Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது செம டிபேட் மச்சி... சாப்பாடு பொழுது போக்காய் மாறிய கதை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானா - ஞாயிறுகளில் மதியம் 12 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே சங்கமித்து கோலோச்சி வருகிறது.

கோபிநாத் இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஆரம்பித்த காலம் தொட்டு நடத்தி வருகிறார். முன்பு ஞாயிறுகளில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த டாக் ஷோ.மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த ஷோவின் நேரம் மாற்றப்பட்டதில், ரேட்டிங் குறைந்தது என்பது உண்மைதான் என்றாலும், இதை விரும்பிப் பார்ப்பவர்கள் ஹாட் ஸ்டாரில் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.

விஷயங்கள் பலவிதம்

விஷயங்கள் பலவிதம்

நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப் படாத விஷயங்கள் என்பது கம்மியாகத்தான் இருக்கும். பல விஷயங்களை பல்வேறு கோணத்தில் விவாதித்து இருப்பது பல விதத்தில் நம்மை பயத்து இருக்கிறது. இதில் கலந்துக் கொள்ள வெளியூர் வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர் என்பது முக்கிய அம்சம்.

போக்காய் மாறிய கதை

போக்காய் மாறிய கதை

மாதா மாதம் நாங்க திரை அரங்கம் போவோம். அப்படி போகும்போது அங்கு இருக்க கூடிய உணவகத்துல எல்லாமே நாங்க வாங்கி சாப்பிடுவோம். இப்போ அது எங்ககளுக்கு ஒரு பொழுது போக்காவே மாறிடுச்சு.இப்போ மாசமானா போயே ஆகணும்னு தோணுது என்கிறார் ஒரு குடும்பத் தலைவி

டிஷ் போட்டோஸ்

டிஷ் போட்டோஸ்

அப்ப ஒரு சினிமா போறப்ப அதோட இது தொத்திக் கிருச்சு என்று கோபிநாத் கூறிவிட்டு, வழக்கம் போல வேற என்று இன்னொரு கருத்தை எதிர்பார்க்கிறார். கண்டிப்பா..இன்னொரு இளம் பெண் ஆரம்பிக்கிறார்.நான் ஒரு இடத்துக்கு போயி ஒரு புது டிஷ் ஆர்டர் பண்ணி அதை போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணும்போது என் ஃபிரண்ட்ஸ் அதை பார்த்துட்டு இது எங்கே இருக்குன்னு கேட்பாங்க. இதே கேட்டு கேட்டு என் இன்ட்ரஸ்ட் டெவலப் ஆகி புதுப் புது இடம் போய் சாப்பிட ஆரம்பிச்சேன். இது என்டெர்டெயின் பண்ற மாதிரி ஆயிருச்சு.

தலைவர் குடும்பம்

தலைவர் குடும்பம்

எங்க வீட்டில் நான் சொல்றேன். தினமும் சமையல் பண்றாங்க. அவங்களுக்கு ஒரு நாள் லீவ். அவங்களை அழைச்சுக்கிட்டு வெளியில போயி சாப்பிடும் போது. எனக்கும் சந்தோசம், அவங்களுக்கும் சந்தோசம்..அந்த நினைவு ஒரு சுகமாயிருக்குது என்கிறார் இந்த குடும்பத் தலைவர்.

இளம்பெண் கூறுகிறார் .

இளம்பெண் கூறுகிறார் .

எனக்கு ரொம்ப தூரம் டிரைவ் பண்ணி ஆபீஸ் போகணும். டிரைவிங் போரடிக்கும் போது வழியில் விதம் விதமான உணவு கடைகள் இருக்கும்.இதை ட்ரை பண்ணைப்பார்க்கலாமேன்னு ஆரம்பிச்சு அது இப்போ ரெகுலர் பழக்கமாயிருச்சுன்னு சொல்றார் ஒரு இளம்பெண்.

நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்க ஞாயிறு மதியம் 12 மணி வரை பொறுத்திருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+