கோபிநாத் கேட்ட கேள்வி..நீயா நானாவில் கமிட்டான போட்டியாளர்கள்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணமாகவில்லையே என்று எதிர்பார்த்த நபருக்கு நீயா நானா நிகழ்ச்சியில் பெண் கிடைத்திருக்கிறது.

ஒரு பெண் நான் உங்களை மாப்பிள்ளை பார்க்க நாளைக்கு அம்மா அப்பாவோட வருகிறேன் என்று நீயா நானா அரங்கத்தையே அதிர வைத்திருக்கின்றார்.

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் திருமணமே வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் எங்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று ஏங்கும் ஆண்கள் என இரண்டு தரப்பினர் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு பெண் ஆண்கள் சொன்ன கண்டிஷன்கள் எல்லாம் எனக்கு ஓகே ஆனா எனக்கு அந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்குமா என்று அதிரடியாய் கேள்வி கேட்டிருக்கிறார்.

Neeya Naana Show 2023 May 14th Episode and fans reaction

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்டு அதற்கு தகுந்த போலவே நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொருவரமும் இருந்து வரும் நிலையில், இந்த வார நிகழ்ச்சி படும் விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அந்த வகையில் ஒரு நபர் தனக்கு பெண் கிடைக்கவில்லையே என்ற ஆற்றாமையை வருத்தத்தோடு தெரிவித்து இருந்தார்.

அதில் அவர் பேசுகையில் என்னதான் நான் ஜாலியாக வெளியே பேசிக்கிட்டாலும் யாராவது கல்யாணமாகவில்லையா என்று கேட்கும் போது மனசுக்குள்ள ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த ஷோவில் சொல்கிறேன் தயவு செய்து யாரும் கல்யாணம் ஆகாதவங்க கிட்ட எப்ப உங்களுக்கு கல்யாணம் என்று கேட்காதீங்க. ஏன் அப்படி என்றால் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை நான் சொல்கிறேன்.

நான் காஸ்ட் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பொண்ணு வேலைக்கு போகலாம்னு சொல்லிட்டேன். பொண்ணு வீட்ல எந்த வரதட்சணையும் தர வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனா இவ்வளவு விஷயம் சொல்லியும் எனக்குப் பொண்ணு கிடைக்கல. ஏன்னா எல்லாரும் எமோஷனலா டேமேஜ் பண்ணுறாங்க.

Neeya Naana Show 2023 May 14th Episode and fans reaction

உன்ன நம்பி யாரு பொண்ணு தருவா? இவன்லாம் எப்படி பாத்துக்குவான் என்றும், நான் எனக்காக மட்டும் பேசல என்ன மாதிரியே கிட்டத்தட்ட முப்பதாயிரம் சம்பளம் வாங்குற தனிப்பட்ட மனுசங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்களோட வாழ்க்கை எல்லாம் என்னாகிறது? அப்போ முப்பதாயிரம் சம்பளம் வாங்குறவங்க கல்யாணம் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? என்று கேட்க அதற்கு இன்னொரு பெண் பதிலடி கொடுக்கிறார்.

அதில் அந்தப் பெண் முப்பதாயிரத்த வச்சிட்டு இப்போ குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்ல, அதற்கு இன்னொரு ஆண் எல்லா நார்மலான மனுசங்களும் அதிகமா சம்பளம் இருக்குறவங்கள தான் சரி என்று சொல்றாங்க. எனக்கு இப்போ வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. நான் 2013 ல சம்பளம் 30000 சம்பளம் வாங்கினேன். அப்பவும் என்னுடைய நிலைமை இதுதான். இப்போ கம்பெனி மாறி 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். இப்பவும் என் ஸ்டேஜ் அது தான் என்று சொல்கிறார்.

இதற்கு இன்னொரு பெண் என்னுடைய சம்பளம் 30 ஆயிரம் வச்சுக்கோங்க. நீங்க வேலைக்கு போனாலும் சரி போகலைன்னாலும் சரி, உங்களுடைய இஷ்டத்துக்கு நீங்க இருக்கலாம். நீங்க என் வீட்டுல தான் இருக்கணும். நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன். இதுக்கெல்லாம் ஓகேன்னா கண்டிஷன் வேற இல்லவே இல்ல, பொண்ணு இப்பவே ஓகே என்று சொல்ல, அதற்கு அந்த ஆணும் எனக்கும் ஓகே ஆனா வீட்டுல என்ன பண்ணனும் வீட்ல டிவி பாத்துட்டு ஜாலியா இருந்தா ஓகேவா என்று கேட்கிறார்.

அதற்கு அந்தப் பெண் அது உங்களுடைய இஷ்டம். நீங்க வீட்டுல பாத்திரம் கழுவலாம், மாவு ஆட்டலாம் எதுவும் செய்யலாம் என்று சொல்ல அப்போ எனக்கு ஓகே மாதத்திற்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க என்று அந்த ஆண் கேட்க அதற்கு அந்தப் பெண் நீங்க சொல்ற அதே அமௌன்ட் தான் 30,000 தான் சம்பளம் என்று சொல்ல, அப்போ எனக்கு ஓகே தான் ஆனா இதே நானும் வேலைக்கு போறேன். நானும் ஒரு 30,000 சம்பளம் வாங்குறேன், நீங்களும் ஒரு முப்பதாயிரம் சம்பளம் வாங்க நம்மளுக்கு 60 ஆயிரம் வரும் அதை வச்சு நம்ம குடும்ப நடத்துக்கலாம்னு யாருமே சொல்லலையே என்று அந்த ஆண் கேட்கிறார்.

அதற்கு அந்தப் பெண் அதைத்தான் நானும் சொல்றேன் நீங்க வேலைக்கு போறதா இருந்தாலும் சரி வேலைக்கு போகல ஆனாலும் சரி நீங்க வேலைக்கு போறதா இருந்தா நான் உங்களை அலோ பண்ணுகிறேன், என்று சொன்னதும் அந்த நபர் அது எப்படி என்னை நீங்க அலோ பண்றது என்று கோபமடைய அந்த பெண் அப்ப நீங்க யாரு எங்கள அலோ பண்றதுக்கு என்று கேள்வி கேட்கிறார்.

Neeya Naana Show 2023 May 14th Episode and fans reaction

அதற்கு அந்த நபர் மாட்டிக் கொண்டோம் என்பது போல முகத்தை மாற்றிவிட்டு பிறகு எனக்கு இப்பவும் ஓகே தான் என்று சொல்ல, என்னுடைய முப்பதாயிரம் சம்பளத்தை வைத்து நீங்க குடும்பத்தை பாத்துப்பீங்களா என்று அந்த பெண் விடாப்பிடியாக கேட்க, அதற்கு அந்த ஆண் அது முப்பதாயிரம் சம்பளம் போதாதுங்க என்று சொல்கிறார். அதற்கு பெண் கோபத்தில், இப்பதான் அந்த நபருக்கு 30,000 போதாது என்று நாங்க சொல்லும்போது எங்க எல்லாரையும் கைகாட்டி நீங்க எல்லாரும் பேசினீங்க இப்போ உங்களுக்கு பத்தாதா என்று அந்தப் பெண் பதிலடி கொடுக்கிறார்.

பிறகு அந்த பெண் நாம காலம் காலமா இருக்கிற முறைகளை உடைச்சிடலாம். நீங்க கட்டுன துணியோட வாங்க நான் உங்கள பார்த்துக்கிறேன் என்று சொல்ல, அதைத்தான் நானும் சொல்கிறேன் என்று அந்த ஆண் சொல்ல நான் சொல்றது புரியுதா?,, புரியுதா? என்று அழுத்தமாக கேட்டு பிறகு நாளைக்கு அப்பா அம்மாவோடு நான் மாப்பிள்ளை பார்க்க வருகிறேன் என்று அழுத்தமாக சொல்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+