அது வெள்ளம் இல்ல சுனாமி ! என் 20 மாடுகளும் வெள்ளத்தில் மூழ்கிடுச்சி.. நீயா நானாவில் இளைஞர் கண்ணீர்
சென்னை: சென்னை பெருவெள்ளத்தின் போது கார் மூழ்கிய போது உள்ளே சிக்கிய தன்னால் கதவை கூட திறக்க முடியவில்லை என்றும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு இளைஞர் தெரிவித்த காட்சி மனதை பதைபதைக்கிறது.
மிக்ஜாம் புயலால் சென்னையில் அதிக அளவு மழை பெய்து எல்லா இடங்களிலும் வெள்ள நீர் தேங்கியது. பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கின. கிட்டதட்ட 4 அடி முதல் 15 அடி வரை தண்ணீர் தேங்கி மக்களை கதி கலங்க வைத்தது.

இந்த சென்னை பெருவெள்ளத்தில் இழந்ததை இன்னமும் மீட்க முடியாமல் மக்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். விஜய் டிவியில் நீயா நானா ஷோவில் சென்னை பெருவெள்ளம் குறித்து விவாதம் நடந்தது. அந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இதற்கான ப்ரோமோவில் ஒரு இளைஞர் கூறிகையில், சார் கார் மூழ்கும் காட்சிகளை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் நான் அந்த மூழ்கிய காருக்குள் உட்கார்ந்திருந்தேன். என்னால் கதவை கூட திறக்க முடியவில்லை என்றார். இன்னொரு இளைஞர் சார் ஒரு குழந்தை 2 மணி நேரமாக விட்டுவிட்டு அழுதுக் கொண்டே இருந்தது. நான் என்னவென கேட்டேன். அதற்கு அந்த குழந்தையின் தாய், பால் இல்லை என்றார். நாங்கள் பள்ளிக்கரணையிலிருந்து மேடவாக்கத்திற்கு சென்று பால் வாங்கிகொடுத்தோம். அந்த அம்மா அழுதாங்க சார் என்றார்.
இன்னொருவர், சார் ஒரு மாடு இல்லை 2 மாடு இல்லை , என்னோட 20 மாடுகளும் நீரில் மூழ்கிவிட்டது, என் வாழ்வாதாரமே போச்சு. என் வீடு மூழ்கியது என கண்ணீர் மல்க தெரிவித்தார். அது போல் நீயா நானா கோபிநாத், வெள்ளம் வந்ததும் எந்த பொருளை முதலில் எடுத்தீர்கள் என கேட்டார்.
அதற்கு அங்கிருந்தவர்கள், லேப்டாப், சார்ஜர், பவர் பேங்க், குழந்தை, சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை எடுத்ததாக சொன்னார்கள். ஒருவர் கூறுகையில் தண்ணீர் அப்படியே 30 வினாடிகளுக்குள் வந்துவிட்டது சார் என்றார். மேலும் ஒரு பெண் கூறுகையில் 55 ஏக்கரை 10 நிமிடத்தில் சுனாமி போல் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. குடிக்கத் தண்ணீர் இல்லாமல், மழை நீரை காய்ச்சி குடித்தோம் என மற்றொரு பெண் தெரிவித்தார்.
அது போல் நடிகை அறந்தாங்கி நிஷாவும் அமுதவாணனும் கூறுகையில் எங்க பார்த்தாலும் தண்ணீர் தேங்கியதால் எந்த பகுதிக்கு உதவி தேவை என கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. ஒரு கான்ஸ்டபிளிடம் போன் போட்டு கேட்டு சென்றோம் என அறங்தாங்கி நிஷா தெரிவித்தார். அது போல் அமுதவாணன் மக்களை மீட்க படகு இல்லாமல் தவித்தேன்.
என் குழந்தைக்கு அமெரிக்காவில் வாங்கிய படகில் கயிறு கட்டி மூன்று மூன்று பேராக 56 பேரை படகில் மீட்டோம் என்றார். இப்படியாக சென்னை பெருவெள்ளம் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications