"விதவை” என்கிற வார்த்தையை கேட்டாலே அழுகை.. நீயா நானாவால் மாறிய மனது.. சிங்கிள் அம்மாவின் மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அவர் சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார்.
கணவர் இறந்த பிறகு மறுமணம் பற்றி யோசிக்காத நிலையில் தற்போது பல வருடங்கள் கழித்து தன்னுடைய மனமாற்றம் குறித்து வெளிப்படையாக அந்த பெண் பேசி இருக்கிறார்.
மறுமணம் செய்ய இருக்கும் பெண்ணிற்கு பக்க பலமாக அவருடைய குடும்பத்தினர் உதவி செய்து வரும் நிலையில் தற்போது வாழ்த்துக்கள் அவருக்கு குவிந்து வருகிறது.

பாராட்டப்படும் நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி பல நேரங்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். பல வருடங்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தாலும் இவர்தான் தொகுப்பாளராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய பேச்சுத் திறமையை புகழ்ந்து பேசும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இரண்டு பக்கம் இருக்கும் நியாயம் அநியாயங்களை சரியாக கேட்டு டக்கென்று தன்னுடையபதிலை சரியாக சொல்லுவதை அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

நிகழ்ச்சியால் மாற்றம்
அதனாலயே நீயா நானா நிகழ்ச்சி பல நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத அளவில் வைரலாகி விடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல எபிசோடுகள் சமூகத்தில் பெறும் புரட்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது போல தான் சில வாரங்களுக்கு முன்பு,
நடந்த நிகழ்ச்சியால் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. அது வேறு ஒன்றும் இல்லை சிங்கிள்ஸ் மதர்ஸ் தங்களுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக படும் துயரங்கள் பற்றியதாக சில வாரங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி இருந்தது.

சிங்கிள் மதர்ஸ்
அதில் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் தனியாக குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் ஜெயசுதா என்கிற பெண்ணும் கலந்து கொண்டிருக்கிறார். இவர் கிராமத்து பெண்ணாக தன்னுடைய அனுபவங்களை அந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடந்த அனுபவங்கள் காரணமாக தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் மறுமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

மனமாற்றம்
அந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூரில் இருந்து ஜெயசுதா கலந்து கொண்டிருந்தார். அவர் நீயா நானா நிகழ்ச்சியில் தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் தான் தனிமையில் இருக்கும் போது மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்கும் சில நினைவுகளை பற்றியும் கூறியிருந்தார். அதில் தாலி கட்டும் நேரத்தில் என்னுடைய கையை அவருடைய கையில் பிடித்துக் கொடுத்த நேரத்தை நான் பலமுறை தனியாக இருக்கும்போது வீடியோவில் போட்டு பார்த்துக் கொண்டே இருப்பேன் என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு வந்த பிறகு இவருடைய வீட்டின் அருவருக்கு மறுமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார்களாம். அடுத்த வாரம் திருமணம் நடக்க இருப்பதாக அவர் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு இவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

மனதை பாதித்த வார்த்தை
மேலும் தன்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு தான் எந்த குடும்ப விழாக்களிலும் கலந்து கொள்ளவே மாட்டேன் என்றும் எதிலும் நான் கலந்து கொள்ளாமல் தனியாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டே இருந்தேன். எனக்கு குடும்பத்தில் ஏதாவது பங்க்ஷன் நடக்கும் போது முன்னாடி நின்று செயல்படுவது எனக்கே ஒரு வருத்தமாக இருக்கும். யாராவது ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று என் பக்கத்தில் இருக்கும் போது வேறு ஒருவரை கூட யாராவது விதவை என்று சொன்னால் எனக்கு மனதிற்குள் அதிகமாக வலிக்கும். எனக்கு அப்படியே அழுகை வந்துவிடும். அந்த அளவிற்கு அந்த வார்த்தை என்னை பாதித்திருக்கிறது என்று பேசி இருக்கிறார். தற்போது இதற்கு அதிகமான ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications