இது கொரியன் சீரிஸ் மாதிரி இருக்கு.. அதிர்ச்சியான கோபிநாத்.. நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஏப்ரல் முப்பதாம் தேதிக்கான எபிசோடின் முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
இதில் ஆன்லைன் காதல் அழகானது என்றும் ஆன்லைன் காதல் சரிவராது ஆபத்து என்றும் இரண்டு அணியினர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு பெண் பேசிய வார்த்தையை கேட்டு இது கொரியன் சீரிஸ் மாதிரி இருக்கு என்று கோபிநாத் கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக கோபிநாத் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் ஆன்லைன் காதல் அழகானது என்றும் ஆன்லைன் காதல் சரிவராது என்றும் இருதரப்பினர் கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.
நீயா நானா நிகழ்ச்சியில் பல சமூக அவலங்கள் வெளிச்சத்துக்கு வருவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியை அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இரண்டு தரப்பு வாதங்களையும் சரியாக கேட்டு ஆராய்ந்து அதற்கு டக்கென்று தனது மனதில் பட்டதை தீர்ப்பாக கொடுப்பதில் கோபிநாத்துக்கு நிகர் கோபிநாத் தான் என்று பலருடைய பாராட்டைப் பெற்று வருகிறார்.

பல நேரங்களில் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் தலைப்புகளில் பேசும் பலர் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டு வருகிறார்கள். அதுபோல இந்த நிகழ்ச்சியில் இந்த கன்டென்ட் பேசுங்கள் என்று ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வகையில் இந்த வாரத்திற்கான நிகழ்ச்சியின் முதல் பிரமோவில் ஒரு நபர் ஆன்லைன் காதல் சரி வராது என்று அணியில் இருந்து ஆன்லைனில் நீங்கள் எப்படி நடந்து போக முடியும் மேக்ஸிமம் நீங்க அவங்கள ஒரு கமெண்டில் பார்ப்பீங்க அல்லது ஹைபில் பார்ப்பீங்க, இது ஒரு மேஜிக்கில் டிஜிட்டல் பிளாட்பாரம் என்று சொல்ல, அதற்கு இன்னொரு பெண் ஆன்லைன் காதல் அழகானது என்று அணியில் இருந்து பதில் கொடுக்கிறார்.

அதில் இரண்டு பேருக்கு தேவையானதை புரிஞ்சிக்கிறாங்க என்பது ஆன்லைனில் இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு ஆன்லைன் காதல் சரி வராது என்ற அணியில் இருந்து இன்னொரு பெண் அவங்களுக்கு இன்னொரு ரிலேஷன்ஷிப் இருக்கு என்று நீங்க தெரிஞ்சுக்கும் போது உங்களுடைய இதயம் நொறுங்கி போயிடும் என்று சொல்கிறார்.
அதற்கு ஆன்லைன் காதல் அழகானது என்று அணியில் இருந்து ஒரு பெண் உங்கள் பக்கத்தில் இருக்கும் நபர் கூட பேக்காக இருக்கலாமே என்று என்று கூறுகிறார். அதற்கு ஆன்லைன் காதல் சரி வராது என்று அணியில் இருந்து அவன் பக்கத்தில் இருக்கும் போது ஒரு வாம் கிடைக்கும் அது ஆன்லைன் காதலில் உணர முடியாது என்று கூறுகிறார். அதை கேட்டு பீல் ஆன கோபிநாத்," டேய் இது கொரியன் சீரிஸ் மாதிரி இருக்குடா, இது செம பீல்" என்று கூறுகிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications