமா.. நானும் பண்ணுவேனே என்று அவர் இறங்கி அடிக்க பயங்கர பாப்புலராகி விட்டது அவரது போட்டோக்களும்.

ஸ்டைலான மூக்குத்தி

ஸ்டைலான மூக்குத்தி

குட்டி குட்டி கவுனுடன், ஸ்டைலான மூக்குத்தியுடன் என்று விதம் விதமாக போட்டோஸ் போட்டு போஸ்ட்டுகளாக போட்டுத் தாக்கினார் நீலிமா .இப்ப அவரது மூக்குத்திதான் டிரெண்டாகியுள்ளது .பலரும் அவரது மூக்குத்தியைப் புகழ ஆரம்பித்து விட்டனர். அதை ஏன் கேக்கறீங்க அவரது மூக்கழகை வைத்து கவிதைகளை ஆறாக கொட்டி கொண்டிருக்கிறார்கள் பலர்.

மனசைக் கவர்ந்த மூக்கு

மனசைக் கவர்ந்த மூக்கு

அதுல பாருங்க ஒரு ரசிகர் ரொம்ப உருகிப் போய் வழிந்தெடுத்துள்ளார். அதாவது, "ஸ்டாபரி நிற உதடு
புதுசா ரோடு போல புருவம் மலைவீழ் அருவிபோல கூந்தல் மையிட்ட விழிகள் ஆனா என் மனசுக்கு தெரிவதென்னமோ அந்த குட்டி மூக்குத்தி...அழகுல்ல... என்று அவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நமக்கே கூச்சமா இருக்குங்க.

செம மூக்குத்தி

செம மூக்குத்தி

இன்னொருருத்தரும் அதேபோல அவரது மூக்கைக் குறி வைத்து அழகான வரிகளைப் போட்டுள்ளார். அதாவது வெரி குட் மார்னிங் என்னோட பேவரைட் நடிகை நீங்கதான். டிரஸ் சூப்பரா இருக்கு. அதை விட உங்க மூக்குத்தி ரொம்ப சூப்பருங்க. என்ஜாய்ங்க் என்று கூறி பாதுகாப்பாவும் இருங்க என்று பாசத்தையும் சேர்த்துக் குழைத்துக் கொடுத்துள்ளார். ரொம்ப புண்ணியம் செஞ்சவங்கதான் நம்ம நீலிமா என்ன சொல்றீங்க

முத்தழகு

முத்தழகு

இன்னொருத்தர் விஜயகாந்த்ப் படப் பாடலைப் பாடியே விட்டார். அதாங்க அந்த மூக்குத்தி முத்தழகு என்ற பாடல் வரிதான். அதைப் போட்டு வழிந்துள்ளார். அந்த அளவுக்கு நீலிமாவின் மூக்கு ரொம்பவே ஈர்க்குது போல நம்ம ரசிகர்களை. அதிலேயே குடிசை போட்டு குத்த வைத்து உட்கார்ந்து விட்டனர் பலரும். சும்மா சொல்லக் கூடாது. மூக்குத்தி போடவும் நீலிமாவுக்கு தனி கவர்ச்சியே வந்து விட்டது. அதுதான் பலரை ஈர்க்குது போல.

குட்டி கவுனில் க்யூட்

குட்டி கவுனில் க்யூட்

தனது சகோ பட புரமோஷனுக்காக குட்டி கவுன் போட்டு படு தூக்கலான அழகுடன் காட்சி தருகிறார் நீலிமா .இதுதொடர்பான புகைப்படங்களும் கூட அவர் இப்ப போஸ்ட் போட்டுள்ளார். அதையும் தூசி தட்டி தூக்கி வைத்து கொ ண்டாடிக் கொண்டுள்ளனர் ரசிகர்கள் . பழைய டிவி நடிகைகள் பலரும் பீல்ட் அவுட் ஆனாலும் கூட இன்று வரை நீலிமா நச்சென்று ரசிகர்கள் மனதில் நிற்கும் ரகசியம் என்னன்னுதான் தெரியலை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+