இனிமே இதெல்லாம் சொல்லக்கூடாது.. பெண்ணை விளாசிய கோபிநாத்.. பல்பு வாங்கிய தருணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மூன்றாவது ப்ரோமோவில் பெண் ஒருவர் தனக்கு தங்க நகைகள் கூட தேவை இல்லை சாப்பாடு தான் முக்கியம் என்று சொன்ன வார்த்தைக்கு கோபிநாத் எதிர்பாராத செயலை செய்து இருக்கிறார்.

அதே நேரத்தில் இந்த வார எபிசோட் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பெண்கள் அதை எதிர்க்கும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது அது பற்றி விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலயே கிட்டத்தட்ட 10 வருடங்களை தாண்டி நீயா நானா நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியில் என்ன தலைப்பு விவாதம் நடக்கப் போகிறது என்று பலர் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் சமுதாயத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் பிரச்சனை குறித்து தான் விவாதம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இணையத்தில் உணவு ஆர்டர் செய்யும் பெண்களும், அதை வேண்டாம் என்று எதிர்க்கும் கணவர்மார்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் பல பெண்கள் தாங்கள் என்ன மாதிரி சாப்பாடு பொருள்களை இணையத்தில் ஆர்டர் செய்கிறோம் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே இடத்திற்கு தங்களுடைய மனதில் இருக்கும் குறைகளை எல்லாம் பல கணவர்கள் கொட்டி வருகின்றனர். அதில் ஒரு கணவர் என்னுடைய மனைவி தண்ணீர் பாட்டிலை ஆர்டர் பண்ணுகிறார். அப்படி என்றால் என் நிலைமை என்னவென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று அப்பாவியாக சொல்லி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இன்னும் இந்த மாதிரி நிறைய லிஸ்ட் இருக்கு. அந்த வகையில் ஒரு கணவர் சொல்கிறார் என்னுடைய மனைவி காலை நேரத்தில் இட்லியை ஆன்லைனில் ஆர்டர் போடுறாங்க என்று தன்னுடைய வேதனையை கொட்ட, இதுவெல்லாம் என்ன பெருசா இன்னும் இருக்கு பாருங்க என்று சொல்வது போல, ஒரு நபர் என்னுடைய மனைவி காபியை ஆன்லைனில் ஆர்டர் போடுறாங்க. அப்போ என் நிலைமை என்னவா இருக்கும் என்று வேதனையோடு ஷேர் செய்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இன்னொருவர் பெயர் மட்டும் வித்தியாசமாக இருக்கு என்று என்னுடைய மனைவி ஆர்டர் போட்டது என்னது தெரியுமா? மோர் குழம்பு பெயர் ஆன்லைனில் பெயர் வித்தியாசமாக வைத்ததும் அதை பார்த்து ஆர்டர் செய்து விட்டார் என்று அவர் புலம்பி கொண்டிருக்கிறார்.
அப்படி பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொரு பெண் ஒரு உணவு பொருளைப் பற்றி சொல்லி இருக்கிறார். அப்போது அவரிடம் கோபிநாத் நீங்க சொல்றதை பார்த்தா கால் பவுன் தங்கத்தின் மதிப்பு நீங்க சொல்லுற சாப்பாடு ஐட்டம் என்று சொல்ல, எனக்கு தங்கம் தராத ஹேப்பினஸ் அந்த சாப்பாடு தருகிறது என்று சொல்ல, அதற்கு அப்படியா உங்க கையில் போட்டு இருக்கிற அந்த பிரேஸ்லெட்டை கழட்டுங்க என்று கோபிநாத் கேட்கிறார்.

அந்த பிரேஸ்லெட்டை கழட்டி அவருடைய கணவரிடம் கொடுத்து தம்பி அந்த ஹைதராபாத் ரெஸ்டாரண்டுக்கு கூட்டிட்டு போயி இதை வச்சு அவங்களுக்கு அந்த மூவ்மெண்ட் கிரியேட் பண்ணி கொடுத்துடுங்க. இல்ல, உங்களுக்கு இப்பவே அந்த மொமென்ட் வேணும் என்றால் அண்ணனே உங்களுக்கு செஞ்சு கொடுக்கவா? என்று கேட்டு,
பிறகு வாழ்க்கை வாழ்வதற்கே தங்க நகை பிடிக்காது என்றெல்லாம் இனி சொல்லக்கூடாது என்று அந்தப் பெண்ணை கலாய்க்கிறார். இப்படியாக கலகலப்பான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்து அதிகமான ரசிகர்கள் இப்படித்தான் சீன் போடுறவங்களுக்கு ஆக்ஷன் செய்ய வேண்டும் என்று கோபிநாத்தை பாராட்டி வருகிறார்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications