ஜீ தமிழ் சீரியலில் அறிமுகமாகும் அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” பட நடிகை.. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் நடிகர் அஜித்குமார் நடித்த "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தில் நடித்த நடிகை அபிராமி ஸ்பெஷல் கெஸ்ட் ஆக அறிமுகமாகி இருக்கிறார். அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு சில நடிகை நடிகைகள் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தாலும் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதில் ஒருவர் தான் அபிராமி. இவர் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைத்த பெயரும் புகழையும் விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விட்டார்.

அதிலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் அபிராமி கலந்து கொண்ட போது 57வது நாளில் வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு இருந்தார். அதுபோல சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். அதுபோல ஜீ தமிழில் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். சமீபத்தில் அதிகமான திரைப்படங்களில் அபிராமி நடிக்கவில்லை. ஆனால் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் ஜீ தமிழில் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வைரல் ஆகியிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக வைஷ்ணவி மற்றும் அருண் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சீரியல் தொடங்கப்பட்டிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் கதாநாயகி வீராவிற்க்கும் கதாநாயகன் மாறனுக்கும் கல்யாணம் நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் வீராவின் தோழியாக சூர்யா கேரக்டரில் அபிராமி அறிமுகம் ஆகி இருக்கிறார். சூர்யா மாறனுடன் வீராவை சேர்த்து வைப்பாரா அல்லது மாறனின் காதலை தெரிந்து அதைப் பிரிக்க நினைப்பாரா? என்ற கேள்வியோடு ப்ரோமோ இருக்கையில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications