நீயா நானாவில் சுவாரஸ்யம்..இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? கோபிநாத் சொன்ன வார்த்தையை கேட்டீங்களா?
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் காதல் திருமணம் செய்து கொண்ட மருமகள்கள் அவர்களுடைய மாமனார் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு மாமனார் தன்னுடைய மருமகள் பற்றி சொன்ன குற்றச்சாட்டு பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
தன்னுடைய மகனுக்கு வேலை இல்லை என்று போதிலும் மருமகள் விடாப்பிடியாக திருமணம் செய்து கொண்டது பற்றி அவர் கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜூன் நான்காம் தேதிக்கான எபிசோட்டின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரசியமாக காதல் திருமணம் செய்து கொண்ட மருமகள்களும் அவர்களுடைய மாமனர்களும் கலந்து கொண்டு தங்களுடைய நிறை குறைகளை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகளின் மாமனார் என்னுடைய மகன் வேலையே செய்யல. ஆனா காதலிக்கிறான் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் அப்போ அதை ஒரு வேலையாகவே பார்த்துகிட்டு இருந்திருக்காரு என்று கிண்டல் செய்கிறார்.

பிறகு அந்த நபர் தன்னுடைய மருமகளிடம் கல்யாணம் பண்ணிக்க போறீங்களே அவன் ஒரு வேலையும் பாக்கலையே எப்படி சமாளிப்பீங்க என்று கேட்கும்போது, அவருடைய மருமகள் நான் வேலை பார்க்கிறேன் கல்யாணம் முடிஞ்சு 6 மாசத்துக்குள் உங்க மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கிறது என்னுடைய பொறுப்புன்னு சொன்னாங்க என்று கூறுகிறார்.
அதை கேட்டு கோபிநாத் இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் எங்கம்மா இருக்கிறீங்க? கட்டுன வேட்டியோட வான்னு கூட்டிட்டு போயிருக்கீங்க என்று கேட்டு உங்களுக்கு ஒரு மீம் போடுவாங்க. இந்த ஷோ பாத்துட்டு உங்க போட்டோவ போட்டுருவாங்க, அதில் தூக்குடா அந்த செல்லத்தை என்று மீம் போட்டுருவாங்க என்று சொல்ல, அரங்கத்தில் சிரிப்பலை ஆரவாரம் வருகிறது. தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அவங்க மீம்ஸ் போடுறாங்களோ இல்லையோ நீங்க சூப்பரா மீம்ஸ் போட்டு கொடுத்து இருக்கீங்க என்றும், கிரியேட்டர்ஸ் மைண்ட் வாய்ஸ், அண்ணா நீங்க என் இனம் என்றும், இன்னும் சில மீம்ஸ் கிரியேட்டர்களில் மைண்ட் வாய்ஸ் என்று இதெல்லாம் நீங்க பண்ணிட்டா நாங்க என்னத்த பண்றது என்றும் யோசிப்பதாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுபோல இன்னும் இந்த உலகத்தில் இந்த மாதிரி பொண்ணுங்களாம் இருக்காங்களா? என்று பல ஆண்கள் எதிர்பார்ப்போடு கமாண்ட் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில பெண்களும் நாங்கள் இதை ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு செய்து விட்டோம். லைஃப் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இந்த ப்ரோமோவிற்கு பல தரப்பட்ட கமெண்டுகள் விறுவிறுவென எகிறி கொண்டிருக்கிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications