இப்படியும் சில மனிதர்கள்..! இதுதான் இன்று பலருடைய நிலை! நீயா நானாவில் கலங்க வைத்த தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கான எபிசோடில் தலைப்பே இல்லாத ஒரு விவாதம் நடைபெறுகிறது. இதில் பலர் தங்களுடைய மனதில் இருக்கும் கேள்விகள், குழப்பங்கள், வேதனைகள், சந்தோஷங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த தருணத்தில் தான் இன்றைய சூழ்நிலையில் பலரும் தங்களுடைய மனதிற்குள் அழுத்திக் கொண்டிருக்கும் வேதனையையும் பலராலும் புரிந்து கொள்ள முடிகிறது.

நீயா நானா எபிசோடு

இப்போதைய அவசரமான உலகத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதை நோக்கி ஓடுகிறோம்? யாருக்காக ஓடுகிறோம்? எதற்காக ஓடுகிறோம்? என்ற கேள்வி எல்லோருக்குமே எழுந்து வருகிறது. காலை எழுந்ததும் ஆபீஸுக்கும், பள்ளி, கல்லூரிக்கும் எல்லோருமே ஓடிக் ஓடிக்கொண்டிருக்கிறோம். வீட்டில் இருப்பவர்கள் நிலைமையும் அவ்வளவு ஈஸியானது கிடையாது. அடுத்து என்ன செய்வது? என்ற கேள்வி தான் இருக்கிறது அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

வேலைக்கு போகிறவர்கள் நாங்க வீட்டில் இருக்கிறவர்களுக்காக தானே வேலை பார்க்கிறோம் என்று நினைக்கிறாங்க. ஆனால் வீட்டில் இருப்பவர்கள் நானும் உங்களுக்காக தான் வேலை பார்க்கிறேன்.. எனக்காக எந்த அன்பும் எனக்கு கிடைக்கல, நீங்க வேலை பார்ப்பதால் பணம் வருகிறதே தவிர எனக்கான நிம்மதி கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறார்கள்.

Neeya Naana vijay tv

பலருக்குள் இருக்கும் வருத்தம்

சிலர் கஷ்டப்பட்டு குடும்பத்திற்காக உழைத்தாலும் அந்த கஷ்டமே குடும்பத்திற்கு தெரியாத அளவிற்கு எப்போதும் சிடுசிடுவென இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இது போன்ற ஒரு சூழலை மையப்படுத்தி தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் வைத்திருக்கின்றனர். அதில் பலரும் பேசியதுதான் யோசிக்க வைத்திருக்கிறது. அதில் ஒருவர் பேசுகிறார், நான் யாருக்காக ஓடுகிறேன்? என்று எனக்கே தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் ஆரம்பத்திலேயே நீங்க நல்லா இருக்கீங்களா என்று ஒரு வார்த்தை கேட்டார். அதற்கு மேல் என்னால் பேசவே முடியவில்லை.

பலருடைய மனநிலை

இப்போது எல்லாம் என்னிடம் எல்லோரும் கேட்பது, வேலைக்கு போயிட்டியா? அதை செஞ்சியா? இதை செஞ்சியா? என்பதுதான். நீ நல்லா இருக்கியா என்று யாருமே என்னிடம் கேட்கவே இல்லை. நானும் எனக்கு நானே கேட்கவில்லை. உண்மையில் நான் நல்லா இருக்கிறேனா? இல்லையா? என்று கூட எனக்கு தெரியவில்லை என்று சொல்கிறார். அந்த அளவிற்கு அவருக்குள் மன அழுத்தம் அதிகரித்து இருக்கிறது.

அதேபோல இன்னொரு பெண் பேசும்போது எனக்கு மனதிற்குள் இருக்கும் ஒரே ஆசை என்னுடைய கணவர் நீ சாப்டியா என்று கேட்பதுதான். என்னுடைய கணவரை நான் குற்றம் சொல்லவில்லை. அவரிடம் நான் தினமும் சொல்கிறேன் நீங்க சாப்டீங்களா என்று கேட்கிறேனே நான் வீட்டில் தனியாக இருக்கும்போது நீங்க ஒரு முறை என்னிடம் நீ சாப்டியா என்று கேட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று சொல்கிறேன். ஆனால் அவர் 2 நாள் கேட்கிறார். 3வது நாள் மறந்துவிட்டது என்று சொல்கிறார். இதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

பெண்ணின் கண்ணீர்

அதுபோல இன்னொரு பெண் தன்னுடைய அப்பா தனக்கு போன் செய்யும்போதெல்லாம் தான் தொந்தரவாக நினைத்து இரக்கிறேன், இவங்க எல்லாரும் சாப்பிடடாச்சா என்று கூட யாரும் கேட்கல என்று வருத்தப்படுறாங்க. ஆனால் என்னுடைய அப்பா எனக்கு தினமும் காலையில் போன் செய்து சாப்பிடடாச்சா? என்று கேட்பார். அவர் போன் செய்த நேரத்தில் நான் ஆபீசுக்கு அவசரமாக கிளப்பிக் கொண்டிருப்பேன். அதனால் பல நேரங்களில் அவருடைய போனை எடுக்க மாட்டேன்.

அதனால் மிஸ்டு காலில் விழுந்திருக்கும். இப்போ அவர் இல்லை எனக்கு சாப்டியா? என்று கேட்க இவர்களைப் போல எனக்கும் யாரும் இல்லை.. அவர் எனக்காக கால் செய்த போது நான் அதை சரியாக ரெஸ்பான்ஸ் பண்ண வில்லை... ஆனால் இன்று அந்த மிஸ்டு கால் எனக்கு வராதா? என்று ஏக்கமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

நமக்கு பாடம்

இதுபோல தான நம்மில் பலரும் இருக்கும்போது ஒரு விஷயத்தை பெரிதாக நினைக்க மாட்டோம். அது கடந்து போன பிறகு, அல்லது அது இனி நமக்கு கிடைக்கவே செய்யாது என்று தெரிந்த பிறகுதான் அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பக்கத்தில் இருக்கிறவர்களிடம் என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறாய்? என்று ஒரு வார்த்தை பேசினாலே பலருடைய மனதிற்குள் இதுபோன்ற அழுத்தங்களும், வேதனைகளும் ஆக்கிரமித்து இருக்காது என்பது இந்த வார எபிசோடு மூலமாக பலருக்கும் பாடம் கற்பித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+