நீயா நானா: உன் ஒரிஜினாலிட்டியில் தீயை வைக்க.. காண்டான்னா கோபிநாத்.. சிக்கிய சிறுத்தை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மனநல சிகிச்சைக்கு செல்வது இயல்பாக ஏற்க முடியாது என்றும் மனநிலை சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்றும் விவாதிக்கப்படுகிறது.

அதில் ஒரு நபர் நான் மனநல சிகிச்சைக்கு செல்வதால் என்னுடைய ஒரிஜினாலிட்டி போய்விடும். அவர்கள் சொல்ற மாதிரி நடக்க வேண்டியதாகிவிடும் என்று தன்னுடைய கருத்தை எடுத்து வைக்கிறார்.

அதோடு இல்லாமல் அவர் மேலும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து காண்டான கோபிநாத் அந்த நபருக்கு சிறப்பான அறிவுரை கூறியிருக்கிறார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Neeya Naana 2023 June episode preview To set fire to your originality Gopinath angry

பொதுவாக நீயா நானா நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் திடீர் ட்ரெண்ட் ஆகிவிடும். அதற்கு உதாரணமாக நீயா நானாவில் பல நிகழ்ச்சிகளை கூறலாம். பல வருடங்களுக்கு முன்பு ஒரு நபர் நாங்கள் ஆண்ட பரம்பரை என்று நீயா நானா நிகழ்ச்சியில் பேசியதை யாராலும் மறந்திருக்க முடியாது.

அதே நபர் சில வருடங்கள் கழித்து தான் அன்று பேசிய படியே வாழ்ந்ததால் பட்ட பிரச்சனைகள் பற்றியும் பேசி இருந்தார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் பல காதல் காட்சிகளும், சமூக சீர்திருத்த காட்சிகளும் தவறாமல் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக சமுதாயத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளின் அடிப்படையிலேயே நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் வைக்கப்படுகிறது.

அதனாலேயே இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கலகலப்பாக கோபிநாத் பேசியது பலரையும் கவர்ந்திருக்கிறது.

இந்த வகையில் இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் ஒரு நபர் எனக்குன்னு ஒரு ஸ்பெசிபிக் கேரக்டர் இருக்கும் சார். ஆனால் நான் மனநல சிகிச்சைக்கு போயிட்டு அவங்க சொல்றதையே கேட்டு அப்படியே வாழ்ந்தேனா நான் இம்போசிஸ் கேரக்டரா மாறிடுவேன். என்னுடைய ஒரிஜினல் கேரக்டர் லூஸ் பண்ணிடுவேன் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் உங்களுக்கு ஒரு வேலை மனநிலை பிரச்சனை இருக்குன்னு வச்சுக்கோங்களேன், அப்போ நீங்க இது சரி இது தப்புன்னு ஒருத்தங்க சொன்னா அதை ஃபாலோ பண்ணது தானே சரி என்று கேட்கிறார்.

அதற்கு அந்த நபரும் ஆமாம் என்பது போல தலையை அசைத்து கொண்டிருக்க, மேலும் கோபிநாத் தொடர்கையில், என்னுடைய ஒரிஜினாலிட்டி இதுதான். நான் டென்ஷனானா கொஞ்சம் காண்ட் ஆயிருவேன். இதை மாற்றக்கூடாதுன்னா எப்படி? தப்புனா மாத்தி தான ஆகணும் என்று கேட்க, அந்த நபர் மீண்டும் இல்ல சார் எனக்குன்னு ஒரு இண்டிச்சுவல் கேரக்டர் இருக்கும் சார் என்று சொல்ல வர, கோபிநாத் உங்க இண்டிவிஜுவல் கேரக்டர் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்கிறார்.

அதுக்கும் அந்த நபர் சலிக்காமல் இப்ப வந்து நீங்க இந்த இடத்துல கோபப்படாத அப்படின்னு சொல்லலாம், ஆனா அத கண்ட்ரோல் பண்ணுன்னு சொல்றது வேற, கோபப்பட கூடாதுன்னு சொல்றது தப்பு தானே சார்? என்று கேட்க, அதற்கு கோபிநாத் நீங்க எந்த ஆளுகிட்ட (மனநல மருத்துவர்) போனதுல நீங்க கோவப்பட கூடாதுன்னு சொன்னாங்கன்னு சொல்லுங்க என்று கேட்கிறார்.

அதைத்தொடர்ந்து அந்த நபர் சார் நான் ஒரு எக்ஸாம்பிளுக்கு சொன்னேன் சார் என்று சொல்ல, இது எக்ஸாபில் இல்ல அனுமானமா நீங்களா சொல்றீங்க, நம்ம பிரண்ட் தான் கோவப்படக்கூடாது அமைதியா இரு சொல்லுவாங்க என்று கோபிநாத் சொல்ல, அப்போ பிரண்ட் கிட்ட போறது கூட நம்ம ஒரிஜினாலிட்டியை லூசு பண்றது தான சார் என்று சொல்ல, காண்டான கோபிநாத்," உன் ஒரிஜினாலிட்டியில் தீய வைக்க" என்னதான் அப்படி ஒரிஜினாலிட்டி வச்சிருக்கே என்று கேட்கிறார்.

கோபிநாத் சொன்ன வார்த்தையை கேட்டு அரங்கத்தில் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க, அந்த நபர் ஒரு தப்பு நடக்குன்னா அதை நார்மலாவே சரி பண்ணிக்கலாம் என்று சொல்ல, அது எல்லா நேரமும் சரிப்பட்டு வராது தம்பி என்று கோபிநாத் சொல்கிறார். அதற்கு அந்த நபர் எதனால் நம்ம தப்பு பண்றோம் என்பதை நானே அனலைஸ் பண்ணனும் சார் என்று சொல்கிறார்.

அதற்கு கோபிநாத் நீங்க உங்களுக்கு காய்ச்சல் வந்துச்சுன்னா அதை நீங்களே கண்ட்ரோல் பண்ணிடுவீங்களா? ஐஸ்கிரீம் சாப்பிட்டு, கூலிங் தண்ணி குடிச்சு உங்களால சரி பண்ண முடியுமா? என்று கேட்க அந்த நபர் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். பிறகு கோபிநாத் நீங்க எல்லோருமே இங்க என்னத்த நிரூபிக்க வரீங்க? சைக்காலஜிஸ்ட் கிட்ட போறவங்க ரொம்ப வீக்கானவங்க என்று நீங்க சொல்ல வரீங்க என்று சொல்கிறார். தற்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+