நீயா நானாவில் கடையை திறந்த கோபிநாத்..கடைசியில் அவரையே திணற வைத்த 90ஸ் கிட்ஸ்..கலகலப்பான தருணம்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் மே 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வார தலைப்பிற்கு ஏற்ப புதிய கடை ஒன்றை திறந்து வைத்திருக்கிறார்.
90 வாழ்க்கையை அசட்டை செய்த 2k கிட்ஸ்களின் பேச்சு கேட்டு கோபிநாத் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான தலைப்பில் விவாதம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் நிகழ்ச்சியில் சுவாரசியமாக இரண்டு தரப்பு பங்கேற்பாளர்களும் பேசும் கருத்தை கேட்டு அவர்களுக்கு தீர்ப்பு வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதுவும் இந்த வாரத்திற்கான நிகழ்ச்சிக்கான பிரமோவிற்காகவே ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கின்றனர். அந்த வகையில் வரும் மே 7ஆம் தேதிக்கான எபிசோட் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதை பார்த்ததும் சமூக வலைத்தளத்தில் 90ஸ் கிட்ஸ்கள் மற்றும் 2 கே கிட்ஸ்கள் கருத்து மோதலில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் இந்த வார எபிசோடு காண மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பொருட்களை வைத்து கடை ஒன்று வைத்திருக்கிறார். அரங்கத்தில் அனைவரும் கைத்தட்டி உற்சாகமூட்டுகின்றனர்.அதற்கு நான் ஒரு கடை தானடா வச்சேன். அதுக்கு எதுக்குடா இப்படி பண்றீங்க என்று கோபிநாத் சிரித்தபடியே கேள்வி கேட்கிறார்.
அதில் 2கே கிட்ஸ்களில் இருந்து ஒரு பெண் அதில் ஒன்னு அமுக்குனா தேவுடா தேவுடா என்று பாட்டு வருமே அந்த போன் இருக்கான்னு பாருங்க என்று சொல்ல, கோபிநாத் அங்கே தேடிப் பார்த்துக் கொண்டு அது இல்லம்மா என்று சொல்ல, இல்ல சார் உங்களால முடியும் தேடிப் பாருங்க என்று சொல்லி பிறகு அங்கு அப்பளம் இருக்கும் அதைக் கொடுத்து விடுங்க என்று இன்னொரு 2கே கிட்ஸ் சொல்லுகிறார்.

பிறகு 90ஸ் கிட்ஸ் ஒருவர் கோபி சார் உங்களை கடைகாரராகவே மாத்திட்டாங்களா என்று ஃபீல் பண்ண, 2கே கிட்ஸ் பெண் ஒருவர் உங்களை கயிறு மிட்டாய் சுத்த சொன்னேன் என்று சொல்ல, கையில் கயிறு மிட்டாயோடு வைத்திருக்கும் கோபிநாத் 2கே கிட்ஸ் நீங்க சுத்துங்க பார்ப்போம் என்று சொல்ல, அங்கிருக்கும் பெண் வாயில் டியூப் ஐஸ் வைத்தபடியே கையில் சுற்று மிட்டாய் சுற்றி காட்ட, பல திறமை வச்சிருக்கீங்களே என்று பாராட்டுகிறார். இந்த பிரமோ தற்போது வைரலாகி வருகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications