யார் கிட்ட சொல்லி அழ முடியும்? நம்ப வச்சு ஏமாத்தினாங்க.. நீயா நானாவால் இப்படி..! பாடகி வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பின்னணி பாடகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவராக பாடகி ரேஷ்மியும் கலந்து கொண்டிருந்தார்.

சினிமா துறையில் தனக்கு கிடைத்த ஏமாற்றங்கள் விரக்தி பற்றி மனம் திறந்து தற்போது பேசி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியால் பலர் தங்களுடைய வாழ்க்கை மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது கூட பின்னணி பாடகி ஆக இருந்து வரும் ரேஷ்மி தனக்கு இந்த நீயா நானா நிகழ்ச்சியால் கிடைத்த அங்கீகாரமும் வெளிச்சமும் இத்தனை வருடங்களாக பின்னணி பாடகியாக பல ஹிட் பாடல்கள் பாடியும் கிடைக்கவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

Neeya Nana show Reshmi was opened up about his disappointments in the film industry

பாடகி ரேஷ்மி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக பல பாடல்களில் பின்னணி பாடகி ஆகவும், ஹம்மிங் குரல் கொடுத்தும் வருகிறாராம். பல ஹிட் பாடல்கள் இவர் பாடுவது போன்று ஆரம்பத்தில் இவரிடம் கூறுவார்களாம். இவரும் அதற்காக ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் பயிற்சி எடுத்து இருக்கிறாராம். ஆனால் கடைசி நேரத்தில் பெரிய பாடகிகள் மூலமாக அந்த பாடல் பாடப்பட்டு வெளியாகி விடுமாம். அந்த ஏமாற்றத்தை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அது தான் தொடர்கிறது என்று கூறி இருக்கிறார்.

குறிப்பாக பாண்டவர் பூமி திரைப்படத்தில் தோழா தோழா பாடல் இவர்தான் பாடுவது என்று கூறியிருந்தார்களாம். இவரும் பாடலாசிரியர் சினேகன் உடன் சேர்ந்து அவர் எழுதிய பாடலுக்கு பாட்டு பாடி கொண்டிருப்பாராம். ஆனால் கடைசி நேரத்தில் இன்னொரு பாடகியால் பாடப்பட்டு அந்த பாடல் வெளியே வந்திருக்கிறது. அது எனக்கு பெரிய ஏமாற்றமும் வலியுமாக இருந்தது. அப்போது எனக்கு சினேகன் ஆறுதல் கூறினார் என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பின்னணி பாடகியாக இருந்து வரும் சாதனா ஸ்ரீ கூட இவருடைய பாடலை கேட்டு இவருடைய குரலிலே இந்த பாடலை வைத்திருக்கலாமே என்று கூட கூறினாராம். அதிலும் குறிப்பாக சிம்பு நடித்த திரைப்படத்திலிருந்து சாணக்யா சாணக்யா என்ற திரைப்படத்தின் பாடலை இவர்தான் ஆரம்பத்தில் பாடுவது என்று இருந்ததாம். அதுவும் கடைசி நேரத்தில் மாறி போய்விட்டதாம். ஆனால் அந்த பாடலில் இடையில் வரும், சத்யா சொல்லுடி என்கிற டயலாக் இவர் பேசியது தானாம். அந்த பாடலை கேட்டு விட்டு கூட சாதனா ஸ்ரீ இவருடைய குரலிலையே வைத்திருக்கலாம் என்று கூறினாராம். இந்த மாதிரி ஒரு சில பெருந்தன்மையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

அதோடு யாருக்குமே தெரியாமல் இருந்த என்னுடைய நிலைமை இப்போது நீயா நானா நிகழ்ச்சியால் பலருக்கும் தெரிந்து விட்டது. அந்த நிகழ்ச்சிக்கான வீடியோவில் கூட பலரும் இந்த பாடல் நீங்க பாடியது தானா? இவங்க பாடியதா? என்று கேட்கும் போதெல்லாம் தனக்கு சந்தோஷமாகவும் ஒரு பக்கம் கஷ்டமாகவும் இருந்தது என்று கூறியிருக்கிறார்.

Neeya Nana show Reshmi was opened up about his disappointments in the film industry

தொடர்ச்சியாக இவருக்கு ஏமாற்றம் கிடைத்த போது சினேகன் கூறினாராம் எப்படியும் உங்களுக்கு என்னுடைய திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துவிடும் என்று கூறிக் கொண்டிருந்தாராம். அதுபோல இவருக்கு ஆட்டோகிராப் திரைப்படத்தில் மனசுக்குள்ளே காதல் வந்தலோ என்னும் திரைப்பாடல் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த பாடல் இவர்தான் பாடி பெரிய அளவில் ஹிட் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் தான் டிவிகளில் புது பாடல்கள் போடக்கூடாது என்று ஸ்ட்ரைக் வந்து விட்டதாம். அதனால் எனக்கு எல்லா பக்கமும் அடியாக மாறிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

ஏற்கனவே ஒரு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த பாடல் பெரிய அளவில் வெற்றி கிடைத்தது. ஆனால் நான்தான் பாடினேன் என்று யாருக்கும் தெரியாது. வெளியே செல்லும் இடங்கள் எல்லாம் இந்த பாடல் படித்துக் கொண்டே இருக்கும். அதுவும் இரண்டு மொழிகள் சேர்ந்து முதல்முறையாக இந்த பாடல் வெளியானது. பலரும் பாராட்டினார்கள் நானும் ஏதாவது வானொலியில் பாடல் வரும் போது கூட இந்த பாடலை ரேஷ்மியும் பாடியிருக்கிறார் என்ற வார்த்தை வராதா என்று காத்திருப்பேன். ஆனால் ஒரு முறை கூட வரவில்லை என்று தன்னுடைய வேதனையை கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+