2கே கிட்ஸை அதிரவிட்ட கோபிநாத்..பச்ச குதிரை தெரியுமா.. 90ஸ் கிட்ஸ் கேள்வி.. கலகலப்பான நீயா நானா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மே 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
90ஸ் வாழ்க்கையை ரசித்து பேசும் நபர்கள் மற்றும் 90ஸ் புராணத்தை போதும் நிறுத்துங்கள் என சொல்லும் 2கே கிட்ஸ்கள் கலந்து கொள்கின்றனர்.
ஒரு 90ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸிடம் உங்களுக்கு பச்சை குதிரை தெரியுமா என்று கேட்க அங்கே இருப்பவர்கள் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான தலைப்பில் விவாதம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் நிகழ்ச்சியில் சுவாரசியமாக இரண்டு தரப்பு பங்கேற்பாளர்களும் பேசும் கருத்தை கேட்டு அவர்களுக்கு தீர்ப்பு வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதுவும் இந்த வாரத்திற்கான நிகழ்ச்சிக்கான பிரமோவிற்காகவே ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கின்றனர். அந்த வகையில் வரும் மே 7ஆம் தேதிக்கான எபிசோட் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதை பார்த்ததும் சமூக வலைத்தளத்தில் 90ஸ் கிட்ஸ்கள் மற்றும் 2 கே கிட்ஸ்கள் கருத்து மோதலில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
அதற்குக் காரணம் இந்த வார சூட்டில் 90ஸ் வாழ்க்கையை ரசித்து பேசும் நபர்கள் மற்றும் 90ஸ் புராணத்தை பேசுவதை நிறுத்துங்கள் போரடிக்கிறது என்று சொல்லும் 2k கிட்ஸ்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே சமுதாயத்தில் நடக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகள் இப்போது இந்த நிகழ்ச்சியில் விவாதத்துக்கு வந்திருக்கிறது.

அப்போது ஒரு நபர் அதாவது நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சிறுவயது விஜயாக நடித்த அந்த நபர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு லட்சம் கேம்ஸ் இந்த கேசட்டில் இருக்கிறது என்று சொல்ல, அவருக்கு எதிராக 2கே கிட்ஸில் ஒரு நபர் சார் இவர் ஒரு லட்சம் தடவை ஏமாந்து இருக்கிறார் என்று கூறுகிறார்..
90ஸ் கிட்ஸ்களில் ஒரு பெண் உங்களுக்கு ராணி காமிக்ஸ் தெரியுமா? என்று கேட்க அதற்கு, ஒரு நபர் ராணி பெண்ணாக இருக்கலாம் சார். ஆனா காமிக்ஸ்னா ஏதாவது புக்கா இருக்கும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, அங்கே சிரிப்பலை அதிகரிக்கிறது. 90 கிட்ஸ்களில் ஒரு நபர் பச்சைக் குதிரை கேம் கேள்விப்பட்டிருக்கீங்களா? என்று கேட்க, என்னது பச்சை குத்துறதா என்று 2கே கிட்ஸ் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு கோபிநாத் பச்ச குத்துறது இல்ல தம்பி பச்ச குதிரை என்று விளக்கம் கொடுக்கிறார்.

அடுத்து இன்னொரு 90ஸ் கிட்ஸ் மெசஞ்சர் என்றால் என்ன என கேட்க அதற்கு 2k கிட்ஸ் மெசேஜ் பாஸ் பண்ணுவது என்று சொல்ல, ஒரு விஷயம் தெரியலை என்பதை எப்படி சொல்றான் பாருங்க என்று கோபிநாத் நக்கல் அடிக்க, நீயா நானா அரங்கமே சிரிப்பு அலையில் தத்தளிக்கிறது. தற்போது இந்த புரோமோ இந்த வார நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications