நீயா நானா: இது என்ன கோபிநாத்துக்கு வந்த சோதனை? நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து சண்டையிட்ட 2 பெண்கள்
சென்னை: விஜய் டிவியில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உழவர் ஸ்பெஷல் என ஜனவரி 16ஆம் தேதி நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் தற்போது மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் தமிழக வீர விளையாட்டு இளைஞர்கள் மற்றும் சின்னத்திரை சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் தமிழகத்தில் உள்ள வீர விளையாட்டு வீரர்கள் தங்களுடைய திறமையை நீயா நானா அரங்கத்தில் காட்டி இருக்கின்றனர்.
அப்போது பட்டுப்புடவை கட்டிய இரண்டு பெண்கள் மல்லுக்கட்டி குஸ்தி சண்டை போட்டதை பார்த்து கோபிநாத் பதறிப் போய் இருக்கிறார். எதனால் இந்த சம்பவம் நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரத்திலும் ஞாயிற்று கிழமை மட்டும் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களிலும் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில் விஜய் டிவியில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஞாயிறு, திங்கள், செவ்வாய் என மூன்று நாட்களும் நீயா நானா ஸ்பெஷல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் வரும் ஜனவரி 16 அதாவது உழவர் தினத்தன்று உழவர் தின ஸ்பெஷல் நீயா நானா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் உள்ள வீர விளையாட்டு இளைஞர்கள் ஒரு பக்கத்திலும், சின்னத்திரை சினிமா நட்சத்திரங்கள் மற்றொரு பக்கத்திலும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.
நட்சத்திரங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளையாட்டு வீரர்கள் அளிக்கும் சுவாரசியமான பதில்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திறமைகள் குறித்த ப்ரோமோக்கள் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டாவது ப்ரோமோவில் இரண்டு பட்டு புடவை கட்டிய பெண்கள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மேடையில் குஸ்தி போடுகின்றனர்.

அதில் யாருடைய முதுகு முதலில் தரையில் படுகிறதோ அவர்கள் தோற்று விடுவார்கள் என்று கோபிநாத் கூறி இருக்கும் நிலையில் அங்கு சில பெண்களும் சண்டையிட்டு மல்லு கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மாடு பிடி வீரர்களும் அங்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு மாடுபிடி வீரர் நாங்க மாட்டை பிடிக்கும் போகும் போது மாடை புடிக்க போற மாதிரி நினைக்க மாட்டோம்...
அத்தை பொண்ண கட்டி பிடிக்க போற மாதிரி தான் நாங்க பிடிக்கப் போவோம் என்று சொல்ல அங்கிருந்த பிரபலங்கள் அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கின்றனர். அதுபோல இன்னொரு ப்ரோமோவில் அங்கு இருக்கும் இளவட்ட கல்லை அங்கு இருக்கும் வீரர்கள் எளிதாக தூக்கி போட்டு சாதனை செய்து கொண்டு இருக்க அதை பார்த்து நட்சத்திரங்கள் முயற்சி செய்து பார்க்கின்றனர். ஆனால் அவர்களால் ஒரு இன்ச் கூட அசைக்க முடியவில்லை.

இறுதியாக நட்சத்திரங்கள் எல்லோரும் சேர்ந்து கோபிநாத்தை களம் இறக்கி நீங்களும் இதை தூக்குங்க சார் என்று வேண்டுகோள், வைக்க, கல்லை தூக்குற மாதிரி ஆக்சன் காட்டி பிறகு அங்கிருக்கும் ஒரு செட்டிங் அட்டையை தூக்கி பாகுபலி ரேஞ்சிக்கு கோபிநாத் சீன் போட்டு கொண்டு இருக்க இந்த ப்ரோமோவும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications